குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கான உணவுகள்(Children’s brain development food)
ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அது தாண்டா வளர்ச்சி…. என்ற பாடல் வரிகளின் பொருள் உடல் வளர்ச்சிக்கான உணவுடன் மூளை வளர்ச்சிக்கும் உணவுகள் (Children’s brain development food) எடுத்துக் கொள்ள வேண்டும். அதுவும் சிறு வயதில் ஆரோக்கியமான உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டியது அவசியமாகிறது.
ஏனெனில் குழந்தையின் அறிவாற்றல் மற்றும் செயல்திறனில் மூளையின் வளர்ச்சி என்பது மிகவும் முக்கியமானது.
சிறு வயதில் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொண்ட குழந்தைகளின் ஐக்யூ நன்றாக இருக்கிறது என்கிறார்கள் நிபுணர்கள்.
ஒரு குழந்தையின் மூளையானது 5 வயது வரை 90 % வரை வளர்ச்சி அடைகிறது. எனவே இந்த கால கட்டத்தில் குழந்தைக்கு ஊட்டச்சத்துக்கள் மிகுந்த உணவுகளை (Children’s brain development food) வழங்க வேண்டும்.
பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு நல்ல மூளை வளர்ச்சியைத் தரும் உணவுகளை (Children’s brain development food) தர வேண்டும். உணவானது உடலுக்கு மட்டும் நன்மையைத் தருவதில்லை, மூளைக்கும் நன்மையைத் தருகிறது.
இத்தகைய மூளையை ஆரோக்கியமாக வைக்கும் உணவுகளை உண்பதால் குழந்தைகளின் நினைவாற்றல் அதிகரிப்பதோடு, அவர்களது ஞாபக சக்தியும் கூடுகிறது.
மூளை வளர்ச்சியைத் தரும் உணவுகள் எவை (Children’s brain development food)
விற்றமின் பி மற்றும் குளுக்கோஸ் அதிகம் உள்ள ஓட்ஸ் மற்றும் சிவப்பு அரிசியை அதிகம் சாப்பிட்டால், மூளையானது ஆரோக்கியமாக இருக்கும்.
நமது உடலுக்கு தினமும் ஏதேனும் ஒரு தானியத்தை சேர்த்தால் நல்லது. மேலும் வைட்டமின் பி அதிகம் இருப்பதால், உடலில் இரத்த ஓட்டம் அதிகமாக இருப்பதால், உடலில் எல்லா பாகங்களும் சுறுசுறுப்பாக இருக்கும்.
மூளைக்குத் தேவையான ஊட்டச்சத்தை வழங்குவதில் பெர்ரி பழங்களான ஸ்ட்ராபெர்ரி, செர்ரி, அவுரிநெல்லி மற்றும் நாவல் பழம் சிறந்தவை. ஏனெனில் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் விற்றமின் சி உடலுக்கு தேவையான அளவு இருக்கிறது. இதில் உள்ள ஒமேகா-3 (Omega-3) மூளையின் வெளிப்பகுதியை பாதுகாக்கிறது.
முட்டை (Children’s brain development food)
முட்டையில் இல்லாத ஊட்டச்சத்தே இல்லை என்று கூறுமளவுக்கு அது ஒரு நிறை உணவு . இதில் கார்ப்ஸ், புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் என நிறைய சத்துக்கள் காணப்படுகிறது. உங்க குழந்தை நாள் முழுவதும் ஆற்றலுடன் செயல்பட உதவுகிறது.
முட்டையில் உள்ள அதிகளவு புரோட்டீன் மற்றும் கோலின் போன்றவை குழந்தையின் நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது. சாண்ட்விட்ச் போன்றவற்றில் முட்டை சேர்த்து காலை உணவாக கொடுக்கலாம்.
மீன்கள் (Fishes good for Children’s brain development)
ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் செல்லின் கட்டுமானத் தொகுதிகளில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.
சால்மன், கானாங்கெளுத்தி, புதிய டுனா, டிரெளட் மத்தி, ஹெர்ரிங் போன்ற மீன்களில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன.
இது மூளை வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. மற்ற உணவுப் பொருட்களை விட மீனிலேயே அறிவுத்திறனை கூர்மைப்படுத்தும் திறன் அதிகமாக உள்ளது.
காய்கறிகள்
காய்கறிகளை குழந்தைகளுக்கு தினமும் கொடுத்து வந்தால் மூளையானது நன்கு சுறுசுறுப்போடு இருப்பதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும்.
காய்கறிகளில் ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறைந்து காணப்படுகிறது. இவை மூளை செல்களின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
தக்காளி, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பூசணி, கரட், கீரை ஆகிய காய்கறிகளை சேர்த்துக் கொள்ளுங்கள். பிடித்த சுவைகளில் அவர்களுக்கு சாலட் செய்து கூட கொடுக்கலாம். காய்கறி சூப் செய்து கொடுக்கலாம்.
பால், யோகார்ட் மற்றும் சீஸ் உணவுகள்
பால், யோகார்ட் மற்றும் சீஸ் உணவுகளில் புரதம் மற்றும் விற்றமின் பி போன்றவை அதிகம் காணப்படுகிறது. இந்த சத்துக்கள் மூளையின் திசு, நரம்பியக் கடத்திகள் மற்றும் என்சைம்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இவை தான் மூளையில் மிக முக்கிய பங்கு வகிக்கும் விஷயங்கள்.
பால் மற்றும் பாலால் செய்யப்பட்ட உணவுகளில் அதிகமாக புரோட்டீன், கல்சியம், பொட்டாசியம் மற்றும் விற்றமின் டி உள்ளது.
இவ்வளவு ஊட்டத்தை அளிக்கிற பாலானது நரம்புத்தசை மண்டலத்தை நன்கு இயக்குவதோடு மற்றும் மூளை செல்களை நன்கு செயல்பட வைக்கிறது.
அதுவும் வளரும் குழந்தைகளுக்கு இந்த உணவு நல்ல ஒரு உடல் வளர்ச்சியைத் தருவதோடு, மூளையையும் சுறுசுறுப்பாக வைக்கிறது.
இது குழந்தையின் வலுவான பற்கள் மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. குழந்தைகளின் கல்சியம் தேவைகள் வயதே பொருத்து மாறுபடலாம்.
பால் குடிக்க விரும்பாத குழந்தைக்கு, வேறு உணவுகள் மூலம் கல்சியம் கிடைக்க செய்யுங்கள்.
நட்ஸ் அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் டி அறிவுத்திறனை அதிகரிக்கும்.
பீன்ஸ்
பீன்ஸில் புரதம், விற்றமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற சத்துக்கள் உள்ளன. சிறுநீரக பீன்ஸ் மற்றும் பிண்டோ பீன்ஸ் மற்ற பீன்ஸ் வகைகளை விட அதிகளவு ஓமேகா 3 கொழுப்பு அமிலங்களை கொண்டுள்ளது. எனவே இந்த பீன்ஸை குழந்தைகளுக்கு அவித்து சாப்பிட கொடுக்கலாம், சாலட் போன்றவற்றில் சேர்த்து கொடுக்கலாம். நன்மைகள் ஏராளம் கிடைக்கும்.
மேற்கண்ட உணவுகள் உங்க குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவுவதால் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். உங்க குழந்தைகளின் அறிவாற்றல் வளரும்.
ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அது தாண்டா வளர்ச்சி….