புஜங்காசனம் (Benefits of bhujangasana)

புஜங்காசனம்செய்வதனால் வயிற்றில் உள்ள உறுப்புகளும், சுரப்பிகளும் புத்துயிர் பெறும்(Benefits of bhujangasana). இந்த ஆசனம் ரத்த ஓட்டத்தை அதிகமாக்குவதன் மூலம் ,சிறுநீரகம், கல்லீரல், குடல்கள், பிறப்புறுப்பு, கணையம், அட்ரீனல் சுரப்பிகள் போன்ற உறுப்புகளை நல்ல ஆரோக்கிய நிலையில் இருக்க செய்கிறது.

பாம்பு படம் எடுப்பது போல் இந்த ஆசனம் அமைந்துள்ளதால் புஜங்காசனம்  என அழைக்கப்படுகிறது.

பிள்ளைகளும் , இப்போது பெரியவர்கள் போல், ஓய்வில்லாமல் பல  பயிற்சிகள்,வகுப்புகளுக்கு ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

இதனால், பிள்ளைகளும் சிறு வயது முதலே ,புஜங்காசனத்தை  சரியான முறையில் பழகி ,செய்து வருவது அவர்களின் முதுகுப்பகுதி பலம் பெற உதவும்.

பல மணி நேரம் உட்கார்ந்து  குனிந்து வேலை செய்வதால்  கழுத்து வலியும், முதுகு வலியும்  வந்துவிடுகிறது.இப்படியானவர்கள் புஜங்காசனத்தை செய்து வர நாளடைவில் முதுகுவலிகளிலிருந்து விடுபட முடியும்.

புஜங்காசனம் செய்வதற்கான சரியான அறிவுறுத்தல்களை  வீடியோவில் காண்க.

பெண்களுக்கான அற்புத பலன்களை இந்த ஆசனம் தரும். முகுகெலும்பை பலப்படுத்தும்.மலச்சிக்கல் அகலும். முதுகுவலி, இடுப்பு வலி நீங்கும். கொழுப்பினைக் குறைக்கும்.ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். தோள் மற்றும் பின் முதுகிற்கு வலிமையை அளிக்கும்.யோகாசனம் செய்யும் போது பொருத்தமான தளர்வான உடை ( Yoga Pants for Women ) அணிந்திருத்தல் அவசியம்.

புஜங்காசனம் செய்யும் முறை

விரிப்பின் மேல், குப்புறப்படுத்து கைகளை நீட்டி வைக்கவும்.

பின் கைகளை மடக்கி உள்ளங்கைகளை மார்புக்கு நேராக பலமாக ஊன்றி வைக்கவும்.

மூச்சை உள் இழுத்து, தலையை தரையில் இருந்து மேலே தூக்கி நெஞ்சு மற்றும் வயிற்று பகுதியை மெல்ல உயர்த்தவும்.

தாடை கீழ் நோக்கி இருக்க வேண்டும்.

இடுப்புப் பகுதி தரையிலேயே நிலைத்து இருக்க வேண்டும்.

முழங்கைகள் உடலோடு ஒட்டியபடி இருக்க வேண்டும்.

பிறகு நிதானமாக மூச்சை வெளியே விட்டுக் கொண்டு தலையை கீழே இறக்கவும்.

அதில் இருந்து முதல் நிலைக்கு வரவும். ஆரம்பத்தில் கால்களை சில அடிகள் தள்ளி வைத்துச் செய்வது நல்லது. நன்றாக பழகிய பின்னர் கால்களை சேர்த்து வைத்துச் செய்யலாம்.

புஜங்காசனம் செய்வதால்  கிடைக்கும் நன்மைகள்

  • புஜங்காசனம் செய்யும் போது முதுகு நன்றாக வளைவதால், முதுகு  நல்ல பலம் பெறுகின்றது.
  • மூச்சு திறன் அதிகரிக்கும்.
  • தோள்பட்டைக்கு நல்ல நீட்சி கிடைக்கும்.
  • உடலின் மேல் பின்புற மத்தியபகுதி தசைகள் வலுப்பெறும்.
  • மேல் வயிற்றுத் தசைகள் வலுப்பெறுவதால் செரிமானம் நன்றாக நடைபெறும்.
  • இந்த ஆசனம் உடலுக்கு நல்ல ஆற்றலும், புத்துணர்ச்சியும் கொடுக்க வல்லது.

ஏற்கெனவே முதுகு வலி,முதுகுதண்டில் பாதிப்பு உள்ளவர்கள் அதை சரி செய்து கொண்ட பின்னர், இந்த ஆசனத்தை குருவின் துணைகொண்டு பழகுவது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *