உடலின் சமிக்க்ஷைக்கு அலட்சியம் வேண்டாம் (Body language)

நாம் அனைவரும் உடலின் மொழி (Body language) அறிந்து,அதற்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்தாலே நோயின்றி வாழலாம். சாதாரண காய்ச்சல்,தடிமன்,இருமல் போன்று ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்பட்டால் அதை உடனே மருந்தோ, மாத்திரையோ கொண்டு தடை செய்ய வேண்டாம்.

உடல் தன் வேலையை சீராக செய்ய நாம் அனுமதித்தால் தான், நாம் நோய் எனும் பிணியில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ முடியும்.

நாம் அனைவரும் முதலில் நம் உடலை நேசிப்போம், நம் உடல் உள் உறுப்புகளை நேசிப்போம், நாம் நம்மை நேசிப்போம். நாம் வெளி உறுப்புகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ, அதே அளவிற்கு நம் உள் உறுப்புகளின் உணர்வுகளும், உடலின் மொழிகளுக்கு ம்(Body language) முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்போது தான் நாம் ஆரோக்கியமாகவும், அழகான தோற்றத்துடனும் இருக்க முடியும்.

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பது பழமொழி. நோயுற்ற வேளையில் அனைவரும் கட்டாயம் அதை உணர்ந்திருப்போம்.

உடல் ஆரோக்கியம் தான் மற்ற எல்லாச் செல்வங்களைவிடவும் சிறந்தது. இன்னும் சொல்லப்போனால் மற்ற செல்வங்களைப் பெறவும், பெற்ற செல்வத்தை அனுபவிக்கவும் ஆரோக்கியம் இன்றியமையாததாய் திகழ்கிறது.

நோய்களை வென்று மரணத்தை முறியடிப்போம் என்று மருத்துவ உலகம் முயற்சித்துக்கொண்டிருக்கும் அதே வேளையில் தினமும் புதுப்புது வியாதிகள் முளைத்த வண்ணமாய் இருக்கின்றன.உடலின் சமிக்க்ஷைக்கு அலட்சியம் வேண்டாம் ,Body language,annaiamdi.com,அன்னைமடி , அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய உடலின் மொழி,Body language is a must-know, 

அக்கு பஞ்சர், சித்த மருத்துவம், ஹோமியோபதி, யுனானி மற்றும் ஆயுர்வேதம் என்று மருத்துவத் துறைப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. தீராத மூட்டு நோய்க்கு நிரந்தரத் தீர்வு,

மூன்றே மாதங்களில் மூல நோய்க்கு முற்றுப்புள்ளி வைப்போம், ஆண்மைக் குறைவை நீக்க அவசர சிகிச்சை போன்ற பயமுறுத்தும் பத்திரிக்கை விளம்பரங்கள் ஒருபுறம் இருக்க, ஆங்கில மருந்துகளை உண்ணாதீர்கள் அதில் பக்கவிளைவுகள் அதிகம் என்ற பத்திரிக்கை உபதேசங்களும் வந்துகொண்டுதான் இருக்கின்றன.

இத்தனை குழப்பங்களுக்கு மத்தியில் ஆரோக்கிய வாழ்வை நாடும் நம் உள்ளங்களில் எழும் கேள்வி நோயற்ற வாழ்விற்கு வழிதான் என்ன? என்பதுதான்.

வருமுன் காப்போம் !

நோயும் மனிதனும் மிக நெருக்கமாக வாழும் காலச் சூழல் இது. காய்ச்சல் தலைவலி போன்ற சாதாரண வியாதிகளைக் கடந்து இன்று நாளொரு வியாதியும், பொழுதொரு மருந்துமாய் மனித வாழ்க்கை நகர்கின்றது.

 அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய உடலின் மொழி(Body language is a must-know)

(1) உடல் – உணவை கேட்கும் மொழி – பசி

பசிக்கும் போது தான் சாப்பிட வேண்டும்.

(2) உடல் – தண்ணீரை கேட்கும் மொழி – தாகம்

(3) உடல் – ஓய்வை கேட்கும் மொழி – சோர்வு, தலைவலி

(4) உடல் – நுரையீரலை தூய்மை செய்யும் மொழி – தும்மல், சளி, இருமல்

தும்மல், இருமல் வந்தால் அடக்க கூடாது.

உடலின் சமிக்க்ஷைக்கு அலட்சியம் வேண்டாம் ,Body language,annaiamdi.com,அன்னைமடி , அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய உடலின் மொழி,Body language is a must-know,

(5) உடல் – உச்சி முதல் பாதம் வரை உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி – காய்ச்சல்

(6) உடல் – காய்ச்சலின் போது உணவை உண்ணாதே என்று சொல்லும் மொழி – வாய் கசப்பு மற்றும் பசியின்மை

(7) உடல் – காய்ச்சலின் போது நான் உடலை தூய்மை செய்கிறேன், நீ எந்த வேலையும் செய்யாதே என்று சொல்லும் மொழி – உடல் அசதி

உடல் – செரிமானம் ஆகாத உணவை நான் வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி – வாந்தி

(9) உடல் – குடல்களில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி – பேதி

(10) உடல் – இரத்தத்தில் உள்ள நச்சை நான் தோல் வழியாக வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி – வியர்வை

(11) உடல் –  வெப்பநிலையை சீர் செய்து இரத்தத்தில் உள்ள நச்சை முறிக்கப்போகிறேன் என்று சொல்லும் மொழி – உறக்கம்

நித்திரை வந்தால் தூங்கத் தான் வேண்டும்.

(12) உடல் –  முறித்த நச்சை இதோ வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி – சிறுநீர் கழித்தல்

(13) உடல் – உணவில் உள்ள சத்தை பிரித்து இரத்தத்தில் கலந்து, சக்கையை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி – மலம் கழித்தல்

Leave a Reply

Your email address will not be published.