சர்க்கரைநோய்க்கு ஏற்ற காய்கறிகள் (Best vegetables for diabetes)

நோய் வந்தபின் அவஸ்தைப்படுவதைவிட, வரும் முன் காப்பதுதான் புத்திசாலித்தனம். நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள், எந்த காய்கறிகளை (Best vegetables for diabetes) இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த முடியும்.

உடல் உழைப்புக் குறைவு, தவறான உணவுப் பழக்கவழக்கம், உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

ஒரு காலத்தில் 40-50 வயதில் வந்த சர்க்கரை நோய் இன்று 20 வயதினருக்குக்கூட வர ஆரம்பித்துவிட்டது என்பதே கசப்பான உண்மை.

அதிக நார்ச்சத்து உள்ள காய்கறிகளான பட்டாணி, பீன்ஸ், ப்ராக்கோலி மற்றும் கீரைகளை  உணவோடு சேர்க்க வேண்டும். இந்த வகையான காய்கறிகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்க உதவும்.

சர்க்கரை நோயைக் குணப்படுத்தும் காய்கறிகள் (Best vegetables for diabetes)

கத்தரிப் பிஞ்சு, சுரைக்காய், முட்டைகோஸ், முள்ளங்கி, வெண்டைக்காய், கோவைக்காய், பீன்ஸ், சாம்பல் பூசணி, புடலங்காய், வாழைத்தண்டு, காலிஃப்ளவர், வெண்பூசணி, பாகற்காய், வாழைப்பூ, காராமணி, கொத்தவரங்காய், வெங்காயம், பீர்க்கங்காய், வாழைப் பிஞ்சு, நூல்கோல், முருங்கைக்காய், வெள்ளரிக் காய், சௌசௌ இவற்றுடன் கறிவேப்பிலை, இஞ்சி, கொத்த மல்லி, புதினா சேர்த்துப் பச்சடி யாக தினமும் உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரை நோயின் பாதிப்பிலிருந்து எளிதில் மீளலாம்.

Vegetables for diabetes,Vegetables for diabetes in tamil,annaimadi.com,food for diabetes,besy vegetables to control blood sugar,to cure diabetes,நீரிழிவு நோய்க்கு உகந்த காய்கறிகள்,சர்க்கரையைக் கட்டுபடுத்த,சர்க்கரைநோய்க்கு உணவு,அன்னைமடி,vegetables & diabetes,best vegetabless for diabetes,vegetables for dibetes control,bitter vegetables for diabetes,vegetables for diabetes diet

நோயைக் கட்டுப்படுத்தும் கீரைகள் (Best vegetables for diabetes)

கறிவேப்பிலை, தூதுவளைக் கீரை, முசுமுசுக்கைக் கீரை, வெந்தயக் கீரை, துத்திக் கீரை, முருங்கைக் கீரை, மணத் தக்காளிக் கீரை, அகத்திக் கீரை, சிறுகீரை, அரைக்கீரை, வல்லாரைக்கீரை, கொத்தமல்லிக் கீரை.

இவற்றில் ஏதாவது ஒன்றை சூப் செய்து, தினமும் ஒரு டம்ளர் வீதம் காலை அல்லது மாலை ஒருவேளை சாப்பிட்டு வரலாம் அல்லது இவற்றில் ஏதாவது ஒன்றை எதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால், சர்க்கரைநோய் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

பாகற்காய் (Best vegetables for diabetes)

நீரிழிவு நோயாளிகளுக்கு பாகற்காய் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். ஏனெனில் இந்த பாகற்காய் ஜூஸை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.

பாகற்காய் நன்மைகள் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். ஏனெனில் இதில் கீரையை விட அதிக அளவில் கல்சியம் சத்துக்களும், இரும்புச்சத்து மற்றும் போதுமான அளவு பீட்டா கரோட்டீனும் உள்ளது. சொல்லப்போனால், இதை சிறந்த உணவு என்பதை விட, சிறந்த மருந்து என்று சொல்லலாம்.

பாகற்காயை நன்கு காயவைத்துப் பொடி செய்து காலை, இரவு என்று இரண்டு வேளை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு, கண்டிப்பாகச் சர்க்கரை நோய் முழுமையாகக் குறையும்.

வெந்தயக் கீரை(Best vegetables for diabetes)

கீரை வகைகளில் வெந்தயக் கீரையை சாப்பிட்டு வந்தால், நீரிழிவைத் தடுக்கலாம். இந்தக் கீரையில் உள்ள லேசான கசப்பு சுவையானது, இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை குறைக்கிறது.

Vegetables for diabetes,Vegetables for diabetes in tamil,annaimadi.com,food for diabetes,besy vegetables to control blood sugar,to cure diabetes,நீரிழிவு நோய்க்கு உகந்த காய்கறிகள்,சர்க்கரையைக் கட்டுபடுத்த,சர்க்கரைநோய்க்கு உணவு,அன்னைமடி,vegetables & diabetes,best vegetabless for diabetes,vegetables for dibetes control,bitter vegetables for diabetes,vegetables for diabetes diet

வெண்டைக்காய் (Best vegetables for diabetes)

வெண்டைக்காயை நறுக்கும் போது வரும் ஒருவித பசை போன்ற நீர்மம், நீரிழிவைக் கட்டுப்படுத்தும். அதற்கு இரவில் தூங்கும் போது வெண்டைக்காயை இரண்டாக கீறி, ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து, அதிகாலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

சுரைக்காய்

இன்சுலின் குறைபாட்டினால் வரும் நீரிழிவை, சுரைக்காயின் சாற்றை எடுத்து, காலையில் குடித்து வர சரியாகும்.சுரைக்காயை பருப்பு சேர்த்த பால்கறி சுவையாக இருக்கும்.

Vegetables for diabetes,Vegetables for diabetes in tamil,annaimadi.com,food for diabetes,besy vegetables to control blood sugar,to cure diabetes,நீரிழிவு நோய்க்கு உகந்த காய்கறிகள்,சர்க்கரையைக் கட்டுபடுத்த,சர்க்கரைநோய்க்கு உணவு,அன்னைமடி,vegetables & diabetes,best vegetabless for diabetes,vegetables for dibetes control,bitter vegetables for diabetes,vegetables for diabetes diet

பிரெஞ்சு பீன்ஸ்

பிரெஞ்சு பீன்ஸில் உள்ள ஊட்டச்சத்துக்கள், உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்கிறது. எனவே இதனை நீரிழிவு உள்ளவர்கள் உண்டால், நீரிழிவைத் தடுக்கலாம்.

பீன்ஸ் பீன்ஸில் புரோட்டீன் சொல்லமுடியாத அளவு நிறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், பொட்டாசியம், மக்னீசியம் அதிகம் உள்ளது. இந்த சத்துக்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் முக்கியமானது.

ப்ராக்கோலி

ப்ராக்கோலியில் ஸ்டார்ச் இல்லை. இதில் ஆரஞ்சு பழத்தை விட அதிகளவு விற்றமின் சி உள்ளது மற்றும் ஏராளமான அளவில் பீட்டா-கரோட்டீன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டும் உள்ளது.
 
இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்துமே நீரிழிவு நோயாளிகளுக்கு தேவையான சத்துக்களே ஆகும்.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த, ஸ்டார்ச் இல்லாத காய்கறிகளுள் ஒன்று.
 
இந்த அடர் பச்சை நிற காய்கறியை சாப்பிட்டால், கண் பார்வை மேம்படும்.
பற்கள், எலும்புகள், சருமம் போன்றவையும் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் இந்த காய்கறியில் ஃபோலேட், நார்ச்சத்து போன்றவை அதிகமாகவும், கலோரிகளும், கார்போஹைட்ரேட்டுகளும் குறைவான அளவிலும் உள்ளது.

தக்காளி

தக்காளியில் விற்றமின் சி, இரும்புச் சத்து மற்றம் ஜில்க் என்னும் கொழுப்பும் நிறைந்துள்ளது. அதற்காக தக்காளியை காரமாக சமைத்து சாப்பிடக்கூடாது.அதனை சூப், ரோஸ்ட் என்று செய்து சாப்பிட வேண்டும்.
உப்பு மற்றும் மிளகு கலந்த தக்காளி சாற்றை, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.

மஞ்சள் பூசணிக்காய் (Best vegetables for diabetes)

மஞ்சள் பூசணி இனிப்பாக இருப்பதால், இதனை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாது என்ற எண்ணம் உள்ளது. ஆனால் உண்மையில் அந்த பூசணியில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக இருக்கிறது.
இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற ஒரு காய்கறி தான்.எனவே இதனை அவ்வப்போது சிறிது சாப்பிட வேண்டும்.

