கொலஸ்ட்ரால் அளவை ஏன் கட்டுப்படுத்த வேண்டும்?(Cholesterol)
உடலின் அனைத்துச் செயல்பாடுகளுக்கும் குறிப்பிட்ட அளவு கொலஸ்ட்ரால் (Cholesterol) தேவைப்படுகிறது. ஆனால், அளவுக்கு அதிகமாக கொழுப்பு உடலில் சேரும் போது ,அவை ரத்த நாளங்களில் படிகின்றன.
இந்தக் கொழுப்புப் படிவுகள் மாரடைப்பு அல்லது மூளைத்தாக்கு (ஸ்டிரோக்) ஏற்படும் வாய்ப்புக்களை ஏறபடுத்துகின்றன.
தற்போது நாம் வாழும் இயந்திர மயமான வாழ்க்கைமுறையில் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்க வழக்கங்களினாலும், நகர்புற உணவுக் கலாச்சாரத்தில் துரித உணவு வகைகளை உண்ணும் போக்கினாலும் சாலையோரத்தில் விற்கப்படும் மணம் வீசிய உணவுப்பொருளைச் சுவைப்பதாலும் நாம் எண்ணற்ற நோய்களுக்கு உள்ளாகிவிடுகிறோம்.
அதற்கு முழு முதற் காரணம் கெட்ட கொழுப்புகள் எனப்படும் கொலஸ்ட்ரால் (Cholesterol) தான்.கொழுப்பு நிறைந்த பொருட்களில் கொலஸ்ட்ரால், டிரைகிளசரைடுகள் உள்ளன.
கொலஸ்டிரால் என்பது கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை எல்டிஎல்(LDL), எச்.டி.எல்(HDL), அல்லது இரத்தத்தில் சுழற்சிக்கும் மற்றும் மற்ற வகை கொழுப்புகள் ஆகியவற்றை மாற்றுவதன் மூலம் கல்லீரலில் தயாரிக்கப்படும் ஒரு மெழுகு போன்ற பொருள் ஆகும்.
கொலஸ்ட்ரால் ரத்தத்தில் கரையாது. அதனால், அதை உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் எடுத்துச் செல்வதற்கு புரதம் தேவைப்படுகிறது.
இவை `சுமக்கும்’ லிபோ புரோட்டீன் என்று அழைக்கப்படுகின்றன. இதில் இரண்டு முதன்மையான வகைகள் உள்ளன. அதிக அடர்த்தியுள்ள லிபோபுரோட்டீனால் கொலஸ்ட்ரால் சுமந்து செல்லப்பட்டால், அது `நல்ல’ கொலஸ்ட்ரால் என்று அழைக்கப்படுகிறது. மாரடைப்பு அல்லது மூளைத்தாக்கு வரும் ஆபத்தை இந்த வகைக் கொலஸ்ட்ரால் குறைக்கிறது.
குறைந்த அடர்த்தியுள்ள லிபோபுரோட்டீனால் கொலஸ்ட்ரால் சுமந்து செல்லப்பட்டால், அது `கெட்ட’ கொலஸ்ட்ரால் என்று அழைக்கப்படுகிறது. மாரடைப்பு அல்லது மூளைத்தாக்கு ஏற்படும் ஆபத்தை இந்த வகை கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது.
கொலஸ்ட்ராலுக்கான காரணங்கள்(Causes of Cholesterol)
மனித உடலிற்கு தேவையான கொழுப்பு அனைத்தும் இரத்தத்தில் உள்ள லிப்போ புரதம் (லிப்போ புரோட்டின் – Lipoprotein) மூலம் கொண்டு செல்லப்படுகிறது.
லிப்போ புரதம் என்பது உட்புறம் கொழுப்பும், வெளிப்புறம் புரதமும் கொண்ட அமைப்பு. இருவகையான லிப்போ புரதங்கள் கொல்ஸ்ட்ராலை உடலிற்கு எடுத்துச் செல்கிறது.
1. குறையடர்த்தி லிப்போ புரதம் LDL (Low-density lipoproteins)
2. மிகையடர்த்தி லிப்போ புரதம் HDL (High-density lipoproteins)
அதிக அளவிலான கொல்ஸ்ட்ரால் உடல் நலத்தில் எதிர்மறையான விளைவை உருவாக்கும். இதனால் ஏற்படும் எதிர்மறையான விளைவு இருதய நோய்க்கு இட்டுச் செல்லும்.
நம் உடலில் கல்லீரல் உடலுக்குத் தேவையான கொழுப்பில் குறிப்பிட்ட அளவை மட்டுமே சுரக்கிறது. அன்றாடம் நாம் உண்ணும் உணவின் மூலமும் நம் உடலில் கொழுப்பு சேர்கிறது.
அதிலும் நாம் கொழுப்புச் சத்து மிகுதியாக உள்ள உணவு வகைகளையும் துரித உணவுகளையும் உண்பதால் நம் உடலில் கொலஸ்ட்ராலின் அதாவது இரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரிக்கிறது.
அன்றாடம் உடற்பயிற்சி இல்லாமல் செயலற்று இருப்பதும் அதிகப்படியான உடல் உழைப்பு இல்லாமலும், உடல் பருமனாக இருப்பதும் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்க காரணமாகிறது.
உடல் பருமனாகவும், உடல் உழைப்பு இல்லாமல் செயலற்று இருப்பதால் கலோரிகள் எரிக்கப்படாததாலும் டிரைகிளிசரைடுகளின் அளவு அதிகரிக்கும்.
பொதுவாக இவ்வாறு இருப்பது நல்ல கொழுப்பின் (மிகையடர்த்தி லிப்போ புரதத்தின்) அளவைக் குறைக்கிறது.
புகைப் பிடிப்பதும் இரத்தக் கொழுப்பின் (கொலஸ்ட்ரால்) அளவை அதிகரிக்கச் செய்யும் மற்றுமொரு காரணமாகும். இவ்வாறு கொலஸ்ட்ராலின் அளவு அதிகமாவது இதயம் சார்ந்த நோய்களுக்கு வழிவகுக்கும்.
கொலஸ்டிரால் உருவாக்கத்தை குறைக்கும் வழிமுறைகள்(To reduce cholesterol formation)
விலங்கு கொழுப்பு உணவுகள் (Animal fats) அதிக அளவில் உண்பதை கட்டுப்படுத்த வேண்டும்.
மிக அதிக எடை கொண்டிருந்தால், அது கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய விடயம். கார்போஹைட்ரேட்(Karbohydrates) கொண்ட பொருட்கள் நுகர்வு குறைத்தல் வேண்டும். ஏனெனில் அது உடலில் கொழுப்பு சேர்வதற்கு ஒரு மறைமுக தாக்கத்தை ஏற்படுத்தும்.
கொழுப்பு உணவுகள் நுகர்வையும் குறைத்தல் நல்லது. இவை கொழுப்பு உள்ளடக்க உணவுப் பொருட்களின் குறைந்தபட்ச நுகர்வு மருந்துகள் இன்றி இதயக் கோளாறுகளால் உங்களை பாதுகாக்க ஒரு தீங்கில்லாத பயனுள்ள வழி.
கொலஸ்ட்ரால் வருவதற்கு காரணம்
உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வது தான்.
அதிலும் தற்போது கடைகளில் அனைவரும் விரும்பி சாப்பிடப்படும் சுவைமிக்க உணவுப்பொருட்கள் அனைத்திலும், கொழுப்புக்கள் தான் பெருமளவில் நிறைந்துள்ளன.
இத்தகைய உணவுகளை உட்கொண்டு, அதனால் உடலில் தங்கும் கொழுப்புக்களை கரைப்பதற்கு, தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு கூட நேரம் கிடைக்கவில்லை.
இதனால் 40 வயதில் வரக்கூடிய இதய நோயானது இள வயதிலேயே வந்து விடுகிறது.
இவை அனைத்திற்கும் காரணம், இளம் வயதில் இருந்தே கொழுப்புக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிடுவது தான். இவ்வாறு இளம் வயதில் சாப்பிட்ட கொழுப்புக்கள் உடலில் அப்படியே தங்கி, அதனால் உடல் பருமன் அடைவதோடு, இதய நோய்க்கும் ஆளாகின்றனர்.
ஏனெனில் அவ்வாறு தங்கும் கெட்ட கொழுப்புக்கள் ரத்தக் குழாய்கள் மற்றும் இதர முக்கியமான உறுப்புக்களில் படிந்து, இரத்த அழுத்தத்தை அதிகரித்து, இறுதியில் மாரடைப்பை ஏற்படுத்தி, இளமையிலேயே இறப்புக்கு வழிவகுக்கின்றன.
அதற்காக கொழுப்புள்ள உணவுப் பொருட்களை அறவே தவிர்ர்கக வேண்டும் என்பதில்லை. நல்ல கொழுப்புள்ள உணவுப் பொருட்களை தேர்ந்தெடுத்து உணவில் சேர்த்து வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, இதயமும் நன்கு செயல்படும்.
கொலஸ்ட்ரால் அளவைக் குறிக்கும் உணவுகள் (Cholesterol lowering foods)
தானியங்களுள் ஒன்றான பார்லியில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், இதனை உண்டால், உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அதிகரிப்பது தடைபடுவதோடு, கொலஸ்ட்ராலும் கரைந்து விடும்.
கத்திரிக்காயில் கலோரிகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு கலோரிகள் மிகவும் குறைவு .இதைப் போன்றே வெண்டைக்காயும் கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை கொண்டது.
இவற்றில் மிகுந்த அளவில் நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவில் கலோரிகள் இருப்பதால், உடல் எடையை குறைக்க நினைப்போர், இதனை உட்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.
அதோடு இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், உடலில் கொலஸ்ட்ரால் உறிஞ்சப்படுவது குறைக்கப்படும்.
மீன்களில் நல்ல கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதால், மீன்களை அதிகம் உட்கொண்டால், கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் சேர்வதை தவிர்க்கலாம்.
நட்ஸில் ஒமேகா3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக உள்ளதால், இது கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும். ஆகவே ஸ்நாக்ஸ் நேரத்தில் பாதாம், வால்நட் போன்றவற்றை உட்கொண்டு, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.
புதிய பழங்களைப் பிழிந்து எடுத்த பழச்சாறு (Fresh juice) குடிப்பதன் மூலம் கணிசமாக கெட்ட கொழுப்பு உள்ளடக்கத்தை குறைக்க முடியும்.
வெங்காயத்தில் உள்ள க்யூயர்சிடின் என்னும் ஃப்ளே வோனாய்டு, ரத்த குழாய்களில் தங்கியுள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்கும் தன்மைக் கொண்டவை.
முழு தானியங்களில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளன. எனவே தினை, கேழ்வரகு போன்றவற்றை அதிகம் உட்கொள்வது இதயத்திற்கு மிகவும் நல்லது.
சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை போன்வற்றில் கரையக் கூடிய நார்ச்சத்தான பெக்டின் நிறைவாக உள்ளது. இது ரத்த நாளங்களில் படிந்திருக்கும் கொழுப்புக்களை கரைத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.
பசலைக் கீரையில் உள்ள நார்ச்சத்து தமனிகளில் தங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைக்கும் தன்மை கொண்டவை. ஆகவே பசலைக் கீரை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்து வந்தால், நிச்சயம் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம்.
சோயா பொருட்களிலும் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும் தன்மை இயற்கையாகவே உள்ளது.
பூண்டில் நோயெதிர்ப்பு தன்மை அதிகம் இருப்பதால், இது கொலஸ்ட்ரால் அளவை வேகமாக குறைக்க உதவும். அதிலும் தினமும் ஒரு பல் பூண்டை பச்சையாக சாப்பிட்டால், இதன் பலன் நன்கு தெரியும்.
சாக்லெட் அல்லது கொக்கோ கலந்து உணவுப்பொருட்களில் உள்ள ஆன்டி அதிகஆக்ஸிடன்ட்டுகள் , உடலில் நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரித்து, கெட்ட கொழுப்புக்களை கரைத்து, தமனிகளில் ஏற்படும் அடைப்புக்களை தடுக்கிறது.
மிளகாயும் உடலில் தங்கியுள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புக்களை கரைக்கும் ஆற்றல் கொண்டது.
அவகேடோவில் நல்ல கொழுப்புக்கள் அதிகம் உள்ளது. இது உடலில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும் தன்மை கொண்டது.