பால் கொடுக்கும் பெண்களுக்கான உணவு (Breast feeding mothers food)
குழந்தை பெற்ற பெண்களின் உணவைப் (Breast feeding mothers food) பொறுத்துத்தான் தாய்ப்பாலில் உள்ள சத்துகள் தரமானதாக அமையும். தாயின் உணவு குறைந்தால், பால் சுரப்பதற்குத் தேவையான சத்துக்கள் கிடைப்பதில்லை. எனவே பாலுட்டும் தாய்மார்கள் தன்னுடைய உணவில் அதிக அக்கறை எடுத்து கொள்ளவேண்டும்.
முதல் ஆறு மாதங்களுக்குக் குழந்தையின் வளர்ச்சி தாய்ப்பாலை மட்டுமே நம்பி இருப்பதால் தாய்ப்பால் நன்றாக சுரக்க வேண்டியது முக்கியம்.
அத்துடன் குழந்தைக்கு தேவையான அனைத்து சத்துக்களும் தாய்ப்பால் முலமே கிடைக்கின்றது. இதனால் குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் தமது உணவில் (Breast feeding mothers food) மிகுந்த கவனம் கொள்ளவேண்டும்.
எனவே, தனக்குத் தேவையான உணவை நேரத்தோடு சாப்பிடுவதும், குழந்தை பசித்து அழும்போதெல்லாம் தாய்ப்பால் கொடுப்பதும் அவசியம்.
பிறந்த குழந்தை தாயின் உடலிலிருந்து வெளியேறி, பாதுகாப்பற்ற வெளிச்சூழலை எதிர்கொள்ளும் வேளையில், புதுச்சூழலில் இருந்து குழந்தையைப் பாதுகாக்க, தாய்ப்பாலில் இருந்து பெறப்படும் பிறபொருளெதிரி உதவும்.
இந்த பிறபொருளெதிரிகள் பல நுண்ணுயிர்களைத் தாக்கி அழித்து ,பல தொற்றுநோய்களிலிருந்து குழந்தைக்கு பாதுகாப்பளிக்கும்.
பாலூட்டும் தாய் தினமும் உண்ண வேண்டியவை
பாலூட்டும் தாயானவள் (Breast feeding mothers food) தினமும் தேவையான அளவுக்குக் காய்கறிகளும் பழங்களும் கலந்த சரிவிகித உணவைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிட்டாலே போதும், தாய்ப்பால் நன்றாகச் சுரக்கும்.
