இளமையும் வலிமையும் அள்ளி தரும் அற்புத ஆசனம் (Benefits of Pavanamukthasana)
‘பவன’ என்றால் பிராணவாயு ‘முக்த’ என்றால் விடுவிப்பது. ‘ஆசனம் என்றால் இருக்கை உடலில் பிராண வாயு செல்லும் பாதைகளில் ஏற்படும் அடைப்பை நீக்கி பிராண வாயுவை மிகச் செய்கின்றது பவன முக்தாசனம் (Benefits of Pavanamukthasana).
பவன முக்தாசனம் செய்வது எப்படி?
பகுதி 1 கால் விரல்களை வளைத்தல்
தரை விரிப்பின் மேல் கால்கள் இரண்டையும் நீட்டி வைத்து (தண்டாசனத்தில்) அமரவும். மூச்சை வெளியே விட்டபடி இருகால் விரல்களையும் முன் நோக்கி நிதானமாக வளைக்கவும். மூச்சை உள்ளுக்கு இழுத்தபடி நிதானமாக இரு கால் விரல்களையும் பின்னோக்கி வளைக்கவும்.
இது ஒரு சுற்று பயிற்சி ஆகும். இப்படி 10 தரம் செய்யவும்.
பவன முக்தாசனத்தில் வரும் ஒவ்வொரு பயிற்சியிலும் உடலின் எந்த பகுதிக்கு பயிற்சி அளிக்கப்படுகிறதோ அந்த பகுதியை மனதால் நினைத்து செய்யவும்.
பகுதி 2 குதிக்காலை வளைத்தல்
தண்டாசனத்தில் அமரவும். மூச்சை வெளியே விட்டபடி இருபாதங்களையும் நிதானமாக முன்னோக்கி வளைக்கவும்.
மூச்சை உள்ளுக்கு இழுத்தபடி இருபாதத்தையும் பின்நோக்கி வளைக்கவும். இது ஒரு சுற்று ஆகும். இப்படி 10 தரம்பயிற்சி செய்யவும்.
பகுதி 3 குதிக்காலை சுழற்றுதல்
தண்டாசனத்தில் அமரவும். நிதானமாக இரு பாதங்களையும் இடமிருந்து வலமாக 10 முறை சுழற்றவும். பிறகு இரு பாதங்களையும் வலமிருந்து இடமாக 10 முறை சுழற்றவும்.
இப்பயிற்சியில் கீழ்நோக்கி கொண்டு போகும் போது மூச்சை வெளியே விடவும். பாதத்தை நேராக கொண்டு வரும்போது மூச்சை உள்ளுக்கு இழுக்கவும்.
பகுதி 4 குதிகாலை முன்னுக்கும் பின்னுக்குமாக சுழற்றுதல்
தண்டாசனத்தில் அமரவும். வலது முழங்காலை மடக்கி குதிகாலை நீட்டி வைத்திருக்கும் இடது காலின் தொடைக்கு வெளியே வைக்கவும்.
வலது கை விரல்களால் வலது கால் மேல்பகுதியை பிடிக்கவும். நிதானமாக பாதத்தை இடமிருந்து வலமாக 10 முறையும், வலமிருந்து இடமாக 10 முறையும் சுழற்றவும்.
பிறகு இடது காலை மடக்கி மேல் கண்ட முறைப்படி செய்யவும். இப்பயிற்சியில் பாதத்தை மேலே தூக்கும் போது மூச்சை உள்ளுக்கு இழுக்கவும். கீழே இறக்கும்போது மூச்சை வெளியே விடவும்.
பெண்களின் இளமைக்கும், ஆண்களின் வலிமைக்கும் அற்புத ஆற்றல் தருகிறது பவன முக்தாசனம். இந்த ஆசனம் செய்முறையை அறிந்து கொள்ளலாம்.
பவன முக்தாசனம் செய்வதால் பெறும் நன்மைகள் (Benefits of Pavanamukthasana)
பெண்களின் இளமைக்கும், ஆண்களின் வலிமைக்கும் அற்புத ஆற்றல் தருகிறது பவன முக்தாசனம். உலகெங்கிலும் உள்ள ஆண், பெண் அனைவரும் எப்போதும் இளமையுடன் வாழ வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள்.
உடலில் சோர்வு, மனதிலும் சோர்வு. ஆக இளமை என்பது முடியில் டை அடிப்பது, விலையுயர்ந்த ஆடை ஆபரணம் அணிவதில் இல்லை என்பதைப் புரிந்துக்கொள்ள வேண்டும்.
யாருடைய உடல் உள் உறுப்புக்கள் குறிப்பாக சிறுகுடல், பெருங்குடல் சுத்தமாக உள்ளதோ, வாயு கோளாறு இல்லாமல் உள்ளதோ, உடல் எடை அதிகமாகாமல் உள்ளதோ, இருதயம், நுரையீரல் சிறப்பாக இயங்குகின்றதோ அவர்கள் தான் இளமையோடு இருக்கின்றார்கள் என்று அர்த்தம்.
சிறுவயதில் உடல் உள் உறுப்புக்கள் சிறப்பாக இயங்கும். இதுவே இளமை. குழந்தை பருவத்தில் குழந்தை சுறுசுறுப்பாக துள்ளி குதித்து விளையாடும்.
அதே விளையாட்டு, சுறுசுறுப்பு மனதில் உற்சாகம் எண்பது வயதிலும் இருக்க வேண்டும். இதுவே இளமை. உடல் உள் உறுப்பும், மனதும் என்றும் இளமையாக இருக்க ஒரே வழி யோகாசனம் ஆகும்.
பல வகையான யோகாசனங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு ஆசனத்திற்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு. இந்த பவன முக்தாசனத்திற்கு மிக அற்புதமான சிறப்புக்கள்(Benefits of Pavanamukthasana) உள்ளன.
பெண்களுக்கு அற்புத பலன்களை அள்ளித்தரும் சிறந்த ஆசனம்
பொதுவாக பெண்கள் திருமணத்திற்கு முன்பு இளமையாக இருப்பார்கள். குழந்தை பிறந்த பின்பு அடிவயிறு பெரிதாகி வயதான தோற்றம் ஏற்படும்.
அவர்கள் எந்த உடற்பயிற்சியும் செய்யாததால் வயிற்று உள் உறுப்புகள் பாதிப்பு ஏற்படும். என்ன செய்வது என்று தெரியாமல் பல ஆங்கில மாத்திரைகளை உடல் எடைக் குறைப்புக்கு உட்கொண்டு அவதியுறுகின்றனர்.
அவர்கள் பவன முக்தாசனத்தை செய்வதால், பிரசவித்த பெண்களின் அடிவயிற்று பெருக்கத்தை குறைத்து, வயிற்று உள் உறுப்புக்கள் மிகச் சிறப்பாக இயங்கும்.
நரம்பு மண்டலம் சிறப்பாக இயங்கும். அதனால் இளமையுடன்,அழகாக, சுறுசுறுப்பாக வாழ முடியும்.
வாயு கோளாறு நீங்கும்
மனித உடலில் பிராணன், அபாணன், வியாணன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிரிகரன், தேவதத்தன், தனஞ்செயன் என பத்து வாயுக்கள் செயல்படுகின்றது. இந்த பத்து வாயுக்களும் அதனதன் சமமான விகிதத்தில் செயல்பட்டால், மனித உடலில் வாயு சம்மந்தமான பிரச்சனைகள் வராது. என்றும் இளமையுடன் வாழலாம். சுறுசுறுப்பாகத் திகழலாம்.
ஆனால் எல்லா மனிதர்களுக்குள்ளும் அவர்கள் உண்கின்ற உணவின் தன்மைக்கேற்ப, எண்ணும் எண்ணத்திற்கேற்ப உடலில் வாயுக்கள் சமமாக இயங்காது. அதனால் அஜீரணக் கேளாறு ஏற் படும்.
மற்ற உள் உறுப்புக்கள் பாதிக்கப்படும். நீங்கள் பவன முக்தாசனம் செய்தால் வாயுக்கள் அனைத்தும் சிறப்பாக இயங்கும். அதனால் உள் உறுப்புக்கள் சிறப்பாக இயங்கும். என்றும் இளமையுடன் வாழலாம்.
வயிற்று புற்று நோய் நீக்கும்
பலர் வயிற்றில் புற்றுநோய் வந்து அவதிப் படுகின்றனர். குடலில் புற்றுநோய், கர்ப்பப்பையில் புற்றுநோய் வந்து அல்லல் படுகின்றனர். இதற்குக் காரணம் வயிற்றில் அதிக அமிலம் சுரப்பது தான். அதனால் தான் அல்சர், புற்றுநோய் வருகின்றது. பவன முக்தாசனம் வயிற்றில் சுரக்கும் அதிக அமிலத்தைக் கட்டுப்படுத்துகின்றது. அதனால் அல்சர், புற்றுநோய் வராது.
மலச்சிக்கல் நீங்கும்
மனித உடலில் கழிவுகள் ஒழுங்காக வெளியேறாவிட்டால் மனிதனுக்கு பல வகையான வியாதிகள் வருகின்றது. நிறைய மனிதர்கள் மலச்சிக்கலினால் அவதிப்படுகின்றனர். பவனமுக்தாசனம் அடிவயிற்றுப் பகுதி, மலக்குடல் பகுதி அமுக்கப்படுவதால் மலச்சிக்கல் நீங்க வழிவகை செய்கின்றது.
மலச்சிக்கல் உள்ளவர்கள் பயிற்சி செய்தால் மலச்சிக்கல் நீங்கும். மலச்சிக்கல் இல்லாதவர்கள் பயிற்சி செய்தால் எவ்வளவு வயதானாலும், மலச்சிக்கலில் சிக்காமல் சிறப்பாக வாழலாம்.
மாரடைப்பு நோய் வராது
பவன முக்தாசனம் நுரையீரலுக்கு வலிமையை ஊட்டி அதன் செயல்பாடுகளை அதிகரிக்கின்றது. அதனால் ராஜ உறுப்புகளில் ஒன்றான இருதயம் பாதுகாக்கப்படுகின்றது.
மாரடைப்பு வராமல் தடுப்பது மட்டுமின்றி நமது இதயம் சிறப்பாக இயங்க வழி வகை செய்கின்றது.
தற்போது மிகச் சிறிய வயதிலேயே இதயக்கோளாறு, இதய வலியால் மக்கள் உயிர் பிரியும் அவல நிலை உள்ளது. அனைவரும் பவனமுக்தாசனம் செய்து இதயத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
பவன முக்தாசனத்தின் ஏனைய பலன்கள் (Benefits of Pavanamukthasana)
மூல வியாதி நீங்கும். ரத்தக் கோளாறுகள் நீங்கும். குடல் வால்வுக் கோளாறுகள் நீங்கும். பெண்களுக்கு கருப்பை கோளாறுகள் நீங்கும். அதிக வயிற்றுத்தசையை குறைக்கின்றது.
இவ்வளவு பலன்தரும் பவனமுக்தாசனத்தை எப்படிச் செய்வது எனபார்ப்போம்.
பவன முக்தாசனம் செயல் முறை
- தரையில் விரிப்பில் நேராகப் படுத்துக் கொள்ளவும். வலதுகால் முட்டிப் பகுதியில் இருகைகளாலும் பிடித்துக் கொண்டு, வயிற்றை நோக்கி அழுத்தவும்.
- இடது காலை மடிக்காமல் தரையில் நேராக வைத்து தலையை உயாத்தி எழுந்து முகவாய் கட்டையை வலதுகால் முட்டியை நோக்கிக் கொண்டு வந்து சேர்க்கவும்.
- மூச்சை இழுத்துக் கொண்டு வந்து மூச்சடக்கி 10 முதல் 15 விநாடிகள் இருந்துவிட்டு பின் விரிப்பின் மீது படுக்கவும்.
- பின் காலை மாற்றி செய்யவும். வலது, இடதுகால் என மாற்றி மூன்று முறைகள் செய்து பின் ஒரு நிமிடம் ஓய்வெடுக்கவும்.
- இந்த பவனமுக்தாசனம் செய்வதால் எவ்வளவு உடல் உள் உறுப்புகள் பலன் பெறுகின்றன பார்த்தீர்களா! என்றும் இளமையாக வாழவும், சுறுசுறுப்பாக திகழவும், இராஜ உறுப்பான இதயத்தை பாதுகாக்கவும் உதவுகின்றது.
பெண்களுக்கு அதிக பலன் கிடைக்கின்றது. வாயு கோளாறு, மலச்சிக்கல் நீங்குகின்றது. இந்த ஆசனத்தை மட்டும் பயிற்சி செய்தாலே அவ்வளவு அற்புத பலன்களை அடையலாம்.
பசித்தால் மட்டும் சாப்பிடுங்கள். பசி இல்லையெனில் சாப்பிட வேண்டாம். காலை, மதியம் சாப்பிட்டு இரவு சாப்பாட்டை மாலை 6.00 மணிக்குள் மிகக் குறைவாக எடுத்துக் கொண்டால் உடலில் நோயே இருக்காது.
குறிப்பாக வாயு தொந்தரவு, வயிற்றுப் பிரச்சனை நீங்கும்.
மனித ஆரோக்கியத்திற்கு யோகாசனம் ஒரு கண், உண்ணும் உணவு மற்றொரு கண். யோகாசனம் செய்பவர்கள் உணவில் சரியான முறையைக் கையாண்டால் தான் பலன் நிச்சயம் கைகூடும்.