பிரியாணிக்கு இணை பிரியாணி மட்டும் தான்!(Briyani)
ஆட்டு பிரியாணி(Briyani) ,மாட்டு பிரியாணி, வெஜிடபிள் பிரியாணி,பனீர் பிரியாணி,தம் பிரியாணி,இறால் பிரியாணி,முட்டை பிரியாணி என பல சுவையில் பலவிதம்! இவற்றில் முதன்மை சிக்கன் பிரியாணி தான்.
இப்போது பல இடத்திலும் பிரியாணிகள் கிடைக்கின்றன, அனைவருக்கும் இவைகளின் மீது ஏன் கொள்ளை பிரியம்?
முக்கியமாக பிரபல அசைவ பிரியாணி நிறுவனங்கள் பல இடங்களிலும் தங்கள் கிளைகளை பரப்பி தங்களது வியாபாரத்தை பெருக்கி கொண்டு வருவது எதைக் குறிப்பிடுகிறது?
அதாவது பிரியாணி இன்றைய வேகமான காலத்தில் சுலபமாக பத்து நிமிடத்தில் சாப்பிட்டு சென்றுவிடக் கூடிய உணவு. மேலும்
சிக்கன் பிரியாணி(Briyani) சுமார் 100 ரூபாய் முதல் 300 ரூபாய் வரையில் ஒரு பிளேட் கிடைப்பதால் , மேலும் இரண்டு அசைவ பிரியாணியை வாங்கி விட்டால் சுமார் ரூ 300-400 க்கள் ஒரு மத்தியதர குடும்பத்தின் மதிய உணவு தேவை திருப்தியாக சாப்பிட்ட உணர்வுடன் சுலபமாக முடிந்துவிடும்.
வீட்டில் உள்ள பெண்களுக்கும் வேலை பளு கிடையாது.கிச்சனில் டிஷ் வாஷ் வேண்டும் என்ற தொல்லையும் இல்லை.
பிரியாணி ஊட்டச்சத்து உள்ள உணவா?(Briyani)
அது மட்டுமா .. அசைவ பிரியாணியில் (Briyani) கிட்டதட்ட அனைத்து ஊட்டச்சத்துக்களும் இருக்கிறது. வேகவைத்த முட்டையுடன் கிடைக்கும் அசைவ பிரியாணியில் புரோட்டின்களும், கார்போஹைடிரேட்டுகளும் மற்றும் சில உடலுக்கு நன்மை தரக்கூடிய கொழுப்புகளும் இருக்கிறது.
புரோட்டின்கள் உபயோகிக்கும் இறைச்சியில் இருந்தும், கார்போஹைட்ரட் அரிசியில் இருந்தும், கொழுப்புகள் எண்ணெய் மற்றும் நெய்யில் இருந்து கிடைக்கிறது. வெஜிடபிள் பிரியாணியாக இருந்தால் வைட்டமின்கள் காய்கறிகளில் இருந்து கிடைக்கும்.
அதோடு மட்டும் நின்று விடுவதில்லை பிரியாணி செரிமானத்தை அதிகரிக்கும். அதற்கு காரணம் அதிலுள்ள இஞ்சி, ஜீரகம் மற்றும் மஞ்சள் ஆகும்.
சீரகம் செரிமான நொதிகளின் செயல்பாட்டை விரைவாக்குகிறது, மேலும் கல்லீரலில் இருந்து பித்தத்தை வெளியேற்றுகிறது.
மஞ்சள் குடல் வீக்கங்கள் ஏற்படுவதை தடுக்கிறது, இஞ்சி வாயுவை வெளியேற்றுகிறது. அதுமட்டுமின்றி குமட்டல் ஏற்படுவதையும் தடுக்கிறது.
பிரியாணி (Briyani) நாம் சாப்பிடும் போது அதனுடன் கத்தரிக்காய் கூட்டு மற்றும் அரிந்த வெங்காயங்கள் தருவார்கள்.
வெங்காயத்தை பலரும் தனியாக சாப்பாட்டில் வைத்தால் சாப்பிடவே மாட்டார்கள்.ஒதுக்கி வைத்துவிடுவார்கள். ஆனால் பிரியாணியுடன் வரும் போது அதையும் சேர்த்தே பலரும் உண்பார்கள்.
பிரியாணியில் அதிகம் உள்ள வெங்காயம், மஞ்சள், இஞ்சி, பட்டை, கிராம்பு மற்றும் பூண்டுடன் சேரும்போது, இயற்கையாகவே பிரியாணி உணவு நோய்க்கு எதிராக செயல்படக்கூடியது என்பாத்து தெளிவாகிறது.
அதில் முக்கியமாக இவற்றில் உள்ள மெக்னீசியம், விற்றமின் பி6, ஆலிஸின், சல்பியூரிக் மூலக்கூறுகள் போன்றவை புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடியவை.
எந்த உணவும் அதிகமாக உண்டால் அது பாதிப்பை உண்டாக்கும்.
தயிர் சாதமாக இருந்தாலும் சரி சாம்பார் சாதமாக இருந்தாலும்சரி அடிக்கடி அதிகமாக சாப்பிட்டால் தயிர் சாதமும் சாம்பார் சாதமும் கூட உடலுக்கு பல உபாதைகள் தந்து விடும் என்பதும் மறுக்கவே முடியாத உண்மை தான்.
இதன்படி வாரம் ஒரு முறை பிரியாணி சாப்பிடுவதில் ஆரோக்கியகேடு ஒன்றும் இல்லை.
உடல் நலத்துக்கு வலிமை தரும் வேக வைத்த முட்டையுடன் கூடிய சிக்கன் மட்டன் இத்தியாதி அசைவ பிரியாணி (Briyani) உணவை சாப்பிடுவதோடு ,உடல் நலத்தையும் பேணுவோம்.
சுவையான கோழி பிரியாணி செய்முறை (Chicken Briyani recipe)