ஆரோக்கியம் தரும் மண்பானை தண்ணீர் ( Clay pot water)

மண்பானையின் பெரிய ஆச்சரியம் என்னவென்றால், வெளியில் வெயில் பட்டையைக் கிளப்பும் போது மண்பானை தன்னுள் இருக்கிற நீரை அதிக அளவு குளிரச் செய்யும்.வெளிப்புறத்தில் வெயில் குறைவாக இருந்தால் மண்பானையில் உள்ள நீரும் குறைந்த அளவே குளிர்ந்து இருக்கும்.

கடும் கோடையில் உடலுக்கு இதமாக, ஒரு மண் பானை நீரை நன்றாகக் குளிரச் செய்து கொடுக்கிறது என்றால் அது எவ்வளவு பெரிய வரப்பிரசாதம்!?

மண்பானை சீக்ரெட்டின் எனர்ஜி ரொம்பவே சிம்பிள் தான்.

மண்பானையில் தண்ணீர்,மண்பானை குடிநீர் , Clay pot Drinking water,annaimadi.com,clay pot water cooler,clay pot water storage,clay pot water purifier,மண்பானை குடிநீர்,  வாட்டர் கூலர், மண்பானை நீர் சேமிப்பு, மண் பானை நீர் சுத்திகரிப்பு,அன்னைமடி,lergryde Drikkevand,Benefits of water in a clay pot,மண்பானையில் தண்ணீர் தரும் பயன்கள்,ஆரோக்கியம் தரும் மண்பானை தண்ணீர்,Healthy earthen pot water,mud pot dringing water

மண்பானைகளில் நுண்துளைகள் நிறையவே இருக்கின்றன. நீர் வைக்கப்பட்டிருக்கும் மண்பானைகளின் வெளியே முத்து முத்தாய் வியர்த்திருப்பது போன்று நீர்த்திவலைகள் இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்.

மண்பானையில் உள்ள சிறிய நுண் துளைகள் வழியே தான் இப்படி நீர் கசிகிறது.இந்த நீர் தொடர்ந்து ஆவியாகிக் கொண்டேஇருக்கிறது.

இப்படி பானையின் வெப்பமும்,பானையின் உள்ளே இருக்கும் நீரில் உள்ளவெப்பமும் தொடர்ந்து ஆவியாதல் மூலம் வெளியேற்றப்படுகிறது. எனவே நீர் குளிர்ந்த நிலையிலேயே இருக்கிறது.

வெளிப்புறக் காற்றின் தன்மையைப் பொறுத்தும், நீர் குளிர்ச்சி அடையும் தன்மை மாறும். பானையைச் சுற்றிலும், அதாவது வெளிப்புற வெப்பம் அதிகமாக இருந்தால், அதிக வெப்பத்தின் காரணமாகநீர் ஆவியாவதும் அதிக அளவில் நடைபெறுகிறது.

ஆவியாதல் மூலமாக வெப்பம் வெளியேற்றப்படுவதால்பானைக்குள் இருக்கும் நீர் மிகவும் குளிர்ச்சியாக மாறுகிறது.  

பனிக் காலத்திலும், மேலைக்காற்று வீசும் காலத்திலும் காற்றில் ‘ஈரப்பதம்’ அதிகம் கலந்து இருக்கும். காற்று ஜில்லென்று வீசும். காற்றின் ஈரப்பதம் அதிகரித்திருக்கும்.

இந்தப் பருவ காலத்தில் நீர் ஆவியாகும் அளவு குறைகிறது. எனவே பானையில் இருக்கும் நீரும் குறைந்த அளவே குளிர்ச்சி அடைகிறது.

மண்பானை குடிநீர் தரும் ஆரோக்கிய நலன்கள் எவை ? (Health benefits of clay pot water)

இதற்காக மண்பானையில் நீண்ட நேரம் நீரை வைத்து குளிரச் செய்தால், அது அப்படியே ஐஸ் கட்டி ஆகிவிடும் என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது.

நவீன கால ஃபிரிட்ஜ்கள் போல ஒரேயடியாகப் பற்களை நடுநடுங்கச் செய்யும் அளவுக்கு மண்பானை தண்ணீரை குளிர்விக்காது.

ஒரு மண்பானை எந்த அளவுக்கு நீரை குளிர்விக்கும் என்று கேட்டால், அறை வெப்பநிலையை விட வெறும் 5 டிகிரி செல்சியஸ் குறையும் அளவுக்குத்தான் குளிர்விக்கும்.

மண்பானையில் தண்ணீர்,மண்பானை குடிநீர் , Clay pot Drinking water,annaimadi.com,clay pot water cooler,clay pot water storage,clay pot water purifier,மண்பானை குடிநீர்,  வாட்டர் கூலர், மண்பானை நீர் சேமிப்பு, மண் பானை நீர் சுத்திகரிப்பு,அன்னைமடி,lergryde Drikkevand,Benefits of water in a clay pot,மண்பானையில் தண்ணீர் தரும் பயன்கள்,ஆரோக்கியம் தரும் மண்பானை தண்ணீர்,Healthy earthen pot water,mud pot dringing water

வெளிப்புறத்தில் வெப்பம் 30 டிகிரிசெல்சியஸ் என்றால் மண்பானையில் உள்ள நீரின் வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருக்கும்.

முடிந்தவரை வெயில் காலம் ஆனாலும், மழைக் காலமானாலும், பணி காலம் ஆனாலும் பானைத் தண்ணீரை குடித்தால் உடல் ஆரோக்கியம் பெறும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் , உடம்பில் உள்ள சளியை வெளியேற்றும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *