கல்சியம் நிறைந்த உணவுகள் (calcium)

கல்சியம் (calcium) ஏன் அவசியம்?

கல்சியம் (calcium) ,உடலுக்கு வேண்டிய சத்துக்களில் மிகவும் இன்றியமையாதது.மற்றும் வலுவான எலும்புகளுக்கும் ஆரோக்கியமான பற்களை உருவாக்கவும் , இதயத்துடிப்பு உட்பட தசை சுருக்கங்களை ஒழுங்குபடுத்தவும் கல்சியம் எமது உடலுக்கு முக்கியமானது.

அதோடு கல்சியம் இரத்தம் உறையும் தன்மையையும் உறுதிசெய்கிறது.

தற்போது அதிகமானோர்  முதுகு எலும்பு பிரச்சனைகள் ,மூட்டுவலியால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்திருப்பீர்கள்.இவற்றிற்கு காரணம் உடலில் கல்சியம் சத்தானது மிகவும் குறைவாக இருப்பதால் தான்.

கல்சியம் சத்து உடலில் குறைவாக இருந்தால், எலும்புகள் ஆரோக்கியமின்றி இருப்பதோடு, இரத்த செல்கள் உருவாவதிலும் பிரச்சனைகள் ஏற்படும்.

கல்சியம் எந்த உணவுகளில் உள்ளது ?

பால், சீஸ் மற்றும் பிற பால் உணவுகள், டோஃபு,சிறு மீன்கள் போன்றவற்றில் கல்சியம் (calcium)
அதிகமாக உள்ளது.

சைவ உணவு உண்பவர்கள், பச்சை இலை காய்கறிகள் – ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ் மற்றும் வெண்டிக்காய் (Ladies finger) சோயா பீன்ஸ் போன்றவற்றில் இருந்து பெறுக்கொள்ளலாம்.

பாதாமிலும் 80 சதவீதம் அளவுக்கு கல்சியம் நிறைந்துள்ளது. தினமும் 5-6 பாதாம்களை சாப்பிட்டு வருவது கல்சியம் சத்து அதிகரிக்க உதவும். பாலுடன் அரைத்த பாதாமை சேர்த்து பாதாம் பாலாகவும் சுவையாக குடிக்கலாம்.

காலை உணவுடன் ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸ் பருகி வருவதும் நல்லது. அதில் வைட்டமின் சி மட்டுமின்றி கல்சியமும் அதிக அளவில் நிறைந்திருக் கிறது.

அத்தி பழத்தில் கல்சியம் மட்டுமின்றி  இரும்பு சத்தும் நிரம்பியிருக்கிறது. அத்தி பழங்களை சாலட்டுகளாகவும், உலர்ந்த பழம் ஆகவும் சாப்பிடலாம். செரிமானம் சீராக நடைபெறவும் இது உதவும்.

கேழ்வரகில் (குரக்கன்) அரிசியை விட அதிக  கல்சியம் இருக்கிறது. கேழ்வரகு தோசை, ரொட்டி,குரக்கன் பிட்டு  போன்றவற்றை சாப்பிட்டு வரலாம். அவை கல்சியத்தின் அளவை அதிகப் படுத்தும்.

நாள்தோறும் வேறுபட்ட மற்றும் சீரான உணவை உட்கொள்வதன் மூலம் உங்களுக்கு தேவையான அனைத்து கல்சியத்தையும் நீங்கள் பெற முடியும்.

calcium foods

பொதுவாக எள்ளை (sesame) அதிகமாக சாப்பிட மாட்டோம். ஆனால் ஒரு டீஸ்பூன் எள்ளில், ஒரு டம்ளர் பாலில் இருக்கும் கல்சியம் சத்தானது நிறைந்துள்ளது.எனவே எள்ளு உருண்டை, நல்லெண்ணெய் (sesame oil) எள்ளுமா,எள்ளுசாதம் போன்றவற்றை உணவில்  எடுத்துக் கொள்ளலாம்.

கல்சியமும்  விற்றமின் டியும் இணைந்து வேலை செய்கிறது

அதுமட்டுமின்றி கல்சியம் உள்ள உணவுகளை மட்டும் சாப்பிட்டால், அனைத்தும் சரியாகிவிடாது. ஏனெனில் கல்சியத்தை உடலில் உறிஞ்சுவதற்கு விற்றமின் டி (Vitamin D) சத்து மிகவும் அவசியமாகிறது.

 

D-vitamin foods

எனவே கல்சியத்துடன், வைட்டமின் டி உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.உணவின் மூலம் இவற்றை எடுக்க முடியாவிட்டால் calcium supplement ( கல்சியம், விற்றமின் டி ) ஆக வாங்கி பயன்படுத்தலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *