காலநிலை மாற்றங்களால் ஏற்படும் நோய்களில் இருந்து விடுபட (Relief from climate change diseases)

காலநிலை மாற்றங்கள் (Climate change diseases) ஏற்படும் போது, அவை ஒத்துக் கொள்ளாமல் அப்பப்பா எத்தனை வருத்தங்கள் தடிமன் ,சளி, காய்ச்சல், இடைவிடாத இருமல், தும்மல், கண்கடி,………சொல்லிக்கொண்டே போகலாம்.
அதுவும் சிறு பிள்ளைகள் உள்ள வீட்டில் சொல்லவே வேண்டாம்.

வருத்தம் வந்த பின் அவதிப்பட்டு அல்லல்பட்டு மாற்றுவதை விட வரும் முன்னே தடுப்பதே புத்திசாலித்தனம்.
நேரம், பணம், அவஸ்தை இல்லாமல் சந்தோசமாக இருக்கலாம் பாருங்க. அதற்கு என்ன செய்யலாம்
உடலை பலப்படுத்த வேண்டும். எப்படி

உடல் நோயை எதிர்க்கும் வல்லமையைப் பெற வேண்டும். நம் உணவு முறைகளின் மூலமே உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்க முடியும்.

இதனால் காலநிலை மாற்றங்கள் (Climate change diseases) ஏற்படும் நோய்களை எதிர்கொள்ள முடியும்.

காலநிலை மாற்றங்களால் ஏற்படும் நோய்களை இருந்து விடுபட (Climate change diseases)

விற்றமின்கள்

கரட், பச்சைக் காய்கறிகள், தக்காளி, செர்ரி, நெல்லிக்காய், சிட்ரஸ் பழங்கள் மற்றும் கொய்யாப்பழம் ஆகியவற்றை அதிகம் உண்போம். உடலின் ஆரோக்கியம் மற்றும் பலத்தை பேண, தினமும், ஐந்து பாதாம் பருப்பு சாப்பிட்டு வரலாம்.

இவற்றில் விற்றமின் சத்துக்கள் அதிகளவில் உள்ளன. விற்றமின் ஏ (பீட்டா-கரோட் டீன்), விற்றமின் சி மற்றும் விற்றமின் இ ஆகியவை உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரித்து, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் காரணிகளை அழிப்பதில் முக்கிய பங்குவகிக்கின்றன.

climate change diseases,annaimadi.com,get rid from disease caused by climate change,அன்னைமடி,குளிர்கால நோய்களுக்கு நிவாரணம்,

தயிர் மற்றும் பால் சார்ந்த சில பொருட்களில் காணப்படும் நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்கு ப்ரோபயாட்டிக் என்று பெயர். இவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

குடலில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிரிக்கும் என்சைமான, இம்யுனோகுளோபின் அதிகளவு சுரக்க, ப்ரோபயாட்டிக் உதவுகிறது.

மேலும், இவை நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, தொற்றை எதிர்த்து போராட உதவுகிறது.இவை காலநிலை மாற்றங்கள் ஏற்படும் நோய்களில் (Climate change diseases) இருந்து விடுபட முடியும்.

எலுமிச்சை சாறு (Citrus fruits for Climate change diseases)

எலுமிச்சைசாறு உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது.

அவை, அமிலத்தன்மை வாய்ந்த சூழ்நிலையில் வேகமாக வளர்ச்சியடையும் தீங்கு விளைவிக்கும் வைரஸ், பாக்டீரியா ஆகியவற்றை ஊக்குவிக்காது. அதோடு, உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்கு சாதகமான, வெப்ப நிலையை பராமரிக்க உதவுகிறது.

எலுமிச்சை பழச்சாறை தண்ணீர், சூப்கள், கிரேவிக்கள் அல்லது சாலட்களில் கலந்து சாப்பிடலாம்.

climate change diseases,annaimadi.com,get rid from disease caused by climate change,அன்னைமடி,குளிர்கால நோய்களுக்கு நிவாரணம்,

துத்தநாகம்

இது உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை பலப்படுத்த உதவுகிறது. துத்தநாக பற்றாக்குறை, உடலின் நோய் எதிர்ப்புதன்மையை பாதிப்பதோடு, கடும் பற்றாக்குறை நோய் எதிர்ப்பு தன்மையை முற்றிலுமாக செயல் இழந்து, போக வைக்கும் வாய்ப்பும் உள்ளது.

எனவே, உடலில் துத்தநாக பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பீன்ஸ், சிப்பி வகை மீன்கள், பருப்புகள், தயிர் மற்றும் பால் ஆகியவற்றில் அதிகளவில் காணப்படுகிறது.

climate change diseases,annaimadi.com,get rid from disease caused by climate change,அன்னைமடி,குளிர்கால நோய்களுக்கு நிவாரணம்,

மூலிகைகள் Herbal for climate change diseases)

உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கும் மூலிகை களை உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை, உடலில் தொற்று ஏற்படாமல் தடுக்கிறது.

மஞ்சள், இஞ்சி, பூண்டு,சோம்பு ஆகியவற்றில் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும் தன்மை உள்ளது.

அன்னைமடி,annaimadi.com

இயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவுகள் உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்க உதவுகின்றன.

இயற்கை உணவுகள் கொடுத்து வளர்க்கப்படும் பசுவின் பாலில், சாதாரணமாக வளர்க்கப்படும் பசுவின் பாலைவிட அதிகளவு  சத்தும் சுவையும் இருப்பதாக, தெரியவந்துள்ளது.

மேலும் இவற்றில் சிறந்த நோய் எதிர்ப்பு திறனான “சியா சான்தைன்’ மற்றும் “லூட்டீன்’ ஆகியவை, இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகமாக உள்ளன.

இதே போன்று, இயற்கை முறையில் விளைவிக்கப்படும் பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றாலும், உடலின் நோய் எதிர்ப்புதிறன் அதிகரிக்கிறது.

அவற்றில் விற்றமின் சி, தாதுக்கள் மற்றும் சத்துக்கள் ஆகியவையும் அதிகளவில் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *