சுவையான இலகுவான கரட் லட்டு (Carrot laddu)
கரட் லட்டு (Carrot laddu) பார்ப்பதற்கு நல்ல ரம்மியமான நிறத்தில் மெதுவாக இருக்கும்.மிக சுவையுடன் செய்வது மிக மிக எளிது.
Easy & tasty Carrot laddu!
செய்து சுவைத்து பாருங்கள்.
கரட்டில் அதிக அளவிலான நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துகள் அடங்கி உள்ளது. கல்சியம்,வைட்டமின் ஏ, டி, இ சத்துக்கள் அதிகம் நிறைந்தது கரட். கரட்டை பச்சையாக சாப்பிடும் போது அதிலுள்ள பெரும்பான்மையான சத்துக்கள் அப்படியே கிடைக்கும்.
பச்சையாக சாப்பிட விரும்பாதவர்களுக்கும் இந்த மாதிரி லட்டு (Carrot laddu) செய்து கொடுத்து கரட்டில் நிறைந்துள்ள சத்துக்களைப் பெற செய்யலாம்.
இந்த லட்டுக்கு தேங்காய்,கஜு, திராட்சை சேர்ப்பதால் சுவை அருமையாக இருக்கும்.குழந்தைகளுக்கு, பாடசாலையால் வரும்போது இடைநேர உணவாக செய்து கொடுக்கலாம்.
சுவையான கரட் லட்டு செய்வது எப்படியென பார்ப்போமா?
கரட்டில் விற்றமின் ஏ சத்து நிறைந்துள்ளது.இதனால் சருமம் அதிகம் வறட்சியடையாமல் தடுப்பதோடு, அழகிய பொலிவான சருமத்தை பெற உதவுகின்றது.தினமும் கரட் டை சாப்பிடுவதன் மூலம்சருமத்தை பாதுகாப்போம்.
நகம் மற்றும் முடியும் மிகுந்த அளவில் பாதுகாக்கப்படுகிறது.
குடல் புண்கள் வராமல் தடுக்கப்படுகின்றது.கரட் சாற்றுடன், எலுமிச்சைச்சாறு கலந்து சாப்பிட்டால் பித்த கோளாறுகள் நீங்கும்.
கோடைகாலத்தில் வெளியில் சென்று வரும்போது புறஊதா கதிர்கள் தோலை பாதிக்கிறது.கரட், தோல் கறுப்பாவதை தடுக்கிறது.தோலில் சிராய்ப்பு காயம்,அரிப்பு இருந்தால் கரட்டை பசையாக்கி தடவினால் அரிப்பு, சிவப்பு தன்மை போகும்.வேர்க்குரு மறையும்.
.
தோலில் ஏற்படும் பிரச்னைக்கு மேல்பூச்சு மருந்தாகிறது.தோலுக்கு வண்ணத்தை தருகிறது. புண்களை ஆற்றும் வல்லமை உடையது.கரட் கிருமிகளை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.வீக்கம், வலியை கரைக்க கூடியது.
கரட்டில் ஜூஸ், பாயசாம், அல்வா, கேசரி,கேக் என பலவகையான இனிப்பு பதார்த்தங்கள் செய்யப்படுகின்றன.
This is very interesting, You are a very skilled blogger.
I have joined your feed and look forward to seeking more of your fantastic post.
Also, I have shared your web site in my social networks!
Thank you very much