20 வயதின் தடுமாற்றங்கள் (Changes in the 20 years)

20 வயதென்பது (Changes in the 20 years)ஒருவரின் வாலிப வயதின் முதற்கட்டம். இந்த வயது பருவத்தில் தான் வாழ்வில் பல முக்கியமான மாற்றங்கள் நிகழும் .அதிகமான குழப்பங்கள், தடுமாற்றங்கள் எழும்.

இவை எமக்கும் வந்ததா அல்லது வந்துள்ளதா அல்லது வரவிருக்கிறதா என்பதை சிந்தித்து தெரிந்து கொள்ளுங்கள்.

படித்து முடித்ததும் என்ன செய்வது?

20 வயது (Changes in the 20 years)என்பது உயர்தர படிப்பில் இருக்கும் அல்லது உயர்தர படிப்பை முடித்த ஒரு வயதாகும். இந்த வயதினர் சந்திக்கக்கூடிய முதல் பிரச்சனை “எனது உயர்தர படிப்பு முடிந்தவுடன் நான் என்ன செய்ய போகின்றேன்” என்பதாகும்.

இந்த கால கட்டத்தில் உயர்கல்வியை தொடர்வது பற்றிய ஆலோசனைகளும் அதிகமாக கேள்விப்படக்கூடும். அதனால் இந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் சரியான ஒரு முடிவையோ சரியான தொழில்முறை  அல்லது உயர்கல்வியையோ தொடர வேண்டும்.

தவறினால்  விரும்பாத உயர்கல்விக்கோ முடிவுக்கோ தள்ளப்படுவீர்கள். இதனால் வாழ்க்கையை கெடுத்துக்கொள்ள வேண்டிவரும்.20 வயதின் தடுமாற்றங்கள்,Changes in the 20s,அன்னைமடி,20 வயதின் மாற்றங்கள்,20 வயதினரின் எதிர்கால தீர்மானம்,annaimadi.com,20 years age problem     

நீங்கள் படிப்பதற்கு தெரிவு செய்யும் துறையில் வேலை வாய்ப்புகள்,சம்பளம் போன்ற விபரங்களை இணையம் மூலமாகவோ தெரிந்தவர்கள் மூலமாகவோ சரியாக அறிந்துகொள்ளுங்கள்.

இதனால்.படித்து முடித்து விட்டு பிறகு வேலைக்கு அலைந்து திரியும் நிலையை  முன்கூட்டியே தவிர்க்கலாம் அல்லவா.

வேலை

20 வயதிலேயே (Changes in the 20s) இன்று அதிகமானோர் வேலைக்குச் செல்கின்றனர். இன்றளவில் இது ஒரு பிரபலமான ஒன்றாக உள்ளது.

ஒருவகையில் நல்ல முடிவு தான்.ஏனெனில் தொடர்ந்து படிப்பதால் ஏற்படும் சலிப்பு இல்லாமல் போகின்றது.ஒரு இடைவெளி எடுத்து ,சம்பாதிப்பதோடு தொழில் அனுபவங்களையும் சிறு வயதிலேயே அறிந்து கொள்ள முடியும்.

உங்களுக்கான பணத்தேவைகளை நீங்களே பூர்த்தி செய்து கொள்ள முடியும். உங்கள் காலிலேயே நீங்கள் நிற்க முடியும்.

சிறிது காலத்தில் திரும்ப படிப்பதற்கு நல்ல புத்துணர்வும் கிடைக்கும்.வெளிநாடுகளில் இந்த நடைமுறைகள் தான் பின்பற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

 20 வயதின் தடுமாற்றங்கள்,Changes in the 20s,அன்னைமடி,20 வயதின் மாற்றங்கள்,20 வயதினரின் எதிர்கால தீர்மானம்,annaimadi.com,20 years age problem

காதலில் விழும் வயது (Changes in the 20 years)

அதிகமானோர் காதலில் விழுவதும் மற்றும் காதலில் தோல்வியடைவதும் இந்த வயதில் தான். எடுக்கும் தீர்மானத்தை மிகவும் தொலைநோக்கு பார்வையில் யோசித்து எடுக்காத வயதும்கூட.

ஆகவே காதலினால் ஏற்படக்கூடிய பிரச்சனையும் அதிகம். ஆனால் சரியாக இதனை கட்டுப்பாட்டிலும் திட்டமாகவும் வைத்துக்கொள்ளக்கூடியவர்கள் தமது வாழ்க்கையில் அழகான சரித்திரத்தையே உருவாக்குகின்றனர்.

20 வயதின் தடுமாற்றங்கள்,Changes in the 20s,அன்னைமடி,20 வயதின் மாற்றங்கள்,20 வயதினரின் எதிர்கால தீர்மானம்,annaimadi.com,20 years age problem

வருமானமும்  சேமிப்பும்

அடுத்த பிரச்சினையான கேள்வி பணம் அல்லது வருமானம். ஆனால் பணம் பெறுவது பெரிய சிக்கல்  இல்லையென்றாலும்  பெர்ரவர்களிடமோ சகோதரர்களிடமோ தங்கியிருப்பது கௌரவ குறைச்சலாக எண்ணத்தோன்றும்.

அதனால் வீட்டை எதிர்பார்த்திருந்தது  போதும்,வீட்டிற்கு சுமையாக இருந்தது போதும், அவர்களுக்கு கொடுத்த சங்கடம் போதும் என்று எண்ணக்கூடும். இதன் விளைவாக இந்த வயதில் பகுதி நேர வேலைக்கு செல்லவும் கூடும்.

பணம் சற்று கிடைத்துவிட்டால் அவற்றை எவ்வாறு சேமிப்பது என்பது பற்றி ஆண்களை விட பெண்களுக்கே தெரியும். ஆண்களுக்கு தெரிந்ததெல்லாம் செலவு மட்டுமே! அதனால் ஆண்களுக்கு சேமிப்பது பற்றி அறிவில்லாதது என்பது ஒரு தேசிய பிரச்சனையாக அமைந்துள்ளது.

குடும்பப் பொறுப்பு

20 வயது (Changes in the 20s) என்பது வீட்டுப் பொறுப்பு கைக்கு வரக்கூடிய சந்தர்ப்பம் நிறைந்த வயதாகும். யாரும் பலவந்தமாக உங்கள் மீது பொறுப்பை தராவிட்டாலும், நீங்களாகவே பொறுப்பை எடுக்க முயல எண்ணும் ஒரு வயதாகும்.

பெற்றோரின் பொறுப்புகளில் பங்கெடுத்தல் , வீட்டிற்கு ஒரு சேமிப்பை மேற்கொள்ள, சகோதரங்களின் பொறுப்புகள் , அவர்களின் படிப்பு பற்றிய கரிசனை போன்ற விடயங்களில் கவனம் செலுத்த வேண்டிய எண்ணப்பாடுகள் இருக்கும்.

இவை தான் இருபது வயதை அடைந்த ஒரு சாதாரண ஒருவருக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகள். இம்மாதிரியான குழப்பங்களுக்கு சிந்தித்து ,திட்டமிட்டு  நல்ல தீர்வினைக் காண்பதன் மூலம் எதிர்கால வாழ்க்கையே சரியான முறையில் அமைத்துக் கொள்ளமுடியும்.

அதாவது வாழ்வில் சரியான இலக்கை அடைய முடியும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *