மூளையை பாதிக்கும் பழக்கங்கள்(Brain affecting habits)

நம் அன்றாடம் செய்யும் சில  செயல்கள் (Brain affecting habits) நம் மூளையின் செயற்பாட்டை பாதிக்கின்றது.இதை நாம் அறியாமலே செய்து வருகின்றோம்.

மூளையானது எம் உடலின் மிக முக்கிய பகுதி என்பது யாவரும் அறிந்ததே. மூளையானது உடலின் அனைத்து செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது,

நுண்ணறிவு, படைப்பாற்றல், உணர்ச்சி மற்றும் நினைவகம் ஆகியவை மூளையால் நிர்வகிக்கப்படும் பல விஷயங்களில் சில விடயங்களாகும்.

எனவே மூளையை பாதிக்கும் விடயங்களை அனைவரும் அறிந்து இருப்பது மிகவும் அவசியம் ஆகிறது.

மூளையை பாதிக்கும் அன்றாட பழக்கவழக்கங்கள் Daily habits that affect the brain

காலையில் உணவு உண்ணாமல் இருப்பதால் ரத்தத்தில் குறைவான அளவே குளுக்கோஸ் இருக்கும். இதனால் மூளைக்குத் தேவையான சக்தியும் தேவையான ஊட்டச்சத்துக்களும் கிடைக்காமல் போகும். இது மூளையின் அழிவுக்குக் காரணமாகும்.

Brain danmaging  habits,brain affecting activities,brain affecting habits,மூளையை பாதிக்கும் அன்றாட செயற்பாடுகள்,sleep deprivation,தூக்கமின்மை,உறங்குகையில் தலையை முழுமையாக மூடி இருத்தல்,head covered while sleeping,வளி மாசடைதல்,air pollution,புகைத்தல்,smoking,அதிக சர்க்கரை நுகர்வு,High sugar consumption, ,சிந்தனை செய்யாமை,Lack of stimulation of thoughts ,lack of thinking,annaimadi.com,அன்னைமடி 

நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.

நாம் உறங்குவதன் மூலமே எம் மூளைக்கு முழுமையான ஓய்வைக் கொடுக்க முடிகிறது.நாம் தூக்கமில்லாமல் இருந்தால் எம் மூளைக்கலங்கள் பாதிப்பு அடைந்து மூளை புத்துணர்வு பெறுவது தடுக்கப்படும்.

இது பாரிசவாதம் போன்ற நோய்களுக்கும் இட்டுச்செல்லும்.

பசி இல்லாமல்  அதிகமாக சாப்பிடுவது

மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி,மூளையின் மந்த நிலைக்குக் காரணமாகும்.

புகை பிடிக்கும் பழக்கம் 

மூளை சுருங்கவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும்  புகை பிடித்தல் காரணமாகிறது.புகைத்தலால் மூளை பாரியளவில் பாதிப்பிற்கு உள்ளாகும்.

வயதாகும் போது மூளையின் அளவில் இழப்பு ஏற்படும்.இன்னும் அல்சைமர் நோய் ஏற்படவும் காரணமாக அமையும்.

அல்சைமர் என்பது ஒரு முற்போக்கான கோளாறு ஆகும்.இதன் காரணமாக மூளைக்கலங்கள் செயலிழக்கின்றன.சிந்தனை,நடத்தை மற்றும் சமூகத்திறன்களில் தொடர்ச்சியான சரிவு ஏற்படுவதுடன் சுயாதீனமாக செயல்படும் திறனையும் சீர்குலைக்கும்.

அதிகபடியான சர்க்கரை நுகர்வு

அதிகபடியான சர்க்கரை நுகர்வு ஊட்டச்சத்து குறைபாட்டை ஏற்படுத்துவதுடன் புரதம் மற்றும் போசணைப்பொருட்கள் அகத்துறிஞ்சலையும் தடுக்கும்.அத்துடன் மூளை வளர்ச்சியிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.  Brain danmaging  habits,brain affecting activities,brain affecting habits,மூளையை பாதிக்கும் அன்றாட செயற்பாடுகள்,sleep deprivation,தூக்கமின்மை,உறங்குகையில் தலையை முழுமையாக மூடி இருத்தல்,head covered while sleeping,வளி மாசடைதல்,air pollution,புகைத்தல்,smoking,அதிக சர்க்கரை நுகர்வு,High sugar consumption, ,சிந்தனை செய்யாமை,Lack of stimulation of thoughts ,lack of thinking,annaimadi.com,அன்னைமடி 

அசுத்தமான காற்று

மாசு நிறைந்த காற்றை சுவாசிக்கும் போது , நமக்குத் தேவையான அளவு ஆக்ஸிஜனை நாம் பெற முடியாது போகும். மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.

தலையை மூடிக்கொண்டு தூங்குவது

சிலருக்கு தலையை மூடிக்கொண்டு தூங்கும் பலாக்கம் இருக்கும்.போர்வைக்குள் கரியமிலவாயு(CO2) அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.

உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். நோயுற்ற காலத்தில் ஓயவேடுப்பதே உடலுக்கும் மூளைக்கும் நல்லது.

மூளைக்கு வேலை கொடுக்காமல் இருப்பது

மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன.

அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.சிந்தனை என்பது எம் மூளை விருத்திக்கு பயிற்சி  அளிப்பதற்கான சிறந்த வழி ஆகும்.

மூளையை பயன்படுத்தி சிந்தனை செய்யாமல் இருப்பது மூளையில்  சுருக்கத்தை ஏற்படுத்தும்.

குறைவாக பேசுவது

அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.

காலையில் தாமதமாக கண் விழித்தல்.(more sleeping specially at the morning)

காலை வேலையில் எம் இதயம் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பிக்கும். அவ்வேளையில் மூளைக்கு வேகமாக குருதி விநியோகிக்கப்படும். அதற்கு ஈடுகொடுக்க நாம் புவிக்கு செங்குத்தான நிலையில் இருக்கவேண்டும்.

அவ்வாறு அல்லாமல் புவிக்கு சமாந்தரமாக அதாவது படுத்த நிலையில் இருந்தால் எம் மூளை பாதிப்பிற்கு          உள்ளாகும்.இதனை தவிர்க்க அதிகாலையிலே விழித்து எழ வேண்டும்.

நோயுற்ற நிலையில் கடுமையாக உழைத்தல் (working your brain during illness),ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபடல்,கற்றல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவது மூளையின் செயற்திறனை குறைக்கும்.அத்துடன் மூளையில் சிதைவடையும் ஏற்படுத்தும்.

பதற்றம் கொள்வது

நாம் பதற்றம் அல்லது நிலை குலைவதால், மூளையின் ரத்தக்குழாய்கள் (நாடி) கடினமாவதுடன் எம் மனவலிமையையும் இது குற்றச்சாட்டு செய்யும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *