கிராம்பு எண்ணெய்யும் நிவாரணமும் (Clove oil & relief)

கிராம்பு எண்ணெய்யில் (Clove oil) ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.அவை பல்வேறு நோய்களைத் தடுக்கின்றன. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களின் இருப்பைக் குறைக்கிறது.

பல இருமல் சிரப்புகளில் சிரப்பின் சுவையை மேம்படுத்த கிராம்பு எண்ணெய் (Clove oil) சேர்க்கப்படுகிறது மற்றும் பல் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க பொதுவாக பயன்படுத்தப்படுகிறது.

கிராம்பு எண்ணெயை எப்படி பயன்படுத்தவது (How to use Clove oil) 

கிராம்பு எண்ணெய் இரத்த நாளங்களைத் திறந்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.  இதனால் பல்வேறு வலிகளைக் குறைக்க உதவுகின்றன. இது  இரத்தத்திலிருந்து நச்சுகளை அகற்றி இரத்தத்தை சுத்திகரிக்கிறது.

நரம்புகளை அமைதிப்படுத்தவும் செரிமானத்திற்கும் கிராம்பு எண்ணெய் (Clove oil) உதவுகிறது. வயிற்று வலியிலிருந்து உடனடி நிவாரணம் பெற கிராம்பு எண்ணெய்யில் சில துளிகளை நீங்கள் பயன்படுத்தலாம்.

பல்வலி மற்றும் புண் ஈறுகளுக்கு சிகிச்சையளிக்க உதவும் கிருமி நாசினி பண்புகளைக் கொண்டுள்ளது. பல்வலியை குணப்படுத்த கிராம்பு எண்ணெய்யை சிறிது வெதுவெதுப்பான நீரில் கலந்து பயன்படுத்தலாம்.கிராம்பு எண்ணெய்யும் நிவாரணமும் ,Clove oil and relief,annaimadi,com,அன்னைமடி,கராம்பு எண்ணெய் ,கராம்பு,கிராம்பு எண்ணெயின் அற்புத மருத்துவ பலன்கள்,Medicinal benefits of Clove oil

கிராம்பு எண்ணெயின் அற்புத மருத்துவ பலன்கள் (Medicinal benefits of Clove oil) 

இதன் மருத்துவ குணங்கள் பல வழிகளில் உங்களுக்கு நன்மை பயக்கும். இதன் நுகர்வு ஆண்களுக்கு குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும்.

குளிர்காலத்தில் கிராம்பு எண்ணெயை உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. கிராம்பு எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்துவதால் செரிமானம் சரியாகும் மற்றும் புற்றுநோய் போன்ற தீவிர நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது.

நீரிழிவு முதல் ஆண்களின் விந்தணு எண்ணிக்கை பிரச்சனை வரை, கிராம்பு எண்ணெய் நன்மை பயக்கும்.

கிராம்பு எண்ணெய்யும் நிவாரணமும் ,Clove oil and relief,annaimadi,com,அன்னைமடி,கராம்பு எண்ணெய் ,கராம்பு,கிராம்பு எண்ணெயின் அற்புத மருத்துவ பலன்கள்,Medicinal benefits of Clove oil
கிராம்பு எண்ணெய் புற்றுநோய் செல்கள் வளராமல் தடுக்கிறது. இது ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது. இந்த எண்ணெயில் உள்ள யூஜெனால் மற்றும் ஃபிளவனாய்டுகள் போன்ற கூறுகள்  நன்மை பயக்கும்.

சிகரெட் அல்லது மது பழக்கத்திலிருந்து விடுபட விரும்பினால், கிராம்பு எண்ணெயை தவறாமல் பயன்படுத்தவும். அல்லது கிராம்பை உணவிலும் பயன்படுத்தலாம்.

முகஅழகை பேணுவதில் கிராம்பு எண்ணெய் (Clove oil for beauty)

அறையில் கிராம்பு எண்ணெயை தெளிக்கலாம். இதன் நறுமணம் உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.

இது உடலின் வெப்பநிலையையும் அதிகரிக்கிறது, இது மன  பதட்டம் மற்றும் மன அழுத்தத்திலிருந்து விலக்கி, உடலுக்கு ஆற்றலும் தரும்.

கிராம்பு எண்ணெய் தூண்டுதல் பண்புகளை கொண்டுள்ளது மற்றும் மன அழுத்தம், சோர்வு மற்றும் பதட்டத்தை குறைக்க உதவுகிறது. சோர்வு மற்றும் பதற்றத்தை குறைக்க நறுமண சிகிச்சையிலும் இதைப் பயன்படுத்தலாம்.

கிராம்பு எண்ணெய்யை பயன்படுத்துவது தெளிவான முகத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இதனால் உங்கள் சருமத்தில் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது.

மேலும் கிராம்பு எண்ணெய் சருமத்தில் பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தி, சருமத்தின் வயதான தோற்றத்தை குறைக்க உதவுகிறது என அழகுக்கலை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

முகத்தில் அதிகளவு முகப்பரு இருந்தால் வாரம் மூன்று முறை கிராம்பு எண்ணெய் பயன்படுத்தலாம். கிராம்பு எண்ணெய்யுடன், பாதாம் அல்லது தேங்காய் எண்ணெய்யை நன்கு கலந்து உங்கள் சருமத்தில் பூசி 15 நிமிடங்களுக்கு பின்னர் தண்ணீரில் கழுவவும்.

பின்னர் உங்கள் வழக்கமான சோப்பு அல்லது பேஸ்வாஷ்(Facewash) கொண்டு சருமத்தை சுத்தம் செய்யவும்.

Leave a Reply

Your email address will not be published.