இரத்தக்குழாய் அடைப்பை உணவினால் சரி செய்ய ( Blood vessel occlusion )
மாரடைப்பு ஏற்படுவதற்கு ( Blood vessel occlusion ) உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ரத்தத்தில் கொழுப்பு, புகை பிடித்தல், உணவில் அதிகக் கொழுப்பு, உடல் உழைப்புக் குறைவு, மன அழுத்தம், மரபு என பல காரணங்கள் உண்டு.
இதயம் , உடல் முழுவதும் ரத்தம் பாய்ச்சும் அதிமுக்கிய வேலையைச் செய்கிறது. ‘லப் டப்’ தாள லயத்தோடு இதயம் துடித்து இயங்குவதால்தான், இரத்தத்தில் உள்ள ஒட்சிசன் திசுக்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
உடல் முழுக்க ரத்தத்தை அனுப்பும் இதயம் ,தான் இயங்கவும் ரத்தம் தேவை. இதயத்துக்குத் தேவையான ரத்தத்தை எடுத்துச்செல்லும் குழாய்களில் அடைப்பு ( Blood vessel occlusion ) ஏற்படும்போதுதான், மாரடைப்பு ஏற்படுகிறது.
ரத்தக் குழாயில் கொழுப்புப் படிவதாலோ அல்லது ரத்தம் உறைந்துபோவதாலோ அடைப்பு ஏற்படலாம். இதனால், இதயத்துக்கு செல்லும் ஒட்சிசன் நிரம்பிய ரத்த ஓட்டம் தடைப்பட்டு, இதயத் தசைகள் செயல் இழக்கும். இதைத்தான் மாரடைப்பு என்கிறோம்.
மாரடைப்பை உணவினாலேயே தவிர்க்க முடியும்.
இதயத்துக்கு ஆரோக்கியம் தரும் உணவு (Foods for Blood vessel occlusion )
மாரடைப்புக்கான அபாயத்தைக் குறைக்க, இதயத்துக்கு ஆரோக்கியம் தரும் உணவு அவசியம். கொழுப்பு, சர்க்கரை, உப்பு ஆகியவற்றின் அளவு குறைவாக இருக்கும் உணவுப் பொருட்களே இதயத்துக்கு நல்லது.
அதிக அளவில் பழங்கள், பச்சைக் காய்கறிகள், தானியங்கள், கொழுப்பு குறைவான பால் பொருட்கள் போன்றவை மாரடைப்பு வராமல் தடுக்கும்.
குறைந்த கொழுப்பு மற்றும் அதிக அளவில் புரதச் சத்து நிறைந்த பீன்ஸ், மாரடைப்புக்கான அபாயத்தைக் குறைக்கிறது. அசைவம் சாப்பிடுபவர்கள் அதிக அளவு கொழுப்பு நிறைந்த ஆடு – மாடு போன்றவற்றின் இறைச்சியைத் தவிர்க்க வேண்டும்.
தோல் நீக்கிய கோழி இறைச்சி மற்றும் மீன் போன்றவை ஆரோக்கியமானவை.ஆனாலும், அதிக அளவில் எண்ணெய்விட்டுப் பொரித்துச் சாப்பிடுவது நல்லதல்ல.
முட்டையின் வெள்ளைப் பகுதியில் அதிகப் புரதச் சத்து உள்ளது. ஆனால், அதன் மஞ்சள் கரு அதிகக் கொழுப்பு மிக்கது. எனவே, முட்டையின் மஞ்சள் கருவைத் தவிர்ப்பது மாரடைப்புக்கான வாய்ப்பைக்குறைக்கும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், அதில் அதிக அளவில் உப்பு உள்ளது. அது உயர் ரத்த அழுத்தத்தைத் தூண்டி விடும்.
அதிக அளவில் சர்க்கரை உள்ள உணவுப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும்.ஏனெனில் இவை ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கூட்டிவிடும். உடல் எடையும் கூடும்.
ஆரோக்கியமான எடையை சரிவரப் பராமரிக்க உடற்பயிற்சி
ஒரு நாளைக்கு குறைந்தது 30 முதல் 45 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும். தொடர் உடற்பயிற்சிகள் மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கின்றன.
- இதய நோய்களை ஏற்படுத்தும் உயர் ரத்த அழுத்தம், உயர் கொழுப்பு மற்றும் சர்க்கரை அளவுகளைக் கட்டுக்குள் வைத்திருக்க உடற்பயிற்சி அவசியம்.
- மன அழுத்தத்தைக் குறைக்கவும் உடற்பயிற்சி உதவும்.
- உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக எப்போதும் உடற்பயிற்சி செய்துகொண்டு இருக்க வேண்டும் என்று இல்லை.
- தோட்டப் பராமரிப்பு, வீட்டு வேலைகள், மாடிப்படிகளில் ஏறி இறங்குவது, நடப்பதும் கூட நல்ல உடற்பயிற்சிதான்.
- யோகாசனம் , தியானப் பயிற்சி போன்றவை மன அழுத்தம் மற்றும் ரத்த அழுத்தத்தைக் குறைகின்றன.
- இதனால் மாரடைப்பு அபாயமும் குறையும். இலகுவான யோகா பயிற்சிகளை தினமும் 10 – 15 நிமிடங்கள் செய்யலாம்.