சுவையான பம்பாய் அல்வா (Bombay halwa recipe)

அதிக சுவையான பம்பாய் அல்வா (Bombay halwa recipe) மிக சுலபமான செய்முறையில் செய்வோம். அதிகமான பொருட்கள் தேவையில்லை. சீனி ,சோளமா, நெய்  மட்டுமே தேவை. குறைந்தநேரத்தில் செய்திடலாம்.பொதுவாக அல்வா என்பது அனைவருக்கும் பிடித்தமான இனிப்பு பண்டம்.

திடீரென செய்யக் கூடிய அல்வா இது. இதை செய்து கொடுத்து , திடீர்  விருந்தினரையும் மனமகிழ்வுற செய்திடலாம்.

நீங்களும் செய்து அசத்துங்கள்!indian sweet recipe,annaimadi.com,indian sweets ,சுவையான பம்பாய் அல்வா ,அன்னைமடி,,easy halva recipe,alva recipe,Btasty sweet recipe,ombay halwa recipe,அல்வா செய்முறை,

தேவையான பொருட்கள்

சோளமா – 1 கப்

சீனி  – 2 கப்

நெய் –  ½ கப்

தேசிப்புளி  – 2 தே.க அளவு

முந்திரி பருப்பு, பிஸ்தா – தலா ஒரு டேபிள் ஸ்பூன்

கலர் பவுடர் – 2 சிட்டிகை

பாதாம் பருப்பும்  விரும்பினால் தோல் நீக்கி விட்டு சிறிதாக வெட்டி சேர்க்கலாம்.

ஏலக்காய்த்தூள் அரை தே.க  அதுவும் நீங்கள் விரும்பினால்  சேர்த்துக் கொள்ளலாம்.

மஞ்சள், ஒரேஞ் , சிவப்பு , ரோஸ்  என நீங்கள் விரும்பிய வண்ணங்களைச் (Food colour)  சேர்த்து செய்யலாம்.

பம்பாய் அல்வா செய்யும் முறை (Bombay halwa recipe)

முதலில் சர்க்கரையை அடிகனமான கடாயில் போட்டு ,மூழ்கும் வரை தண்ணீர் விட்டு, அடுப்பில் வைத்து கம்பி பதம் வரும் வரை காய்ச்சவும்.
மைதாவை தண்ணீரில் கரைத்து சர்க்கரை பாகில் விட்டு, கட்டி தட்டாமல் சிறிது சிறிதாக நெய் விட்டுக் கிளறவும்.
அதன் பின் பாத்திரத்தில் ஒட்டாத பதம் வந்ததும், முந்திரி, பிஸ்தாவை  போட்டு கிளறி  இறக்கவும்.
நெய் பூசிய தட்டில் கொட்டி பரவவும்.
சிறிதாக வெட்டிய முந்திரி, பிஸ்தாவை மேலே தூவி அலங்கரிக்கலாம். ஆறியதும் விரும்பிய வடிவில் அளவில் துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.
indian sweet recipe,annaimadi.com,indian sweets ,halwa recipe,indian recipe.easy halwa

உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற திருநெல்வேலி  இருட்டுக்கடை அல்வா, பீட்ரூட் அல்வா, கோதுமை அல்வா, கரட்  அல்வா,பாதாம் அல்வா, அசோகா அல்வா,கசகசா அல்வா, கேசரி அல்வா,  பைனாப்பிள் அல்வா, பால் அல்வா,  மாம்பழ அல்வா, பூசணி அல்வா,  என  அல்வாக்களில் பல நூற்றுக் கணக்கான வகை உண்டு,பல்வேறு விதமாகவும் செய்யலாம்.

இந்த இலகுவான பம்பாய் அல்வாவையும்  செய்து சுவைத்து மகிழுங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *