சிம்பிள் சிக்கன் புலாவ் (Healthy Chicken pulao)
ஆரோக்கியமான மிகவும் இலகுவான முறையில் சிக்கன் புலாவ் (Chicken Pulao) செய்வது எப்படி?
சிக்கன் பிரியாணி, பட்டர் சிக்கன், சிக்கன்65, வாட்டியகோழி (Grill chicken) என எல்லா வகையான சிக்கன் உணவுகளுமே குழந்தைகள் முதல் அனைவருக்கும் மிக பிடித்தமான ஒன்று.
வேலைக்கு, பள்ளிக்கு மதிய உணவாக செய்து எடுத்து செல்லும் அளவிற்கு மிக குறைந்த நேரத்தில் ஒரு சுவையான விரைவாக தயாரிக்க கூடிய உணவு இது.
புலாவ்,பிரியாணி செய்வதற்கு பஸ்மதி அரிசியே மிகவும் பொருத்தமாக இருக்கும். இங்கு சுவையுடன் ஆரோக்கியம் கருதி பிரவுன் பஸ்மதி(Basmati) அரிசி பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் சாதாரண வெள்ளை பஸ்மதி அரிசியை விட பிரவுன் பஸ்மதி (Brown basmati) அரிசியில் நார்ச்சத்து அதிகம்.
சிக்கன் புலாவ் செய்ய தேவையான பொருட்கள் (Ingredients )
பிறவுன் பஸ்மதி அரிசி – 250 கிராம்
கோழி துண்டுகள் – 300 கிராம்
பெரிய வெங்காயம் – 1
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய்- 2
மிளகு – 4
கராம்பு – 4
பிரியாணி இலை – 2
அன்னாசிப்பூ /நட்சத்திர சோம்பு (Star anise) – 2
இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
தனியா தூள் – 1 டீஸ்பூன்
சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள்- 1 டீஸ்பூன் (விரும்பிய அளவு)
கரம் மசாலா- 1/2 டீஸ்பூன்
புதினா இலைகள் – 6
உப்பு – சுவைக்கு ஏற்ப
சிக்கன் புலாவ் செய்முறை (Chicken Pulao recipe)
- அரிசியைக் கழுவி நீர் விட்டு 5 நிமிடம் ஊற வைக்கவும்.
- வெங்காயத்தை மிக மெல்லியதாக நீளமாக வெட்டவும்.
- அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய், நெய் விட்டு சூடானதும் பிரியாணி இலை,மிளகு, கராம்பு, நட்சத்திர சோம்பு, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு (3 நிமிடம்) வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து அதையும் வெங்காயத்துடன் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- அதில் தனியாதூள், கரம் மசாலா,மிளகாய் தூள்,சீரகதூள் சேர்த்து கலக்கவும்.
- உடனேயே சிக்கன் துண்டுகளை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். சிக்கன் எலும்பு துண்டுகளையும் சேர்த்தால் சுவை இன்னும் அதிகமாக இருக்கும்.
- ஊற வைத்த அரிசியை சேர்த்து கிளறவும். அதில் 2 ½ கப் அல்லது நீர் (chicken stock) ,தேவையான அளவு உப்பு, மிக சிறிதாக வெட்டிய புதினா இலைகளையும் சேர்த்து கொதிக்கவிடவும். புதினா புலாவிற்கு நல்ல வாசனையைக் கொடுக்கும்.
- நடுத்தர வெப்பத்தில் சுமார் 20 நிமிடங்களுக்கு மூடி வேகவிடவும்.வெந்ததும் அதில் உள்ள பிரியாணி இலை,நட்சத்திர சோம்பை எடுத்து விடவும்.
- சுவையான சிக்கன் புலாவ் (Chicken Pulao) ரெடி..!.
- வெங்காய தயிர் பச்சடி, அவித்த முட்டையுடன் சூடாக பரிமாறலாம்.