மங்கிய கண்பார்வை தெளிவாக (blurred vision)
நாற்பது வயதை தாண்டும் சமயத்தில் அனைவரும் சந்திக்கும் ஒரு விஷயம் கண்பார்வை மங்குதல் (blurred vision). கண்கள் மூலம் தான் நாம் இவ்வுலகத்தை அறிகிறோம் மனிதருக்கு மட்டுமல்லாது உயிரினங்கள் அனைத்திற்குமே முக்கியமான உறுப்பு கண்கள் தான். இத்தகைய சிறப்பு வாய்ந்த கண்களில் ஏற்படும் ஓரு சில கோளாறுகளை நிவர்த்தி செய்து பாதுகாப்போம்.
உணவாக முருங்கைக்கீரை, பொன்னாங்கண்ணி, வல்லாரை, பாகல் பிஞ்சு, வெண்டை, மணத்தக்காளி, வற்றல், கரட், முட்டை, பசும்பால் அதிகம் சேர்த்து வர பார்வை நலம் பெறும்.
வல்லாரை எடுக்க முடியாவிட்டால், வல்லாரைப்பொடி( Natural vallarai powder) ஒரு நல்ல மாற்றீடாக இருக்கும்.
நீரழிவு நோயாளிகளை அதிகம் பாதிப்புக்குள்ளாக்குவதும் கண்பார்வை தான்.
இந்த கண் பார்வை கோளாறுகளை சரிசெய்ய நாம் செய்யவேண்டியது ஒரே ஒரு விஷயம்தான்.
பொன்னாங்கண்ணி கீரை உடலுக்கு வனப்பு தரும், முடிக்கு பலம் தரும், அதோடு கண்களுக்கு மிகவும் நல்லது.அடிக்கடி பொன்னாங்கண்ணி கீரைவறை, குழம்பு அல்லது பருப்புடன் சேர்த்து சமைக்கலாம்.
பார்வை தெளிவாக இருப்பதற்கு, கண்ணிலிலுள்ள ஒரு பித்தம் உதவுகிறது.காரம், புளி, உப்பு ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்தால் இந்தப் பித்தம் கெட்டுவிடும்.இதனால் கண்பார்வை மங்கும்(blurred vision).
ஆகவே இந்தச் சுவைகளை உணவில் குறைத்து வாழைப்பூ,வாழைத்தண்டு போன்ற துவர்ப்புச் சுவையும், கசப்பான பாகற்காய், அகத்திக் கீரையும், இனிப்பான பொருட்களையும் சாப்பிட இந்த பித்தம் நன்றாகச் செயற்பட்டு தெளிந்த பார்வை கிடைக்கும்.
வாழைப்பூவடை, வாழைப்பூவறை,வாழைப்பூ வதக்கல், குழம்பு செய்து சாப்பிடலாம்.அத்திக்காயிலும் துவர்ப்புச்சத்து நிறைந்துள்ளது.அத்திக்காய் பொரியல், அத்திக்காய் கூட்டு அடிக்கடி உணவில் சேர்க்கவும்.
பொதுவாக ,வயது முதிர்வு காரணமாகவே,பார்வையில் மங்கல் ஏற்படுகிறது. கண்ணின் விழித்திரையில் பக்கத்தில் தெரியும் புள்ளி (near point of eye), தூரமாகிக்கொண்டே போவதால் ஏற்படும் பிரச்சனை இது.
இதைச் சரிசெய்ய, ரீடிங் க்ளாஸ் உபயோகமே போதுமானது.வயது காரணமாக ஏற்படும் பாதிப்பு என்பதால், இதைத் தடுப்பது சாத்தியமற்றது. முடிந்தவரை, கண்களுக்கு அதிக அழுத்தம் தராமல் இருந்தால்,கட்டுப்படுத்தலாம்.
அதிக நேரம் டிஜிட்டல் திரைகளைப் பார்ப்பதால் ஏற்படும் பிரச்னை இது. நீண்டநேரம் டிஜிட்டல் சாதனங்களுடன் செலவிட்டுப் பழக்கப்பட்டவர்களுக்கு, அதிலிருந்து வெளிவரும் `ப்ளூ லைட்’, கண்களின் விழித்திரையுடைய கூர்மையைக் குறைக்கும்.
குறிப்பாக திரைகளைப் பார்க்கும் நேரத்தை குறைத்துக்கொள்ள வேண்டும். அடிக்கடி கண்களை இமைக்க வேண்டும். அரை மணி நேரத்துக்கு ஒருமுறை தூரத்திலுள்ள பொருள்களைப் பார்க்க வேண்டும். கண் தசைகளுக்கு, அதிக அசைவுகள் கொடுக்க வேண்டும்.
கண் ஆரோக்கியம் பெற
- 40 வயது வரை, ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்ய வேண்டும்.நாற்பதைத் தாண்டியதும் வருடத்துக்கு ஒருமுறை பரிசோதனை செய்ய வேண்டும். சர்க்கரை நோயாளிகள் மாதம் ஒருமுறை பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம்.
- சாப்பிடும்போது, திரைகளைப் பார்த்துக்கொண்டே சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். உணவின் மீது கவனம் செலுத்திச் சாப்பிட வேண்டும். முடிந்தவரை இயற்கை வெளிச்சத்தில் அமர்ந்து சாப்பிடவும்.
- தூக்கத்தின்போதுதான் கண்களுக்கு ஓய்வு கிடைக்கும். எனவே, இரவில் நன்றாகத் தூங்க வேண்டும். அடர் நிற அறையில் தூங்குவது சிறப்பு.
- ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- மருத்துவரின் பரிந்துரையின்றி, கண்களுக்குச் சொட்டு மருந்து உபயோகிக்கக் கூடாது