உறுப்புகளை இளமையாக்கும் மூச்சுப்பயிற்சி (Breathing exercise)

மூச்சுப்பயிற்சி (Breathing exercise) உடலுக்கு புத்துணர்ச்சி தருகிறது.உடலை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது.

மூச்சை 5 வினாடிகள் வரை அடக்கி வைத்திருப்பதால் சுவாசிக்கும் காற்று மூளைக்கும் உடலின் மற்ற பகுதிகளுக்கும் ஒரேமாதிரியாக நிதானமாக எடுத்துச் செல்லப்படுவதால் புத்துணர்ச்சி ஏற்படுகிறது.

இருதயமும், நுரையீரலும் இளமையாக இருக்க மூச்சுப்பயிற்சி பெரிதும் உதவுகின்றது.

இந்த பயிற்சியில் மூச்சை வயிறை  சுருக்கி உள்ளே இழுப்பதால் ‘தொப்பை’ என்கிற பேச்சுக்கு இடம் ஏதுமில்லை. அப்படி ‘தொப்பை’ உள்ளவர்கள் இந்த பயிற்சி தீவிரமாக செய்வதன் மூலம் ‘தொப்பை’ நன்றாக குறைத்து ‘சிலிம்’ மாக மாறுவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கின்றது.

காற்றை வேக வேகமாக மூக்கின் வழியே சுவாசிப்பதால் காற்று உடலின் உள்ள அனைத்து பாகங்களுக்கும் போய்  சேருவதற்கு அதிகநேரம் எடுத்துக்கொள்கிறது.அதனால் உடல் விரைவில் சோர்வு அடைகிறது.

உதாரணமாக சற்று பருமனானவர்கள் சிறிதளவு வேகமாக நடந்தாலே இளைக்க ஆரம்பித்து சோர்வடைந்து விடுகின்றனர்.ஏனென்றால் அவர்கள் இருதயமும் , நுரையீரலும் வேக வேக வேலை செய்து கலைத்து விடுகின்றது.

இதை போக்கத் தான் மூச்சுப்பயிற்சி (Breathing exercise)  மிகவும் அவசியமாகிறது . இந்த பயிற்சி உடல் புத்துணர்ச்சி தருகிறது.உடலை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது.

மூச்சை 5 வினாடிகள் வரை அடக்கி வைத்திருப்பதால் சுவாசிக்கும் காற்று உடலின் மூளைக்கும் மற்ற பகுதிக்கும் ஒரேமாதிரியாக நிதானமாக    எடுத்துச்சென்று புத்துணர்ச்சியை தருகிறது.

பல வழிகளில் புத்துணர்ச்சியை அடையலாம். நடை பயிற்சி, யோகா, தியானம், ஒலி ஒளி யோகா, உடற்பயிற்ச்சி மற்றும் மூச்சு பயிற்சி. இவற்றில் மிக  மிக எளிதானதும் , எந்த இடத்திலும், எந்த வயதினருக்கும் குறைந்த நேரத்தில் சிறந்த பலனும், இலகுவானதும் இருப்பது இந்த மூச்சு பயிற்சி தான்.

பயிற்சியின் போது பின்பற்ற வேண்டியவை

ஒவ்வொரு முறை வயிற்றை சுருக்கி மூச்சு இழுக்கும்போது குறைந்தது 1,2,3,4,5 எண்ணும் வரை நீளமாக மூச்சை மெல்ல மெல்ல இழுக்க வேண்டும்.

பிறகு குறைந்தது 1,2,3,4,5 எண்ணும் வரை மூச்சை அடக்கி வைத்திருக்க வேண்டும்.அதேபோல் குறைந்தது 1,2,3,4,5 எண்ணும் வரை மூச்சை நீண்டு மெல்ல மெல்ல விடவேண்டும்.

 கீழே 5 வகையான இலகுவான மூச்சுபயிற்சி முறைகள் காட்டப்படுகின்றன. உங்களுக்கேற்றதை பயின்று பலன் பெறுங்கள்.

மூச்சு பயிற்சி முறைகள்  (Breathing exercise)

முதல் பயிற்சி (Breathing exercise) : இரு துவாரங்கள் வழியாக

1.  ஓரிடத்தில் சௌகரியமாக அமருங்கள்.

2. உடலை இலேசாக்கி கண்களை மெல்ல மெல்ல மூடுங்கள். பயிற்சி முடியும் வரை கண்களை மூடிக்கொண்டிருக்க வேண்டும்.

3.   இப்போது சாதாரணமாக 1,2,3,4,5 எண்ணிக்கொண்டு மூக்கின் இரு துவாரங்கள் வழியாக வயிற்றை சுருக்கி மூச்சை மெல்ல மெல்ல இழுங்கள்.

4. 1,2,3,4,5 எண்ணும்வரை மூச்சை அடக்கி வைத்திருங்கள் .    

5. பிறகு 1,2,3,4,5 எண்ணும்வரை மூச்சை மெல்ல மெல்ல வெளியே விடுங்கள்.

இரண்டாவது பயிற்சி(Breathing exercise) : இடது துவாரம் வழியாக மட்டும்

கட்டை விரலால் வலது துவாரத்தை அடைத்துக்கொண்டு இடது துவாரம் வழியாக மேலே முதல் பயிற்சியில் குறிப்பிட்ட  3,4, 5 ஆவது செய்முறையை பின்பற்ற வேண்டும்.

மூன்றாவது பயிற்சி :வலது துவாரம் வழியாக மட்டும்     

சுண்டு விரலால் இடது  துவாரத்தை அடைத்துக்கொண்டு வலது துவாரம்  வழியாக மேலே முதல் பயிற்சியில் குறிப்பிட்ட  3,4, 5 ஆவது செய்முறையை பின்பற்ற வேண்டும்.

நான்காவது பயிற்சி

கட்டை விரல் மற்றும் சுண்டு விரலை உபயோகித்து வலது துவாரம் வழியாக மூச்சை 1,2,3,4,5 எண்ணும் வரை மெல்ல மெல்ல இழுத்து, 1,2,3,4,5,வரை  மூச்சை அடக்கி 1,2,3,4,5 வரை இடது துவாரம் வழியாக மெல்ல லெல்ல வெளியில் விடவேண்டும்.   

ஐந்தாவது பயிற்சி

கட்டை விரல் மற்றும் சுண்டு விரலை உபயோகித்து இடது  துவாரம் வழியாக மூச்சை 1,2,3,4,5 எண்ணும் வரை மெல்ல மெல்ல இழுத்து, 1,2,3,4,5,வரை  மூச்சை அடக்கி 1,2,3,4,5 வரை இடது துவாரம் வழியாக மெல்ல மெல்ல வெளியில் விடவேண்டும்.

இந்த 5 பயிற்சியும் முடிந்த பிறகு சாதாரணமாக மூச்சை மெல்ல மெல்ல இழுத்து , அடக்கி பிறகு வெளியில் விடவேண்டும். இப்போது தான் கண்களை மெல்ல மெல்ல திறக்க வேண்டும்.

இப்போது உங்கள் உடலில் புத்துணர்ச்சி பரவுவதை உணர்வீர்கள். தினமும்  இந்த பயிற்சியினை செய்யும் போது  புதுதெம்பை உணர்வீர்கள். நாள்தோறும் இப்பயிற்சியினை தவறாது செய்து இருதயமும், நுரையீரலும் இளமையாக வைத்துகொள்ளுங்கள்.

 

உடலின் பலம் ‘தம்’ மில் தான் இருக்கின்றது.அதாவது மூச்சை (காற்றை) பிடித்து வைப்பதில் தான் இருக்கின்றது.எவ்வளவுகெவ்வளவு அதிக நேரம் மூச்சை அடக்கி வைத்திருகின்றோமோ அவ்வளவுக்கவ்வளவு உடலில் தெம்பு இருக்கின்றது என்று அர்த்தம்.

குறைந்தது 5 அல்லது 10 வினாடிகள் வரை மூச்சை அடக்கி வைத்திருந்தால் உடல் பலம் நல்லநிலையில் இருக்கின்றது என்று அர்த்தம்.

சிலர் குறிப்பாக நீச்சல் தெரிந்தவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் 60 வினாடிக்கும் மேலாக மூச்சை அடக்கி வைத்திருப்பார்கள்.

டயரில் காற்று இருக்கும் வண்டிகள் இலேசாகவும் அதிக வேகத்தில் ஓடுவதற்கு உதவி செய்வது போல உடலில் மூச்சு அடக்கப்படும் போது உடல் இலேசாகவும் , அதிக அளவு சக்தியையும் பெறுகின்றது.

விளையாட்டு வீரர்கள் வேகமாக ஓடுவதற்கு மூச்சை அடக்கிக் கொண்டு ஓடுவதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். அதற்கு மூச்சு பயிற்சி (Breathing exercise) தான் உதவுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *