கறுப்பு கொண்டைக்கடலை குழம்பு (Chickpea curry)

கறுப்பு கொண்டைக்கடலைகுழம்பு  அருமையான சுவையில் (Chickpea curry)

கறுப்புக் கொண்டைக்கடலை (Chickpea) பொதுவாகச் சுண்டலாகவும் குழம்பில் சேர்க்கப்பட்டும் சாப்பிடப்படுகின்றது. பழுப்பும் கறுப்பும் கலந்த நிறத்தில் சிறியதாக புரதசத்து  நிரம்பியதாக உள்ளது.

கொண்டைக்கடலையை தினமும் சிறிது சாப்பிட்டு வந்தால், பழங்கள் மற்றும் காய்கறிகள் மூலம் கிடைக்கும் சத்துக்களைப் பெறலாம்.மேலும், எடையைக் குறைக்கவும், இதய நோயைக் கட்டுப்படுத்தவும்  பயன்படுகின்றது.

கொண்டைக்கடலை குழம்பு சுவையாக செய்வது எப்படி என வீடியோவில் காணலாம்.

பிட்டு,இடியப்பம்,ரொட்டியுடன் சேர்த்து சாப்பிட மிக அருமையாக இருக்கும்.செய்து சுவைத்து பாருங்கள்!

ப்ரௌன் நிற கொண்டக்கடலையில் (Chickpea)நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அவை உடல் எடை குறைய உதவி புரியும். அதிலும் இதனை தினமும் 1/2 கப் வேக வைத்து சாப்பிட்டு வந்தால், வயிறு நிறைவதோடு, நீண்ட நேரம் பசி எடுக்காது.

அதனால் கண்ட உணவுப் பொருட்களை உட்கொள்ளாமல், உணவில் கட்டுப்பாட்டுடன் இருக்கலாம்.

 brown chickpea,rich in protein,annaimadi.com,

  • கறுப்பு கொண்டைக்கடலையில் ,வெள்ளைக் கொண்டைக்கடலையைவிட  நார்ச்சத்து அதிகம், சர்க்கரையை வெளியிடும் பண்பும் குறைவு.
  • கறுப்பு கொண்டைக்கடலையில் போலி அமிலத்துக்கு அடிப்படையான போலேட்டும் மக்னீசியமும் போதுமான அளவில் உள்ளன. இது மாரடைப்பு காரணியான ஹோமோசிஸ்டினை (Homocysteine) கட்டுக்குள் வைத்து, அந்நோய் வராமல் பாதுகாக்கும் உன்னத உணவு.
  • கர்ப்பிணிகளுக்கு அவசியத் தேவையான ஃபோலிக் அமிலம், ஆன்டிஆக்சிடண்ட் தன்மை கொண்ட  வேதிப்பொருட்கள் அதிகமுள்ளன.
  • சர்க்கரையை மெதுவாக வெளியிடுவதால்,நீரிழிவு நோயாளிகள் இதைத் தொடர்ச்சியாகச் சாப்பிடலாம்.
  • இதன் சாறு இரும்புச்சத்து நிரம்பியது. இரும்புச் சத்து குறைபாடு, ரத்தசோகையைத் தடுக்க உதவுகிறது.
  • இதில் இரும்புச்சத்து, சோடியம், செலெனியம், சிறிதளவு துத்தநாகம், மாங்கனீசு, தாமிரம் போன்ற கனிமச்சத்துகள் உள்ளன.
  • அளவுடன் சாப்பிட்டால் செரிமானக் கோளாறு, வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்றுமந்தம் தீர்க்க உதவும்.
  • ரத்தநாளங்களில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது.

கறுப்புக் கொண்டைக்கடலையில் செய்யப்படும் கேரளக் கடலைக்கறி மிகவும் பிரசித்தமானது.

இது முளை கட்டப்பட்டுச் சாலட்களில் சேர்க்கப்படுகிறது.கெட்டி குழம்பு, சூப்புகளில் பயன்படுத்தப்பட்டுகிறது.

கறுப்புக் கொண்டைக்கடலை புரதம் நிரம்பியது என்பதால், இறைச்சிக்கு மாற்றாகக் கருதப்படுகிறது. சைவ உணவு உண்பவர்களுக்கும்,புரதச் சத்துக் குறைபாடு உள்ளவர்களுக்கும், இது சிறந்த புரதசத்திற்கான ஆதாரம்.

Leave a Reply

Your email address will not be published.