குழந்தைகளின் வயிற்றுப்போக்கிற்கு இயற்கை வைத்தியம் (Child diarrhea)
குழந்தைகளுக்கு வரும் வயிற்றுப்போக்குக்கு (Child diarrhea) பல காரணங்கள் உண்டு. குறிப்பாக, குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவு கவனிக்கப்பட வேண்டியது மிக அவசியம்.
ஏனென்றால் ஜீரணம் எளிதில் ஆகாமல் இருப்பது,ஒவ்வாமல் இருப்பதும் வயிற்றுப்போக்குக்கு மிக முக்கிய காரணம்.
வயிற்றுப்போக்கு தானே என்று அலட்சியம் செய்யக் கூடாது. உயிரையே பறித்துவிடும் அளவுக்கு மோசமானது இது. வயிற்றுப்போக்கால், ஒரு நாளைக்கு 1,600 வீதம், வருடத்துக்கு 6 லட்சம் குழந்தைகள் உலகம் முழுக்க மரணமடைகிறார்கள்.
வயிற்றுபோக்கு காரணம் மற்றும் வீட்டு வைத்தியங்கள்
வயிற்றுப்போக்கு வருவதற்கு இது தான் காரணம் என்று வரையறுக்க முடியாது. பெரும்பாலும் உணவு ஒவ்வாமை, பாக்டீரியா, வைரஸ் தொற்று, ஒட்டுண்ணிகள் போன்றவை காரணமாகிறது.
மேலும் அசுத்தமான நீரைக் குடிப்பவர்கள், உடலில் நோய் எதிர்ப்ப்புசக்தி குறைவாக இருப்பவர்கள், அசுத்தமான இடத்தைச் சுற்றி இருப்பவர்கள், குழந்தைகளாக இருந்தால் தாய்ப்பால் குடிக்காத குழந்தைகள் போன்றவர்கள் எளிதில் வயிற்றுபோக்கு(Child diarrhea) பிரச்சனையை சந்திக்கிறார்கள்.
வயிற்றுப்போக்கினால் ஏற்படும் பாதிப்புகள்
வயிற்றுப்போக்கு உண்டானால் முதலில் உடலில் இருக்கும் நீர்ச்சத்து அளவு குறையும், இதனால் நீர்ச்சத்து பற்றாக்குறை உண்டாகும்.
அடுத்து உணவுகள் செரிமானமாகாததால் உணவிலிருந்து உடல் பெறக்கூடிய ஊட்டச்சத்துகள் கிடைக்காமல் இருக்கும். அதனால் போதிய ஊட்டச்சத்தின்றி ஊட்டச்சத்து குறைபாடும் ஏற்படும்.
நீருடன் வெளியேறும் வயிற்றுப்போக்கால் உடலில் இருக்கும் நீரின் அளவு மட்டும் வெளியேறாமல் நீரில் இருக்கும் நுண்சத்துகளும் வெளியேறிவிடும்.
இவை தொடரும் போது உடல் வலுவிழக்க தொடங்கும் . கண்கள் நீரின்றியும் வாய் உலர்ந்தும் போக வாய்ப்புண்டு.
வயிற்றுப்போக்குக்கான வீட்டில் வைத்தியம் (Home medicin for Child diarrhea)
வயிற்றுபோக்கை உணர்ந்ததும் சுத்தமான நீரை காய்ச்சி வடிகட்டி ஒரு டம்ளர் எடுத்து அதில் கால் டீஸ்பூன் உப்பு மற்றும் அரை டம்ளர் சர்க்கரை சேர்த்து குடிக்கலாம். தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை குடிக்க வேண்டும்.
- சர்க்கரை சேர்க்காத பழச்சாறுகள் எடுத்துகொள்ளலாம். கோடை காலமாக இருந்தால் மோர், எலுமிச்சைச்சாறு
- இளநீர் குடிக்கலாம்
- வெளியேறும் நீரின் அளவுக்கேற்ப அதை ஈடு செய்யும் வகை யில் தண்ணீர் ஆகாரம் எடுத்துகொள்ள வேண்டும்
- சீரக தண்ணீர் தண்ணீரில் சீரகத்தை சேர்த்து 10 நிமிடம் நன்கு சூடாக்கவும். அதனை வடித்து சிறிது குளிர வைத்து குடிக்கவும். இதனை ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு முறை செய்யவும்.
- தேயிலை இலைகளை தண்ணீரில் போட்டு சிறிது நேரம் கொதிக்க வைக்கவும். 5 நிமிடங்கள் கொதித்த பிறகு, அதை வடிகட்டி, எலுமிச்சை சாற்றை அதனுடன் கலக்கவும்.ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்கவும்.
வயிற்றுப்போக்கின் போது மாதுளம்பழம் உட்கொள்ளலாம். இது உடலின் பலவீனத்தையும் அகற்றும். கரட் வயிற்றுபோக்கிற்கு நல்ல மருந்து.குழந்தைகளுக்கு கரட்ஜூஸ்,கரட் சூப் செய்து கொடுக்கலாம்.
வயிற்றுப்போக்கைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்8To prevent child diarrhea)
- நீரிழப்பைத் தவிர்க்க, நிறைய தண்ணீர் குடிக்கவும்.
- வயிற்றுப்போக்கு ஏற்படக்கூடும் என்பதால் எண்ணெய் உணவுகளை தவிர்க்க வேண்டும்.
- உணவுக்கு முன்னும் பின்னும் கைகளையும் வாயையும் நன்கு சுத்தம் செய்யுங்கள். உங்கள் உடலையும் சூழலையும் சுத்தமாக வைத்திருங்கள்
- முதலில் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறாமல் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எந்த வகை மருந்துகளையும் கொடுக்க வேண்டாம்
- உங்கள் குழந்தை தனது ஊட்டச்சத்துக்காக தாய்ப்பாலை முழுமையாக சார்ந்துள்ளது மற்றும் 6 மாதங்கள் கூட ஆகவில்லை, இந்த சூழ்நிலையில் பாதுகாப்பான வீட்டு வைத்தியம் தாய்ப்பாலாகும். உங்கள் குழந்தைக்குத் தொடர்ந்து தாய்ப்பால் ஊட்டவும், ஏனெனில் அது குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும்.
- ஜவ்வரிசி தண்ணீர் குழந்தைகளின் தளர்வான அசைவுகளுக்கு மற்றொரு அற்புதமான வீட்டு வைத்தியம். ஜவ்வரிசியை தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைத்து, பின்னர் ஜவ்வரிசி மென்மையாகி முற்றிலும் தண்ணீரில் மூழ்கும் வரை கொதிக்க வைக்கவும். அதை வடிகட்டி குழந்தைக்கு ஊட்டவும்.