சிறுநீரகக் கற்கள் உருவாவதற்கான காரணங்களும் தடுப்பு முறையும் (Causes and Prevention of Kidney Stone)

பொதுவாக எல்லா நோய்களுக்கும் காரணமான தவறான உணவு பழக்கங்களே சிறுநீரில் கல் ஏற்படுவதற்கும் காரணம் (Causes and Prevention of Kidney Stone) . உணவுகள் மூலமே சரியாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆரம்பநிலையில் இருந்தால் இன்னும் மிக எளிது.

சிறுநீரக கற்கள் ஏற்படுவதற்கான காரணங்கள்

இறைச்சி மற்றும் முட்டைகோஸ், தக்காளி, காலிஃபிளவர், வெள்ளரி, சப்போட்டா போன்றவற்றை  உணவில்  அதிகளவு சேர்த்தல்.

தாகத்தின் போதும் கடுமையான உடற்பயிற்சிக்கு பின்பும் நீர் அருந்தாமை.

சிறுநீரக பையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்.

சிறுநீரிலும், இரத்தத்திலும், சுண்ணாம்புசத்து  (கல்சியம்) அதிகமிருத்தல்.

சிறுநீர் கழிக்க வேண்டுமென்ற உணர்வு ஏற்பட்ட பின்பும் சிறுநீரை அடக்கி வைத்தல்.

நெய், வெண்ணை, தக்காளி, முள்ளங்கி, பசலைக்கீரை, பட்டாணி, முந்திரி போன்றவற்றை அதிகம் உட்கொள்ளல்.

குறைந்த அளவு தண்ணீர் குடித்தல்.

கல்சியம் நிறைந்த உணவுகள்அதிகம் உண்பது.

சிறுநீர்பையில் சிறுநீர் தேங்குவது.

தைராய்டு நோய்.

அதிக உடல் எடை.

வேகமான மற்றும் முறையற்ற உடல்எடை குறைப்பு முயற்சிகள்.

எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் உண்ணுதல்.

மது, புகைப்பழக்கம்.

மரபு

சிறுநீரக கற்களைக் கரைக்க உணவு முறை

ஒரு நாளைக்கு அதிக  தண்ணீர் குடிக்க வேண்டும். அதுவும் வெதுவெதுப்பான நீரை பருகுதல் நல்லது.

வெயில்காலத்தில் இளநீர், மோர், அதிகமாக குடிக்கவும்.

மக்னீசியச்சத்துள்ள உணவுகள் சாப்பிடுவது நல்லது.

நார்சத்து மிகுந்த உணவை அதிகம் சாப்பிட வேண்டும்.

திராட்சை, ஸ்ட்ராபெர்ரி, ராச்ப்பெர்ரி போன்ற பழவகைகளையும், பூசணிக்காய், சுரைக்காய், புடலங்காய் வாழைத்தண்டு போன்ற நீர்ச்சத்து மிகுந்த காய்களையும், தர்பூசணி , ஆப்பிள், எலுமிச்சை பழச்சாறுகள் சிறுநீரக கற்களை கரைக்கும் தன்மை கொண்டது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வரவும்.

சிறுநீரக கற்களைக் கரைக்க வீட்டு வைத்தியம்

வாழை தண்டு சாறு தினமும் காலையில் குடித்து வரலாம்.

பார்லியை நன்கு வேக வைத்து நிறைய தண்ணீரோடு குடித்து வந்தால், அதிக சிறுநீர் வெளியேறி சிறுநீரகத்தில் உப்பு சேர்வது தடுக்கப்படும். வாரத்தில் ஒருமுறை இதை செய்யலாம்.

எலுமிச்சை தினசரி 4 தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை இரண்டு லிட்டர் தண்ணீருடன் கலந்து சிறிது சிறிதாக குடித்து வர வேண்டும்.
புதினா கீரையை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்கள் பலப்படும்.

வெறும் வயிற்றிலே அத்திப் பழங்களை நிரம்ப உண்டு வந்தால், மூத்திரப்பையிலுள்ள கற்கள் அகலும்.அல்லது அத்திபழத்தை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வரலாம்.

சிறுநீரக கற்களைக் கரைக்க தவிர்க்க வேண்டியவை

  • புரோட்டீன் அதிகமுள்ள இறைச்சி போன்ற பொருட்களை தவிர்ப்பது நல்லது.
  • தினமும் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்யுங்கள். அதன் மூலம் ரத்தத்தில் உள்ள கல்சியம் சத்து எலும்புகளுக்கு சென்றடையும்.
  • பால், வெண்ணை பூண்டு கருணைகிழங்கு, பசலைக்கீரை, முள்ளங்கி போன்றவற்றை குறைவாக சாப்பிட வேண்டும்.
  • உணவில் உப்பை குறைத்தல்.இதன் மூலம் சிறுநீரகத்தில் கல்சியத்தின் கடுமை குறையும்.
  • பதப்படுத்த உணவு மற்றும் சிப்ஸ் வகைகளை தவிர்க்கவும்.
  • காபி, டீ, ஐஸ்கிரீம் குறைவாக சாப்பிடுவது நல்லது.

துரித உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளை உண்டு வர  (Causes and Prevention of Kidney Stone) சிறுநீர்கற்கள் தானாகவே அகன்றுவிடும். எப்போதுமே தோன்றுவும் மாட்டாது.

Leave a Reply

Your email address will not be published.