Vegetables for diabetes,Vegetables for diabetes in tamil,annaimadi.com,food for diabetes,besy vegetables to control blood sugar,to cure diabetes,நீரிழிவு நோய்க்கு உகந்த காய்கறிகள்,சர்க்கரையைக் கட்டுபடுத்த,சர்க்கரைநோய்க்கு உணவு,அன்னைமடி,vegetables & diabetes,best vegetabless for diabetes,vegetables for dibetes control,bitter vegetables for diabetes,vegetables for diabetes diet

அஸ்பாரகஸ் (Asperges)

அஸ்பாரகஸ் தோற்றத்தில் தான் ஒரு மாதிரி உள்ளதே தவிர, சமைத்தால் இதன் சுவை அற்புதமாக இருக்கும். இந்த காய்கறியில் ஸ்டார்ச் இல்லை மற்றும் இதில் 5 கிராம் கார்போஹைட்ரேட், 20 கலோரிகள் மற்றும் 2 கிராம் டயட்டரி நார்ச்சத்து உள்ளது.
முக்கியமாக இதில் க்ளுட்டாதியோன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் வளமான அளவில் உள்ளதால், இது சர்க்கரை நோய், இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற பலவற்றின் அபாயத்தைத் தடுக்கும்.
அதுவும் அஸ்பாரகஸ் (Best vegetables for diabetes) இரத்த சர்க்கரை அளவை சீரான அளவில் பராமரிக்க உதவுவதோடு, இன்சுலின் உற்பத்தியையும் அதிகரிக்கும்.சூப் வகைகளில் சேர்க்கலாம்.

அவகடோ (Best vegetables for diabetes) 

அவகடோ(Avocado)  பழத்தில் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உள்ளது. இது உடலில் நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரித்து, இதய நோயின் அபாயத்தைக் குறைக்கும்.
இதில் உள்ள வளமான அளவிலான நல்ல கொழுப்புக்கள், டைப்-2 சர்க்கரை நோயின் அபாயத்தை 25% குறைப்பதாக ஆய்வில் தெரிய வந்தது. ஆகவே சர்க்கரை நோயாளிகள் இப்பழத்தை அச்சமின்றி அவகாடோவை அப்படியே சாப்பிடலாம். அல்லது  அவகடோ சலாட்டாகவோ ,குளிர்பானமாகாவோ எடுக்கலாம்.

கரட்

கரட்டை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிடுவது சர்க்கரை நோயாளிக்கு நல்லது. கேரட்டில் விற்றமின் ஏ மற்றும் பீட்டா-கரோட்டீன் அதிகம் உள்ளது. இவை பார்வையை மேம்படுத்தும் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும்.

பூண்டு

உணவின் மணத்தையும், சுவையையும் அதிகரிக்கும் பூண்டு, ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டது. பழங்காலம் முதலாக இது பல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் இது உயர் கொலஸ்ட்ரால், இதய நோய், உயர் இரத்த அழுத்தம், புற்றுநோய் போன்றவற்றை சரிசெய்யப் உதவுகிறது.
இவ்வளவு மருத்துவ குணங்களைக் கொண்ட பூண்டை சர்க்கரை நோயாளிகள் அன்றாட உணவில் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்வதன் மூலம், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

சிவப்பு வெங்காயம் (Best vegetables for diabetes)  

வெங்காயத்தில் நார்ச்சத்து, பொட்டாசியம், ஃபோலேட் போன்றவை அதிகம் உள்ளது.
இவை இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. இதில் உள்ள அதிகளவிலான ப்ளேவோனாய்டுகள், புற்றுநோயைத் தடுப்பதோடு, நாள்பட்ட நோயான ஆஸ்துமா பிரச்சனையையும் தடுக்கும்.
சர்க்கரை நோயாளிகள் பச்சையாக வெங்காயத்தை சேர்த்துக் கொள்வது நல்லது. சாலட் ,சம்பல் செய்யும் போது சிவப்பு வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளுங்கள்.

Vegetables for diabetes,Vegetables for diabetes in tamil,annaimadi.com,food for diabetes,besy vegetables to control blood sugar,to cure diabetes,நீரிழிவு நோய்க்கு உகந்த காய்கறிகள்,சர்க்கரையைக் கட்டுபடுத்த,சர்க்கரைநோய்க்கு உணவு,அன்னைமடி,vegetables & diabetes,best vegetabless for diabetes,vegetables for dibetes control,bitter vegetables for diabetes,vegetables for diabetes diet

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *