பிரசவ தழும்புகளை சரி செய்வது எப்படி? (How to repair Birthmarks?)
கர்ப்பிணியாக இருக்கும் நேரத்தில் அதிகரிக்கும் தாயின் எடை , ஒரு குழந்தைக்கு மேலாக குழந்தையை வயிற்றில் சுமப்பவர்கள், குழந்தையின் அதிக எடை , பனிக்குடத்தின் நீர் அளவு போன்றவற்றின் காரணமாக பிரசவத்தின் பின் வயிற்றில் தழும்புகள் (Birthmarks) உண்டாகிறது.
கர்ப்பமாக இருந்த நேரத்தில் குழந்தை வளர வளர, குழந்தையின் வளர்ச்சிக்கு இடம் அளிக்கும் வகையில் வயிற்றின் தசைகளானது விரிந்து தேவையான இடத்தை வழங்கும்.
பிரசவத்திற்கு பின்னர் குழந்தை வயிற்றில் இருந்து வெளியேறியதும், திசுக்களின் மீள் தன்மையில் ஏற்படும் மாற்றங்களின் காரணமாக இடுப்பு, இடுப்பின் பின்பக்கம், தொடைகள் மற்றும் மார்பக பகுதிகளில் இந்த மாற்றங்கள் ஏற்படலாம்.
இந்த பிரச்சனைக்கு தீர்வாக வயிற்று தசைகளை வளரவிடாமல் ஈரப்பதத்துடன் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.
இந்த தழும்புகளை அகற்ற பல்வேறு அழகு சிகிச்சைகளை நாடும் போது ,கெமிக்கல் நிறைந்த அழகு சிகிச்சைகளில் பக்க விளைவுகளும் அதிகம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
பதிலாக பயனுள்ள பாதுகாப்பான வீட்டு வைத்தியங்களைப் பயன்படுத்தலாம்.
பிரசவத்திற்கு பின் வயிற்றில் ஏற்படும் தழும்புகளை போக்கும் வீட்டு வைத்தியங்கள்(Home Remedies for Birthmarks)
தேங்காய் எண்ணெய்
முன்னோர்கள் காலம் தொட்டு இயற்கை அழகில் முதல் இடம் பிடிக்கும் தேங்காயெண்ணெய் பயன்படுத்துவது எப்போதும் நல்லது. பிரசவத்துக்கு முன்பும் பின்பும் கூட.
தேங்காயெண்ணெய் மட்டும் தான் கர்ப்பக்காலத்தில் பயன்படுத்தக்கூடியது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். இனி வரும் எந்தபொருள்களையும் பிரசவத்துக்கு பிறகு பயன்படுத்தவேண்டும்.
வரித்தழும்புகளை குறைக்க பாதாம் மற்றும் தேங்காய் எண்ணெய்யை சம அளவில் பயன்படுத்தலாம். இதை தோலில் தவறாமல் மசாஜ் செய்யுங்கள்.
ஆமணக்கு எண்ணெய்
ஆமணக்கு எண்ணெய் தோலில் மசாஜ் செய்யும் போது மதிப்பெண்களை மெதுவாக குணப்படுத்தவும் மென்மையாக்கவும் உதவும். இதனை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும்.
மஞ்சள் + கடுகு எண்ணெய்
கடுகு எண்ணெயை 100 கிராம் அளவில் இலேசாக சூடுபடுத்தி அதனுடன் 5 டீஸ்பூன் அளவு மஞ்சள்தூளை சேர்த்து நன்றாக கலந்து ஆற விட்டு ஒரு பாட்டிலில் வைத்துகொள்ளுங்கள். இந்த எண்ணெயை தினமும் பிரசவத்துக்கு பிறகு குளித்துவிட்டு வந்ததும் வயிற்றுபகுதியில் தொட்டு இலேசாக தேய்க்க வேண்டும்.
இதே போன்று இரவு படுக்கும் போதும் தேய்த்துவர வேண்டும். தொடர்ந்து தழும்புகள் இருக்கும் இடத்தில் இப்படி தேய்த்து வந்தால் தழும்புகள் மறையக்கூடும்.
கற்றாழை சாறு
கற்றாழையை நீரில் அலசி உள்ளிருக்கும் நுங்கு போன்ற பகுதியை மிக்ஸியில் அரைத்து அதை வயிற்று பகுதியில் தடவ வேண்டும். ஓய்வாக இருக்கும் போதெல்லாம் கற்றாழை சாறை தடவி சுத்தமான காட்டனை நீரில் நனைத்து துடைத் தால் போதும்.
கற்றாழையை பிரசவக்காலத்திற்கு முன்பு உபயோகிக்க கூடாது. அதிக குளிர்ச்சி நிறைந்த கற்றாழையால் சமயங்களில் பிரசவ நேரத்தில் குளுமை பிரச்சனை உண்டாக்கிவிடவும் வாய்ப்புண்டு.
வெள்ளரி மற்றும் எலுமிச்சை சாறு
எலுமிச்சை சாற்றின் இயற்கையான அமிலத்தன்மை வடுக்கள் குணமடையவும் குறைக்கவும் உதவுகிறது. அதேபோல வெள்ளரிசாறு சருமத்தை புதியதாக்க உதவுகிறது.
எலுமிச்சைசாறு மற்றும் வெள்ளரி சாற்றை சம பாகங்களில் கலந்து, அந்த கலவையை வரித்தழும்புகள் உள்ள பகுதியில் தடவவும். 10 நிமிடங்களுக்குப் பிறகு வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்தி சருமத்தை கழுவ வேண்டும்.
இது தவிர, எலுமிச்சை சாற்றினை நீரில் கலந்து பஞ்சில் நனைத்து, தழும்புள்ள இடத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். அதன்பிறகு அந்த இடத்தில் எண்ணெய்யை தடவிக் கொள்ளலாம்.
ஆப்ரிகாட்
ஆப்ரிகாட் பழங்கள் சிறந்த எக்ஸ்ஃபோலைட்டிங் போக்குகளைக் கொண்டுள்ளன. அவை வரித்தழும்புகளை குணப்படுத்தும். 2-3 ஆப்ரிகாட் பழங்களின் சதைப்பகுதியை எடுக்கவும்.
பழத்தை பேஸ்ட் போல நசுக்கி, மாஸ்க் போல அடையாளம் உள்ள இடங்களில் தடவி 15 நிமிடங்கள் விடவும். பின்னர் வெதுவெதுப்பான நீரினால் கழுவ வேண்டும். இது தவிர சுத்தமான ஆப்ரிகாட் எண்ணெய்யில் தோல் புத்துணர்ச்சியூட்டும் பண்புகள் நிறைந்துள்ளன. எனவே இவை தழும்புகளை குறைக்க உதவுகிறது.
டீ பேக்
டீ போடப் பயன்படுத்திய டீ பேக்கை பிரசவத்தின் பின் தழும்பு உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்கவும்.
இதனால் அதில் உள்ள காப்ஃபைன் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் சரும செல்களை புதுப்பித்து தழும்புகளை மறையச் செய்வதோடு, சருமத்தை பாதுகாப்புடனும் வைத்துக் கொள்ளும்.
இயன்றவரை பாதிப்பில்லாத இயற்கை பொருள்களை பயன்படுத்துங்கள். இவற்றால் தழும்புகள் வேகமாக குணமடையாது ஆனாலும் படிப்படியாக குணமடையும்.
இயற்கை வீட்டு வைத்தியம் முற்றிலும் பாதுகாப்பானது.தீங்கு விளைவிக்கும் பக்க விளைவுகளும் இல்லை!