மருந்தாகும் மிளகாயின் காரம் (Chilli)

காரசாரமான உணவிற்கு முக்கிய காரணியாக இருப்பது மிளகாயாகும் (Chilli). நமது சமையலில் மிளகாய்க்கு என்று எப்போதும் சிறப்பான இடம் உண்டு. மிளகாய் காரத்தை அதிகரிக்க உணவிலும் மருந்துகளிலும் பழங்காலம் முதலே பயன்படுத்தப்படுகிறது.

இந்திய உணவுகள் உலகில் அதிகம் காரமான உணவுகளாக பார்க்கப்படுகிறது. பெரும்பாலான இந்திய உணவுகளில் மிளகாய்கள் (Chilli) நேரடியாகவோ அல்லது பொடியாகவோ கலக்கப்படுகிறது.

 மிளகாய்களில் பல வகைகள் உள்ளது, பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய், குண்டு மிளகாய், குடை மிளகாய் என பல வகைககள் உள்ளன.

மிளகாய்கள் வளர்வதற்கு உகந்த காலம் பருவமழைக்காலம் தான். சில மாதங்களிலேயே மிளகாய்கள் பறிப்பதற்கு தயாராகிவிடும். முதல் பருவம் பறிக்கப்படும் மிளகாய்கள் பச்சை நிறத்துடன் இருக்கும்.

அடுத்த பருவ மிளகாய்கள் கொஞ்சகொஞ்சமாக சிவப்பு நிறமாக மாறவிடும். இறுதிப்பருவத்தில் பறிக்கப்படும் மிளகாய்கள் வெயிலில் நன்கு காயவைத்து காய்ந்த மிளகாய்களாக கடைகளில் கிடைக்கின்றன. 

உலகின் அதிக காரமான மிளகாய் (Chilli)

இதில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு அளவிலான காரம் இருக்கும். மேலும், உலகின் காரமான மிளகாய் எது?

அமெரிக்காவில் பயிர் செய்யப்படும் கரோலினா ரீப்பர் என்ற மிளகாய் தான் உலகின் காரமான மிளகாய் என கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

மேலும், இந்த மிளகாய் பார்ப்பதற்கு குடை மிளகாய் வடிவில் இருந்தாலும் இந்த வகை மிளகாய்க்கு தான் காரம் அதிகம்.

2012-ம் ஆண்டு இந்த மிளகாயை சவுத் கரோலினா பல்கலைகழகத்தில் ஆய்வு செய்தனர். அப்பொழுது இதன் காரத்தன்மையை ஆய்வு செய்ய ஸ்கோவைல் ஹீட் யூனிட் என்ற அளவு கோலை எடுத்துக்கொண்டனர்.

இந்த மிளகாய் 15,59,300 ஸ்கோவைல் ஹீட் யூனிட் காரத்தை பதிவு செய்தது.

இதையடுத்து, பொதுவாக காரத்தன்மை எல்லாம் இந்த ஸ்கோவைல் ஹீட் யூனிட் முறையில் தான் ஆய்வு செய்யப்படுகிறது. அதிக ஸ்கோவைல் ஹீட் யூனிட் கொண்ட பொருள் அதிக காரத்தன்மை உடையது எனவும், குறைவான ஸ்கோவைல் ஹீட் யூனிட் கொண்டது குறைவான காரதன்மை கொண்டது எனவும் கொள்ளபடுகின்றது.

குடை மிளகாய், பிமென்டோ மிளகாய், ரெல்லானோ மிளகாய், இனிப்பு பனானா மிளகாய், பொப்பிலானோ / ஆன்சோ மிளகாய், பெர்முடா கார மிளகாய், ஆர்டேகா மிளகாய், பப்பிரிகா மிளகாய், கார பனானா மிளகாய், ரோகோடில்லோ மிளகாய, அலபீனோ மிளகாய், கயன் மிளகாய், டபாஸ்கோ மிளகாய், செர்ரானோ மிளகாய், சில்டிபின் மிளகாய், ஆபெர்னரோ மிளகாய், ரொகோடோ மிளகாய், தாய்லாந்து மிளகாய் என பல வகையான மிளகாய்கள் உள்ளன.

இந்திய மிளகாய் வகைகள்

சன்னம் மிளகாய், LC 334 மிளகாய், படகி மிளகாய், அதிசய கார மிளகாய், ஜுவலா மிளகாய், குண்டூர் மிளகாய், காஷ்மீரி மிளகாய், பையடாகி மிளகாய், காந்தரி மிளகாய் மற்றும் முண்டு மிளகாய்.

 ஊசி மிளகாய், குண்டு மிளகாய், குடமிளகாய் என மூன்று வடிவங்களை கொண்டது. இவை காரத்தன்மையால் வேறுபடுகின்றன. குடமிளகாய் காரம் குறைந்தது.

மிளகாய் சமையலுக்கும், கனிந்த பழங்கள் மற்றும் விதைகள் நறுமணப்பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுகின்றன.
இத்தாவரத்தில் ஒலியோரெசின், கேப்சைசின், கரோடினாய்டுகள், பிளேவனாய்டுகள், எளிதில் ஆவியாகும் எண்ணெய் மற்றும் ஸ்டிராய்டல், சபோனின்கள், கெப்சைசிடின்ஸ் போன்றவை பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.

மருத்துவ பண்புகள் (Medicinal value of chilli)

கிருமி நாசினியாக செயல்படுகிறது

மிளகாய் ஜீரணத்தை ஊக்குவித்து உடலுக்கு வலுவாக்கிறது. தசைக்குடைச்சல் மற்றும் தலைவலியை போக்கும் தன்மை கொண்டது. இது சிறந்த கிருமிநாசினியாக செயல்படுகிறது.

ரத்த ஓட்டத்தை சரி செய்கிறது

மிளகாய் ரத்த ஓட்டத்தினை அதிகரிக்க உதவுகிறது. உடல் முழுவதற்கும் ரத்த ஓட்டத்தினை சரி செய்கிறது. மிளகாயில் உள்ள கெப்சைசின் எனும் வேதிப்பொருள் இத்தன்மைக்கு அடிப்படை காரணமாகிறது. 

தோல் வியாதிகள் ஏற்படாமல் தடுக்கிறது

தோல்களின் மீது தடவும் போது நரம்பு நுனிகளின் உணர்வினை மழுங்கச் செய்து ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கிறது. தோல் வியாதிகளான சொரியாசிஸ், நியூரால்ஜியா மற்றும் தலைவலி, மூட்டுவலி, ஆகியவற்றை போக்குகிறது.

ஜீரண மணடலத்தை சரியாக செயல்பட வைக்கிறது

பக்டீரியக்களுக்கு எதிராக செயல்புரிகிறது. உள்ளுக்கு சாப்பிடும் போது வயிற்றுவலி, வாயு கோளாறு போன்றவற்றை தீர்க்கும். ஜீரண சுரப்பிகளை சுரக்க தூண்டும். ஜீரண மண்டல நோய்களைப் போக்கும்.

தொண்டை கரகரப்பை சரிசெய்கிறது

சர்க்கரை மற்றும் குல்கந்த் சேர்த்து முக்கோண வில்லைகளாகச் செய்யப்பட்டு தொண்டை கரகரப்புக்கு மருந்தாகிறது. தொண்டை வலிகளைப் போக்க தேய்ப்புத் தைலமாக பயன்படுகிறது.

குடலை சுத்தப்படுத்துகிறது

மிளகாயை உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலில் எண்டார்ஃபின் என்கிற ஹார்மோன் சுரப்பு தூண்டப்படுகிறது. அதனால், மனதிற்கு ஓய்வு கிடைக்கிறது. மிளகாய் சேர்த்த உணவு, குடலை சுத்தப்படுத்தி உடலை லேசாக்கும் திறன் கொண்டது.

சரும தொற்றுகளை தடுக்கிறது

பச்சை மிளகாயில் ஆன்டி-பாக்டீரியா குணங்கள் அதிகம் நிரம்பியுள்ளது. இந்த குணத்தினால் உடலில் தொற்றுக்கள் ஏற்படாமல் உடலை காக்கிறது.

அதுவும் முக்கியமாக சரும தொற்றுகள் ஏற்படாமல் உதவி புரிகிறது. பச்சை மிளகாயில் விற்றமின் ஈ அதிகமாக உள்ளது. இது சில சருமம் எண்ணெய் சுரப்பதற்கு உதவி புரியும்.

கொழுப்புகளை கரைக்கும்

உணவில் காரத்திற்காக சேர்க்கப்படும் மிளகாய் உடலின் கொழுப்புகளை கரைக்கும் தன்மை கொண்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *