சின்ன வெங்காயத்தின் சிறந்த பயன்கள் (Best benefits of small onions)

சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் சின்ன வெங்காயம் ஏராளமான பயன்களைத் (Best benefits of small onions) தருகின்றது.வெங்காயத்தை வதக்கியோ அல்லது வேகவைத்தோ எப்படி வேண்டும் என்றாலும் சாப்பிடலாம். ஆனால் பச்சையாக சாப்பிட்டால் அதில் இருக்கும் ஊட்டச்சத்து முழுமையாகக் கிடைக்கும்.

சிறுநீரகப் பிரச்சினை முதல் உடல் எடை குறைவது, கொழுப்பைக் குறைப்பது வரை அத்தனை பிரச்சனைகளுக்கும் வெங்காயம் மிகச் சிறந்த தீர்வாக இருக்கும்.

 வெங்காயம் உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது. வெங்காயத்தில் அவ்வளவாக காரம் கிடையாது. வெங்காயத்தை பச்சையாக கடித்து சாப்பிட்டால் வாய் புண் மற்றும் கண்வலி குணமாகும். வெங்காயத்தில் அதிகளவு உள்ள விற்றமின் பி தான் இதற்கு காரணம்.

நீர்ச்சத்து, புரதம் ,கார்போஹைடிரேட் , கல்சியமும், பாஸ்பரஸ், இரும்பு சத்தும், விற்றமின் பி ,விற்றமின் சி , கொழுப்புசத்து , தாது உப்புகள், நார்ச்சத்து முதலியவையும் உள்ளன.

சின்ன வெங்காயத்தின் சிறந்த பயன்கள் (Best benefits of small onions) வீடியோவை பார்த்து அறிந்து கொள்வோம்.

 பச்சையாக வெங்காயம் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் (Best benefits of small onions)

வெங்காயத்தில்உள்ள இரும்பு சத்து உடலில் எளிதாக கலக்கும் தன்மை கொண்டது.

இரத்த சோகை உள்ளவர்கள் தினமும் வெங்காயத்தை சாப்பிட்டால் இரத்த சோகை பிரச்சனைகள் குணமாகும்.

அதோடு தலைவலி, முழங்கால் வலி, பார்வை மங்குதல் போன்றவை குணமாகும்.

சளி பிரச்சனை உள்ளவர்கள் தினமும் வெங்காயம் சாப்பிட்டு வந்தால் சளி தொல்லை நீங்கும்.

வெட்டுக்காயம் உள்ள இடத்தில் வெங்காயத்தை வதக்கி ஒரு துண்டுகள் காயத்தில் வைத்து வந்தால் காயங்கள் விரைவில் குணமாகும்.

தலைமுடி பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு

தலைமுடி உதிர்வு, முடி உடைத்தல்,இளநரை ,பொடுகு, போன்ற பிரச்சினைகளுக்கு வெங்காயம் சிறந்தது.
வெள்ளை வெங்காயம், சிவப்பு வெங்காயம், சாம்பார் வெங்காயம் (சின்ன வெங்காயம்) மூன்றிலுமே ஒரே மாதிரியான மருத்துவக் குணங்கள் உள்ளன.

குறிப்பாக, சின்ன வெங்காயத்தில் சல்ஃபர் (Sulfur) மற்றும் கல்சியத்தின் அளவு அதிகம். இவை முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது.

​இந்த வெங்காயத்தை அரைத்து  தலைமுடியில் அப்ளை செய்து 30  நிமிடங்கள் ஊறவிட்டு சீயக்காய் கொண்டு அலசினால் தலைமுடி உதிர்வுப் பிரச்சினை நல்ல தீர்வு வரும்.

நுனி முடி பிளவுபடாமல் இருப்பதற்கும் சீரான ரத்த ஓட்டம் அவசியம். வெங்காயத்தில் உள்ள சல்ஃபர், நம் ரத்த ஓட்டத்தைச் சீர்செய்து,  முடியின் வேர்களுக்கு உறுதியை அளித்து, முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது.

மேலும் வெங்காயம் சிறந்த ஆன்டிபயாடிக்காகவும் செயல்படுகிறது.  

 

பல்வலி சரியாக

சின்ன வெங்காயம் பற்களில் பாக்டீரியாக்கள் தங்குவதை அழித்து பற்களை சுத்தமாக வைத்துக் கொள்ளும்.

பல்வலி உள்ளவர்கள் வெங்காயத்தை ஒரு துண்டு எடுத்து பல்வலி உள்ள இடத்தில் வைத்தால் பல்வலி காணாமல் போய்விடும். குறிப்பாக, இரவு துங்கும் போது வைத்துக் கொண்டு படுத்தால் சிரமம் இல்லாமல் நீண்ட நேரம் வைத்திருக்க முடியும்.

சொத்தைப் பல் உள்ள இடத்தில் இதை செய்து வந்தால், சொத்தைப் பல்லுக்குள் இருக்கும் புழுக்கள் கூட வெளியேறிவிடும்.

இதய பிரச்சனைகள் நீங்க

இதயத்திலுள்ள ரத்த நாளங்களில் இரத்தம் உறைவு ஏற்படுவதால் நெஞ்சு வலி ஏற்படும். பக்க வாதம் கூட அதனால் ஏற்பட கூடும் . தினமும் வெங்காயத்தைப் பச்சையாகச் சாப்பிட்டு வந்தால் இரத்தம் உறையும் பிரச்சினை சரியாகும். நெஞ்சுவலியும் சரியாகிவிடும்.

இதய நோய் உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த மருந்தாக சின்ன வெங்காயம் இருக்கும்.

​​

 ஜலதோசம் குணமாக

குளிர்காலத்தில் ஏற்படும் ஜலதோசம், இருமல், காய்ச்சல், நெஞ்சி சளி போன்ற பிரச்சனைகள் குணமாக சின்ன வெங்காயம்  பெரிதும் உதவுகின்றது. வெங்காய சாறுடன்,தேன்  சம அளவு கலந்து சாப்பிட வேண்டும்.

இவ்வாறு சாப்பிடுவதால் இருமல், சளி பிரச்சனைகள் குணமாகும். குழந்தைகளுக்கும் இதைக் கொடுக்கலாம்.

சுவாசப்பை சுத்தமாக

புகைப் பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் தினமும் அரை டீஸ்பூன் வெங்காயம் சாறினை காலை, மதியம், மாலை, இரவு என நான்கு வேளை சாப்பிட்டு வர சுவாசப்பைகள் பலம் பெறும்.

வெங்காயத்தை தினமும் சாப்பிட்டு வாந்தால் இருமல், இரத்த வாந்தி, ஜலதோசம் மற்றும் சளி போன்ற பிரச்சினைகள் குணமாகும். இதன்மூலம் நுரையீரலில் உள்ள அழுக்குகள் மற்றும் கழிவுகள் வெளியேறும்.

Leave a Reply

Your email address will not be published.