கருஞ்சீரகம்,ஓமம்,வெந்தய கலவையின் பயன்கள்(Black cumin omam & fenugreek mixture)

எளிதாக வீட்டிலே கிடைக்கக்கூடிய வெந்தயம், ஓமம், கருஞ்சீரகம் ஆகியவற்றின் கலவை (Black cumin omam & fenugreek mixture) பல நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.

வெந்தயம், ஓமம், கருஞ்சீரகம்(Black cumin omam & fenugreek mixture).இவை மூன்றும் மருத்துவக் குணம் கொண்ட உணவுப் பொருள்கள்.

வெந்தயத்தில் அதிக அளவில் இரும்புச்சத்து நிறைந்திருக்கிறது. இது பித்தத்தைக் குறைக்கும். கருஞ்சீரகம் கபத்தைக் குறைக்கும். அதேபோல் ஓமம் செரிமானத்தன்மையை மேம்படுத்தும்.

கருஞ்சீரகம்,ஓமம்,வெந்தய கலவை,அன்னைமடி,Annaimadi.com,கருஞ்சீரகம்,ஓமம்,வெந்தய கலவையின் பயன்கள் Benefits of Black cumin omam & fenugreek mixture,இரத்தம் சுத்தமாக ,Cleanse the blood

நோய்கள் வராமல் தற்காத்துக் கொள்ள முடியுமே தவிர முழுமையாக குணப்படுத்த முடியாது. ஆனால்  நோய்கள் முற்றிய பிறகு இதை எடுத்துக் கொள்வதால் எந்தப் பயனும் கிடைக்காது.

மலம், சிறுநீர் போன்ற கழிவுகள் சரியாக வெளியேறி எந்தவிதமான வயிற்றுப் பிரச்சனைகளும் இல்லை என்றாலே நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.  

முந்தைய காலங்களில் அன்றாட உணவில் வெந்தயம், ஓமம், கருஞ்சீரகம் (Black cumin omam & fenugreek mixture) போன்ற பொருள்களை இயல்பாகவே நாம் உணவில் சேர்த்துக் கொள்வோம். ஆனால் எந்திரமயமாகிவிட்ட இன்றைய சூழலில் இவற்றை பயன்படுத்துவது குறைந்துவிட்டது.

கருஞ்சீரகம்,ஓமம்,வெந்தய கலவை,அன்னைமடி,Annaimadi.com,கருஞ்சீரகம்,ஓமம்,வெந்தய கலவையின் பயன்கள் Benefits of Black cumin omam & fenugreek mixture,இரத்தம் சுத்தமாக ,Cleanse the blood

நமது உடலில் ரத்தம் சுத்தமாக இருந்தாலே பாதி நோய்கள் நம்மை தீண்டாது. அசுத்த ரத்தத்தால் நமது உடல் சரிப்படுத்த இயலாமல் திணறும். கழிவுகள் சேரும், கொழுப்புகள் கூட சேர்ந்து இதய நோய்கள், ரத்த அழுத்தம், பக்க வாதம் , என பல அபாயமான நோய்களுக்கு அடித்தளமாக அமைந்து விடும்.

நாம் சரியான உணவு, உடற்பயிற்சி போன்றவற்றை செய்கிறோமா என சோதித்துக் கொள்ள வேண்டும். நமது உடலில் தங்கும் அன்றாடக் கழிவுகளை உடலானது 90 சதவீதம் தான் வெளியேற்றுகிறது.

மீதமுள்ள நச்சு, கழிவுகள், கொழுப்பு போன்றவை உடலிலேயே தங்கி கேடு விளைவிக்கிறது. அதனை வீட்டிலிருந்தபடியே ஒரே ஒரு மருந்தால் வெளியேற்ற முடியும்.

கருஞ்சீரகம்,ஓமம்,வெந்தய கலவை,அன்னைமடி,Annaimadi.com,கருஞ்சீரகம்,ஓமம்,வெந்தய கலவையின் பயன்கள் Benefits of Black cumin omam & fenugreek mixture,இரத்தம் சுத்தமாக ,Cleanse the blood

தேவையானவை

வெந்தயம்- 250 கிராம்   ஓமம் – 100 கிராம்   கருஞ்சீரகம் – 50 கிராம்

செய்முறை

மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம் செய்து அதை தனியாக கருகாமல் வறுத்து, தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

சாப்பிடும் முறை

இக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும். இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது.

நன்மைகள் (Benefits of Black cumin omam & fenugreek mixture)

தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது.

தேவையான கொழும்பு எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பு நீக்கப்படுகிறது.

இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது. இருதயம் சீராக இயங்குகிறது. கண் பார்வை தெளிவடைகிறது.

சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீக்கப்படுகிறது. உடலில் உறுதியும், தேக மினுமினுப்பும், சுறுசுறுப்பும் உண்டாகிறது. நல்ல முடி வளர்ச்சி உண்டாகிறது.

எலும்புகள் உறுதியடைந்து எலும்பு தேய்மானம் நீங்குகிறது. ஈறுகளில் உள்ள பிரச்சனைகள் நீக்கப்பட்டு பற்கள் வலுவடைகிறது.

தினமும் இதனை நாம் உட்கொண்டால் பல்வேறு நோய்களை நெருங்க விடாமல் தடுத்துவிடமுடியும். ஏனெனில் பெரும்பாலான நோய்களுமே வயிற்றில் இருந்து தான் ஆரம்பிக்கின்றன. மந்தம், ஜுரம், கொழுப்பு ஆகிய அனைத்தும் ஏற்படுவதற்கான முழுமுதல் காரணம் செரிமானக் கோளாறுகளே.

நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும். தேவையற்றகொழுப்புகள், கழிவுகள் நீங்குவதால் ரத்தம் சுத்திகரிக்கப்படுவதற்க்கான வாய்ப்பு உள்ளது.

ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு இதயம் சீராக இயங்குவதற்கு இந்த மருந்து துணைபுரியும். ஆனால்  இதய பாதிப்பு உள்ளவர்கள் இந்த மருத்தை மட்டும் எடுத்துக்கொண்டால் போதாது.

இது தேவையற்ற கொழுப்புகளைக் கரைப்பதால் தோல்களில் உள்ள சுருக்கங்கள் நீங்க வாய்ப்பு உள்ளது.

வெந்தயம், ஹார்மோனைக் கட்டுப்படுத்தும்,அதனால், உடல் மினுமினுப்பு உண்டாகும். மேலும், ஓமம் மற்றும் கருஞ்சீரகம் உடலுக்கு சுறுசுறுப்பைத் தரும்.

உடலுக்குத் தேவையான கல்சியம் மற்றும் இரும்புச்சத்துகளை இந்த மருந்துகள் கொண்டிருப்பதால் எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியடைய வாய்ப்புண்டு.

மேலும் கூந்தல் வளர்ச்சிக்கு இது துணைபுரியும். மலச்சிக்கல், மாதவிடாய் பிரச்னைகளையும் சரி செய்யும். மேலும் சளியால் காது அடைக்கப்பட்டு கேட்கும் திறன் கம்மியாக இருந்தால் அதை சரி செய்யும்.

இந்த மருந்தை  தினமும் அருந்துவது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *