பல்ஈறுகளில் இரத்தம் கசிவை தடுக்க (Bleeding Gum)

பல் ஈறுகளில் இரத்தம் கசிவது (Bleeding Gum) அவற்றின் உறுதியைப் பாதிக்கும்.ஒரு மனிதனின் ஆரோக்கியத்தைத் தீர்மானிப்பது வாய்தான்.ஏனெனில், வாயில் தான் செரிமானத்திற்கான முக்கிய செயற்பாடு நடை பெறுகின்றது.உண்ட உணவு ,சரியான முறையில் ஜீரணம் ஆகிவிட்டாலே ஆரோக்கியத்துக்கு பெரிதும் பங்கம் இல்லை.

செரிமானத்திற்கு உதவும் பற்களை மிக கவனமாக பாதுகாக்க வேண்டும்.

பற்களில் ஏற்படும் சிறு பாதிப்பு கூட உடலைப் பாதிக்கும்.

இந்தப் பற்கள்  எவ்வளவு காலம் ஆரோக்கியமாகவும் திறன்படச் செயல்படுவதாகவும் இருக்கின்றனவோ அவ்வளவு காலம் நாம் உணவை அரைத்து உண்ண முடியும்.

ஆகவே பல்லாண்டு வாழ பற்களின் ஆரோக்கியம் அவசியம்.

பல் ஈறுகளில்  இரத்தம் கசிவதை (Bleeding Gum) தடுக்க  இப்படி செய்யுங்கள்.

மேலும் ஆரோக்கியமான பற்களினால் தெளிவான பேச்சும் நமக்குக் கிடைக்கும். நம் முக அழகு கெடாமல் இருக்க உதவு ம். வாயில் துர்நாற்றம் இருக்காது.

ஆகவே பற்களைப் பாதுகாத்து வாயினைச் சுத்தமாக வைத்திருப்பது மிக அவசியமாகின்றது.

இளம் வயதில் பற்கள் அநேகமாக அனைவருக்கும் வரிசையாக இடைவெளி இல்லாமல் இருக்கும் ஆனால் வயது ஆக ஆக பற்களிடையே இடைவெளி ஏற்பட வாய்ப்பு உள்ளது.இந்த இடைவெளிகளில், நாம் உண்ணும் உணவின் துகள்கள் தங்குவதே ஆகும்.

அந்த உணவுத்துகள்கள் பக்டீரியா போன்ற நுண்கிருமிகளால் தாக்கப்பட்டு சிதைக்கப்படுகின்றன.மேலும் பக்டீரியாக்களின் எண்ணிக்கை பல மடங்குகளாகப்  விரைவில் பெருகிவிடும்.

இதனாலேயே ஈறுகள் தாக்கப்பட்டு இரத்த கசிவு  (Bleeding Gum) ஏற்படுகின்றது.

மேலும் பற்சிதைவு, பல்வலி , பற்சொத்தை, பல்தேய்வு முதலியன ஏற்படுவதற்கும் வாய்ப்புக்கள் உள்ளன.அதைத் தவிர்பதற்கு நல்ல பற்பசைகளை பயன்படுத்தி பற்களை சுத்தமாக்குவதோடு, பற்களை உறுதியாக்க வேண்டும்.ஈறுகளில் வீக்கமும் ரத்தக் கசிவும் ஏற்படாமல் பற்கள் பாதுகாக்கப்படும்.

                                                                            

குறிப்பாக உணவு உண்டபின் கட்டாயமாக வாயைக் கொப்பளிக்க வேண்டும். உப்புநீரால் கொப்பளித்து வருவதும் இன்னும் சிறப்பு.

ஈறுகளில்  இரத்த கசிவைத் தடுக்க நல்லெண்ணெய் பயன்படுத்தி வாயைக் கொப்பளிக்கலாம்.இந்த ஆயுர்வேத முறை,பற்களை உறுதியாக்குவதோடு இதயத்துக்கும் நல்லது.
ரத்தசோகை,எதிர்ப்பு சக்தி குறைபாடு, சில வகை ரத்த புற்று நோய்களால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் ஈறுகளில் ரத்தம் கசியலாம்.
ஈறுகளில் வலி இருந்தாலோ, ரத்தக் கசிவு இருந்தாலோ மிருதுவான பிரஷ் மூலம், ஈறுகளை அழுத்தாமல் பற்களை மட்டும் பிரஷ் செய்ய வேண்டும்.
பல் துலக்குதல் பற்களை நீண்ட நேரம் துலக்கக் கூடாது. ஏனெனில், அது பல்லின் வெளிப்புறத்தில் உள்ள எனாமலைத் தேய்த்துவிடும். மேற்புற ஈறுகளை மேலே இருந்து கீழாகவும், கீழ்ப்புற ஈறுகளை கீழே இருந்து மேலாகவும் விரலால் அழுத்தித் தேய்த்தால், ஈறுகள் பற்களுடன் வலுவாக இணைந்திருக்கும்.
 

Leave a Reply

Your email address will not be published.