மாறிவரும் உணவு முறை தான் நோய்கள் உருவாக காரணம் (Changing diet is the cause of diseases)

நாம் உண்ணும் உணவு உயிர் வாழ மட்டுமல்லாது, நோய் வலி எதுவும் இல்லாமல் ஆரோக்கியமுடன் வாழ்வதற்கும் ஆகும்.
உணவே மருந்து என்ற காலம் மாறி இன்று மருந்தே உணவாகி போனது.பிறக்கும் குழந்தையில் இருந்து இறக்கும் முதியோர் வரை அனைவருமே மருந்து மாத்திரைகளை நம்பி வாழும் காலத்தில்  வாழ்கின்றோம். இதற்கு காரணம் நம் பாரம்பரிய உணவு பழக்கம் மாறி துரித உணவுகளுக்கு (Changing diet is the cause of diseases) அடிமையாகி போனதே.

புராண காலந்தொட்டு மன்னர் காலம் வரை நம் மூதாதையர்கள் பின்பற்றிய உணவு பழக்கம் தற்போது படிப்படியாக மாறி அழிந்து போகும் நிலையில் உள்ளது.

நம் முன்னோர்கள், கிடைக்கும் உணவை இயற்கை தன்மை மாறாமல் சமைத்து உண்டு வாழ்ந்து வந்துள்ளனர். அதனால் நோயின்றி ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.

ஆனால் நாம், நம் பாரம்பரிய உணவுவு முறையில்  இருந்து மாறி போனதால், புதிது புதிதாக பல நோய்களை எதிர்கொள்கின்றோம்.

இயற்கையாக விளைந்த சத்துள்ள உணவு வகைகளை சாப்பிடுவதை நிறுத்தி விட்டு நம்மில் பலர் செயற்கை உணவு வகைகளுக்கு(Changing diet is the cause of diseases) மாறியுள்ளோம்.


எனவே இனியாவது பாரம்பரிய உணவு முறைகளை பின்பற்றி நோய்கள் இன்றி வாழத் தொடங்குவோம்.

உணவுமுறை மாறி போனதற்கு காரணங்கள் (Changing diet is the cause of diseases)

இன்றைய தொழில்நுட்ப உலகம்,மீதமான உணவை குளிர்சாதன பெட்டியில் பதப்படுத்தி அதிகமாக சாப்பிட தொடங்கிவிட்டது.

இது சோம்பலை அதிகப்படுத்தும் அதே தருணம் உடலுக்கும் கிருமிகளின் மூலம் அதிக பாதிப்பை உண்டாக்கும். இன்றோ அதிகமாக சமைத்து குளிர்சாதன பெட்டியில் வைத்து உண்ணும் பழக்கும் வந்துவிட்டது.

குறிப்பாக மாமிச புரத உணவுகள் குளிர், மீண்டும் சூடாக்குதல் போன்றவற்றால் வேறு விதமாக மாறி அதன் உண்மையான தன்மையுடன் இருக்காது. இது உடலுக்கு தீங்கு விளைவிப்பது உறுதி.

நமது பாரம்பரிய உணவு பழக்கமும் உணவும் விஞ்ஞான அடிப்படையில் அமைந்து இருந்தது.நமது முன்னோர்களின் உணவு முறை உடலில் உள்ள ஜீரண மண்டல நொதிகளை சீராக செயல்பட வைக்கும்.

நம் உணவு குழாயில் நன்மை தரும் நுண்கிருமிகள் உள்ளன.அவற்றை சிறப்பாக செயல் பட வைக்க உதவுகிறது நம் பாரம்பரிய உணவு முறை. உயர் வேதியியல் பொருட்கள் சீராக செயலாற்ற வெப்ப நிலையை தூண்டுகிறது.

தற்போது ரத்த கொதிப்பு சாதாரண வியாதியாகி போனதற்கு காரணம் நமது உணவு முறையின் (Changing diet is the cause of diseases) மாற்றமே.

நமது மூதாதையரின் உணவு முறை ரத்த ஓட்டத்தை சீராக்கி உடலின் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது.

மிளகு,வத்தல், பூண்டு போன்றவற்றை சாப்பிட்டு வந்ததால் அவர்கள் கேன்சர் (Cancer) சொரியாசிஸ், வாதம் போன்ற நோய்கள் வராமல் தங்களை தற்காத்து இருந்துள்ளனர்.

சுக்கு மிளகு திப்பிலி இவை மூன்றுக்கும் நிகரான மருந்து எந்த மருந்துவ உலகிலும் கிடையாது.

Changing diet is the cause of diseases,annaimadi.com,fast foods cause disease,unhealthy foods,medicine as food

ஆனால் நமது நவீன தொழில்நுட்ப வளர்ச்சியாக மாறி போன உலகில் இந்த உணவு பழக்கம் மாறி இளைய தலைமுறையை வெகுவாக பாதிக்கப்படுகிறது.

அமெரிக்காவில் நடத்திய ஆய்வு ஒன்றில் இந்தியாவின் சிறந்த காலை உணவாக இட்லியை கூறியுள்ளது.

நமது நாட்டு உணவு வகையான இட்லி, அவியல், சாம்பார், ரசம், கேழ்வரகு, கம்பு, திணை, எள், சிகப்பு அரிசி, பெருங்காயம், கசகசா, குதிரைவாலி போன்றவை உடலுக்கு நல்ல வலிமையையும் ஆரோக்கியத்தையும் அளிக்கிறது.

