இயற்கை உணவின் பயன்கள் (Benefits of natural food)

உணவே மருந்து, மருந்தே உணவு!

நீரை உண். உணவைக் குடி. வேகாப் பண்டம் வைட்டமின் நிறைந்தது. இளநீர் இனிய நீர். பதப்படுத்திய உணவு, பயனற்ற உணவு.உண்ண வாழுவோம்.வாழ இயற்கை உணவு (Benefits of natural food) உண்போம்.

கனிகள், பிணிகளைப் போக்கும். சமைக்காத உணவு, சத்துள்ள உணவு. உண்ணாநோன்பே உயரிய மருந்து. பச்சை உணவு பாதுகாக்கும் உணவு.

இவை நம் முன்னோர் நமக்கு அறிவுறுத்தியவை.

benefits of natural food,natural food,annaimadi.com,healthy food

இப்படி இயற்கை உணவின் இனிய பயன்களைச் (Benefits of natural food) சொல்லிக்கொண்டே போகலாம். செய்வது என்பது கடினம் தான்.இவற்றை கடைப்பிடித்து வாழ்ந்தாலே போதும்.எந்த நோயும் எம்மை அணுகாது.முடிந்தவற்றை முயற்சிப்போம்.

குறைந்தபட்சம் ஒருநாளில் ஒருவேளை இயற்கை உணவு உட்கொள்ளலாம்.காலை உணவாக எடுத்தால் மிகவும் சுலபம்.நேரமும் மிச்சம்.

அல்லது வாரம் ஒருநாள் இயற்கைஉணவு  உண்பது  என்று வைத்துக் கொள்ளலாம். ஏதோ  ஒருவகையில் இயற்கையுணவின் பலனைப் பெற்று  உங்கள் ஆரோக்கியத்தைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

தனி மனிதர் நலமும், பொதுநலமும் இயற்கை உணவில் இணைந்து கிடைக்கிறது.

மனிதருக்கு நோய், நொடிகள் இல்லை.நோய் ஒன்றே, வழியும் ஒன்றே; அதுதான் இயற்கை உணவு வழி. நோய்கள் பலப்பல அல்ல. எந்த மருத்துவத்திலும் குணம் கிடைக்காத எல்லா வகையான நோய்களும், ஒட்டுமொத்தமாக இயற்கை உணவுக்கு மாறுவதன் மூலம் – சமைத்த உணவைத் துறப்பதன் மூலம் மறைந்து குணம் பெற்று, உடலும் உள்ளமும் ஆரோக்கிய ஆனந்தநிலை பெறுகிறது.

benefits of natural food,natural food,annaimadi.com,healthy food

அறுகுணம் (காமம், குரோதம், மோகம், லோகம், சினம், மாச்சரியம்) சீரமைகின்றது. இதனால், உலகில் நல் விளைவுகள்தான் நிகழும். தீய விளைவுகள் ஏற்படாது.

உணவை சமைக்கும்போது உற்பத்தியாகும் கார்பன்-டை-ஆக்ஸைடு, காற்று மண்டலத்தில் கலக்க வாய்ப்பில்லை. மேலும், சமைத்த உணவு உயிரற்ற உணவு. உயிரற்ற சமைத்த உணவில் முழுவதும் நாம் வாழும்போது, நமது உடலையும் உயிரற்றதாக ஆகிறது. இயற்கை உணவு உயிருள்ள உணவு. உயிருள்ள இயற்கை உணவில் குறைந்தபட்சம் பெரும்பாலும் வாழும்போது, நமது உடலுக்கும் உயிரை ஊட்டுகின்றது.

இயற்கை உணவில் வாழும்போது, வெட்டுக்காயங்கள் மற்றும் புண்களில் சீழ் வைப்பதில்லை.வலி ஏற்படுவதில்லை.மேலும் எவ்வித மருந்தின் அவசியமும் இல்லாது, மருந்தைவிட இயற்கை உணவு அதிகபட்சம் குணப்படுத்துகின்றது.

benefits of natural food,annaimadi.com,rich in vitamin

குழந்தைப்பேறு இல்லாதவர்களும் இயற்கை உணவுக்கு மாறுவதன் மூலம் குழந்தைப்பேறு கிடைக்கிறது.பிறக்கும் குழந்தைக்கு ஆரோக்கியமான நிறைவான தாய்ப்பால் கிடைக்க வழி ஏற்படுகின்றது.

இயற்கை உணவும் சமைத்த உணவும் (Benefits of natural food)

தேங்காயும் பழங்களுமே மனிதனின் தலையாய ஒப்பற்ற உணவு. இயற்கை உணவு வாழ்வில் என்றும் இன்பமே. துன்பமில்லை. என்றும் இளமையாக வலுவாக வாழ வழிவகுக்கிறது அது. உண்மையான இறை பக்தியை வளர்க்கிறது.மூட நம்பிக்கைகள் மறைந்துபோகின்றன.எளிமை ஓங்கும். ஆடம்பரம் மறையும். பகட்டான வாழ்வு பறந்துபோகும். இயற்கை உணவில் வாழும்போது, நமது உடல் பனை மரக் கட்டைபோல் வைரமாகி, உடல் உறுதி பெறுகின்றது.

natural food,annaimadi.com,healthy food

இயற்கை உணவு காதலை வளர்க்கும்.இயற்கை உணவின் விளைவு, மெய்ஞான வளர்ச்சி.மெய்ஞான வளர்ச்சி ஆக்க வளர்ச்சி. பசியோடு உண்ண உட்காருங்கள். பசியோடு உண்டு எழுந்திருங்கள். இயற்கை வாழ்வே இறை வாழ்வு. பழம் பலம் தரும். சோறு சோர்வு தரும்.

சமையல் உணவில் உடல், உள்ளம் அழிவு வளர்ச்சி பெறுகின்றது. இயற்கை உணவில் உடல், உள்ளம் ஆக்க வளர்ச்சி பெறுகின்றன. இயற்கையே இறைவன். இயற்கையை ஓம்புதலே இறைவழிபாடு. மருத்துவ உலகம், உடலுறுப்புகளை சீர்கேடு அடையச் செய்து, இறப்பை ஏற்படுத்துகின்றது.

இயற்கை உணவு, முதுமையில் இளமையைத் தருகின்றது. சமைத்த உணவு, இளமையில் முதுமையைத் தருகின்றது.

natural food,annaimadi.com,rich in vitamin

‘பல மனிதர்கள் நோய்களால் மடிவதில்லை; தாம் உண்ட மருந்துகளால் தான் மடிகிறார்கள்’ – இது, ஜப்பான் நாட்டுப் பழமொழி.
மனிதரை நோயாளியாக ஆக்குவதும், இறப்பை விரைவில் வரவழைப்பதும் தவறான சமைத்த உணவுதான்.

நோயிலிருந்து விடுவிப்பதும், இறப்பை தள்ளிப்போடுவதும் சரியான இயற்கை உணவுதான். எத்தகைய மருத்துவமோ, மருந்தோ அன்று!

‘உண்ணும் உணவுகளெல்லாம்
இயற்கை உணவுகளாகட்டும்
கேட்கும் ஒலிகளெல்லாம்
இயற்கை ஒலிகளாகட்டும்
தோயும் ஒளிகளெல்லாம்
இயற்கை ஒளிகளாகட்டும்
காணும் காட்சிகளெல்லாம்
இயற்கை காட்சிகளாகட்டும்
வாழும் வாழ்வுகளெல்லாம்
இயற்கை வாழ்வுகளாகட்டும்’!
‘பஞ்சபூத நிறை சுகத்தால்
பசித்தபோது பழந் தேங்காய்
கொஞ்சுங் காற்று வெளியிலே
கொட்ட வேர்வை வேலை செயல்
நெஞ்சு நிரம்ப மூச்சிழுத்தல்
நீரிலாடித் தியானித்தல்
நஞ்சு நீங்கப் பட்டினியால்
நல்லியற்கை வாழ்வோமே’

என்கிறார் யோகி சுத்தானந்த பாரதி.

வளர்வோம் இயற்கை உணவில்!
வாழ்வோம் இயற்கை வாழ்வில்!!
அடைவோம் மரணமிலாப் பெருவாழ்வை!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *