உடல் சூட்டைக் குறைக்க சில வழிகள் (reduce body heat)

உடல் வெப்பத்தின் (body heat) அளவை சரியாக பராமரிக்க வேண்டும்.உடல் வெப்பம் கூடினாலோ  அல்லது குறைந்தாலோ உடல் ஆரோக்கியம் கெட்டு விடும்.

பொதுவாக உடலின் வெப்பம் அதிகரிப்பதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன அதில் முக்கியமானது நம்மை சுற்றியுள்ள சுற்றுச்சூழல் வெப்பம், கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம், குளிரால் உண்டாகும் வெப்பம், நீண்டநேர டிஜிடல் திரை பாவனை (Screen time), உணவுமுறை,அதிகநேரம் விழித்திருப்பது என்பவையாகும்.

உடலின் வெப்பம் அதிகரிப்பதால், சருமம் காய்ந்து போதல், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், கண்நோ,கண்எரிவு,  கண்ணில் வீக்கம் போன்ற உபாதைகள்  ஏற்படும்.

குறைந்தது, மாதத்தில் ஒரு தடவையாவது எண்ணெய் குளியல் செய்யுங்கள்.உடல் சூட்டால் அவதி படமாட்டீர்கள்.

உடல் சூட்டைக் குறைப்பதற்கு , அன்றாடம் நம் வீட்டிலேயே  செய்ய கூடிய  சில எளிய  வழிமுறைகள் உள்ளன. அவற்றைப்  பயன்படுத்தி உடல் சூட்டிலிருந்து விடுபடுவோம்.

உடல் சூட்டைக் (body heat) குறைப்பதகு சில எளிய  வழிகள்

 • முக்கியமாக அன்றாடம் குடிக்கும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும்.
 • ஒரு அகன்ற பாத்திரத்தில் குளிர்ந்த நீரை நிரப்பி, அதில் கால்களை ஊற வைக்க வேண்டும். இப்படி    செய்து வர, உடலில் உள்ள அதிகமான வெப்பம் வெளியேறும்.
 • விட்டமின் சி நிறைந்த உணவுப் பொருட்களான ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களைக் கொண்டு ஜூஸ் போட்டு பருகுவதன் மூலம் உடல் வெப்பத்தைக் குறைக்கலாம்.

to reduce body heat annaimadi.com

 • கோடையில் மோர் உடலைக் குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவும். மேலும் மோரில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் (Probiotics) போன்றவை அதிகம் உள்ளதால், உடல் ஆரோக்கியத்தையும் கூட்டும்.
 • கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து  விடுபட,  கரும்பு ஜூஸை குடிப்பது மிக நல்லது.
 • பால் மற்றும் தேன் கலவையாகும். வெதுவெதுப்பான பாலில் தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலம் உடல் வெப்பம் தணியும்.இது உடல் வெப்பத்தைக் குறைக்க சிறந்த பானம்.
 • நீர்க்காய்கறிகளான வெள்ளரிக்காய், புடலங்காய், கீரைவகைகள்,பழங்கள் ,தயிர் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடல் சூட்டைக் குறைக்க முடியும்.
 • கோடையில் உடல் வறட்சியடையாமலும், குளிர்ச்சியுடனும் இருக்க இளநீர் பெரிதும் உதவியாக இருக்கும். ஆகவே கோடைக்காலத்தில் தவறாமல் தினமும் 2 இளநீரைப் பருகுங்கள்.

உடல் சூட்டைக்  குறைப்பதகு மேலும் சில வழிகள்

 • சின்ன வெங்காயத்தை நெய்யில் நன்கு வதக்கி, சாப்பிட்டாலும் உடல் சூடு (body heat) குறையும்.
 • கற்றாழையின் ஜெல்லை தினமும் முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவி வந்தால், அது உடலைக் குளுமைப்படுத்தும்.
 • கற்றாழை ஜெல்லை 2 ஸ்பூன் எடுத்து, அதில்  சிறிது தேன் மற்றும் தண்ணீர் ஊற்றி கலந்து குடித்து வர, உடல் வெப்பம் குறையும்.
 • ஒரு கரண்டியில்  சிறிது நல்லெண்ணெயை  சூடு பண்ணி, எண்ணெய் சிறிது சூடானதும் ,அதில் தோல் உரித்த பூண்டு மற்றும் ஒரு மிளகை போட்டு சூடாக்க வேண்டும்.பின் எண்ணெயை ஆறவைத்து வலது மற்றும் இடது காலின் பெருவிரல் நகத்தின் மேல் மட்டும் இந்த எண்ணெயை தடவ வேண்டும்.சரியாக இரண்டு நிமிடங்கள் கழித்து எண்ணெயை கழுவி விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் சில நிமிடங்களில் உடல் சூடு (body heat) குறையும்.

reduce body heat,annaimadi.com,remedies for dry skinCheck price

 • காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் வெந்தயத்தை ஒரு ஸ்பூன் எடுத்து வாயில் போட்டு, தண்ணீர் குடிக்க வேண்டும்.இப்படி தினமும்  செய்து வந்தால்  உடல் வெப்பத்தைக் குறைக்கலாம்.
 • புதினாவை நீரில் போட்டு கொதிக்க வைத்து , வடிகட்டி தேன் கலந்து புதினா தேநீர் போல் குடித்து வர, அதில் உள்ள குளிர்ச்சித்தன்மையினால் உடல் சூடு தணியும்.
 • சந்தனப் பொடியை நீர் அல்லது குளிர்ந்த பாலில் கலந்து பேஸ்ட் செய்து, நெற்றி மற்றும் தாடையில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால், உடலில் உள்ள அதிகப்படியான வெப்பம் குறைந்து, உடல் குளிர்ச்சியடையும். சந்தனப் பொடியுடன் ரோஸ் வோட்டர் சேர்த்து கலந்தும் பயன்படுத்தலாம்.முக அழகிற்கும் நல்லது.
 • ஒரு டம்ளர் பாலில் 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும், உடல் வெப்பத்தைக் குறைக்கலாம்.கொலஸ்ட்ரோல் அதிகம் இருப்பவர்கள் இம்முறையை தவிர்க்கவும்.

Leave a Reply

Your email address will not be published.