இன்று நேரமின்மை, வேலைப்பளு  காரணமாக  ரெடிமேடாக கிடைக்கும் உணவுகளுக்கு அநேகர் அடிமையாகிவிட்டோம். வீட்டில் சாப்பாடு செய்யும் பழக்கம் குறைந்து வருகிறது.

இந்த சோம்பலே வாழ்க்கை நமது நோய்க்கு காரணமாக அமைந்துள்ளது. அன்று குழம்பில் சேர்க்கப்படும் மிளகாய் பொடி கூட வீட்டில் தாமாகவே தயாரிப்பதாக இருந்தது. அதனாலேயே குழம்பு நல்ல மணமாகவும் ருசியாகவும் இருந்துள்ளது. Changing diet is the cause of diseases,annaimadi.com,fast foods cause disease,unhealthy foods,medicine as food

பாக்கெட் உணவு காலம்

வேதியல் பொருட்களின் மாற்றம் கூட தெரியாமல் போய் விட்டது.காலாவதியான உணவு பொருட்கள் தான் தற்போது கடைகளில் பளபளப்பான வண்ணங்களில் காட்சியளிக்கிறது. நாம் உட்கொள்ளும் ஒவ்வொரு பொருளும் வாழ்க்கைக்கு எதிரியாக மாறி சமூகத்தை அழித்து வருகிறது.

மாறிவரும் இன்றைய நாகரீக உணவு முறையால் நீரிழிவு, இதய நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு வருகிறது.

நமது நாட்டு இட்லி, அருமையான சாம்பார், அவியல், ரசம் மேலும் உணவில் கேழ்வரகு, கம்பு, திணை, சாவி, குதிரைவாலி, காணம், எள், சிகப்பு அரிசி, பெருங்காயம், கசகசா போன்ற பொருட்கள் எல்லாம் உடலை வலுவாக்கியது. வாழ்வும் தந்தது.

தற்போதைய காலத்தில் எது தான் கிடைக்காது பாக்கெட்டில்.

வெட்டிய மரக்கறிகள், புளி பவுடர், புளி திரவம், தேங்காய் பவுடர், ரெடிமேட் மசாலா பவுடர், சிக்கன் பவுடர் என எல்லாமே பவுடராக வாங்குகின்றனர்.

இப்பவுடர்கள்,பல நாட்களுக்கோ,மாதங்களுக்கோ கேட்டு போகாமல் இருக்க சேர்க்கப்படும் இரசாயனங்கள் ,நமது உடலுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றது.இதனால் நாமே நோய்களை வரவழைத்துக் கொள்கிறோம்.

சிறுவர்கள் உண்ணும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவு கெட்டுப்போனதாக இருப்பது தெரியாமல் பயன்படுத்தப்படுகிறது. மற்றும் பல வேதியியல் பொருட்கள் மாற்றம் அடைந்துள்ளது என்று தெரியாமலும் பயன்படுத்துகின்றனர்.

அந்த காலத்தில் உணவு பழக்கம் சமைக்கும் முறை மற்றும் பரிமாறும் விதம் போன்ற யாவும் ஆரோக்கியத்தை முன் நிலைப்படுத்துகிறது .

தலை வாழையிலையில் உண்ணும் பழக்கம் இன்றளவும் நம் கல்யாண வீடுகளில் காண்கிறோம்.

பச்சை நிறம் பசியை தூண்டும் தன்மை உடையது என்பதாலே பசுமை நிறைந்த வாழை இலையில் பரிமாறுகின்றனர்.

அந்த கால பாரம்பரிய உணவு முறையில் அசைவ உணவாக சேவலை மட்டுமே உணவாக்கி உண்டனர்.

annaimadi.com,changing food culture cause diseasea,changing diet cause disease,

உடலுக்கு தேவையான சத்துப் பொருட்கள் சரியான அளவில் இருப்பதாலும் பெண் கோழிகளை சாப்பிட்டால் அதன் இனம் அழியக் கூடும் என்று எண்ணி சேவலை மட்டுமே உணவாக்கி கொண்டனர்.

அனைத்து நாடுகளும் நம் பாரம்பரிய உணவை போற்றி பாராட்டுகின்றனர்.

கையால் சாப்பிடும் போது உணவை தொட்டதும் மூளைக்கு தகவல் சென்று உணவுக்கு ஏற்றார்போல் உடலை மூளை தயார் செய்து எந்த வித சிக்கலும் இல்லாமல் சரியாக ஜீரணமாகும்.

ஆனால் இன்று கரண்டியால் சாப்பிடுவதை நாகரீகமாகவும் மரியாதையாகவும் எண்ணுகிறார்கள்.

பிறர் ஊட்டி விட்டு சாப்பிடும் போது அளவிற்கு அதிக சாப்பிட கூடும்.எனவே ஊட்டி விட்டால் உடலில் ஒட்டாது என்று பாட்டிகள் சொல்வது இதற்கு தான்.

ஆனால் கையால் உணவை உண்ணும் போது அளவாகவும் ரசித்தும் ருசித்தும் சாப்பிட முடியும் மறந்து போன நம் பாரம்பரிய உணவை கூட இன்றும் மேலை நாடு பயன்படுத்த தொடங்கி விட்டது.

நாம் இப்படி உட்கொள்ளும் ஒவ்வொரு பொருளும் நமது வாழ்க்கைக்கு எதிரியாக இருக்கிறது. மற்றும் இன்று சமுதாயத்தை அழித்து கொண்டு வருகிறது.

நாமும் நம் முன்னோர்களின் பயணிப்போம் நோயிலிருந்து தற்காத்துக் கொள்ளவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *