தேங்காயில் பலவிதமான ஸ்வீட்ஸ் (Coconut sweets)
தேங்காய் சேர்த்து செய்யப்படும் போது உணவுகளோ ,பலகாரங்களோ தனிச் சுவையைப் பெறுகின்றது. அதுவும் திரட்டுப்பால்,பாயாசம், லட்டு, தொதல், போன்ற தேங்காய் ,ஏலக்காய் சேர்த்து செய்யும் இனிப்பு பலகாரங்களுக்கு (Coconut sweets) சுவையும் மணமும் தனி தான்!
தேங்காய் கொண்டு செய்யப்படும் இந்த இனிப்பு பண்டங்கள் செய்வதும சுலபம்.தேவையான பொருட்களும் குறைவே.
தேவையான பொருட்கள்
முற்றிய முழு தேங்காய் – 2
வெல்லம் – 1/2 கிலோ
பால் – 400 மி.லி
ஏலப்பொடி – 1 டீஸ்பூன்
உடைத்த முந்திரி – 5 டீஸ்பூன்
நெய் – தேவையான அளவு
வறுத்த பாசிப்பருப்பு – 6 டீஸ்பூன்
திரட்டுப்பால் செய்யும் முறை (Coconut sweets)
- தேங்காயை துருவிக்கொள்ளவும்.
- வெல்லத்தை தூளாக்கிக்கொள்ளவும்.
- பாசிப்பருப்பை வெறும் கடாயில் போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும்.
- வறுத்த பாசிப்பருப்பு, துருவிய தேங்காயை சேர்த்து கெட்டியாக நைசாக அரைக்கவும்.
- அடிகனமான பாத்திரத்தில் பால், அரைத்த விழுது சேர்த்து வேக விடவும். கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். இடையிடையே நெய் சேர்த்துக்கொண்டே இருக்கவும்.
- நன்றாக வெந்து நிறம் மாறி வரும் போது, துருவிய வெல்லத்தை சேர்த்து, இடையிடையே நெய் சேர்க்கவும்.
- அனைத்தும் சேர்ந்து கைகளால் உருட்டும் பதம் வந்ததும் நெய்யில் வறுத்த முந்திரி, ஏலப்பொடி சேர்த்து இறக்கவும்.
- நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறியதும் துண்டுகள் போட்டு பரிமாறவும். ஒரு வாரம் வரை கெடாது.
சூப்பரான தேங்காய் திரட்டுப்பால் ரெடி.
சுவையான இலகுவான தேங்காய் திரட்டுப்பால் (Coconut sweets) செய்வது எப்படி என வீடியோவில் பார்ப்போம்.
தேங்காய் பர்பி (Coconut sweets)
இலகுவான அதே நேரம் சுவையான இனிப்பு பண்டம் தான் தேங்காய் பார்பியும்.
தேங்காய் பார்பி செய்ய தேவையான பொருட்கள்
தேங்காய் துருவல் – 1 கப் (துருவியது)
சர்க்கரை – 1 கப்
ஏலக்காய் – 4 (பொடித்தது)
முந்திரி, பாதாம் – தலா 1 தேக்கரண்டி (பொடியாக்கியது)
நெய் – 1 தேக்கரண்டி
செய்யும் முறை
முதலில் தேங்காய்த் துருவலை லேசாக வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும். அரை கப் தண்ணீரில் சர்க்கரையைக் கொட்டி அடுப்பில் வைத்து கம்பி பதம் வரும் வரை பாகு காய்ச்சவும்.
கம்பி பதம் வந்ததும் தேங்காய்த் துருவலைக் கொட்டி கிளறவும். நன்றாக கிளறி கெட்டி பதம் வந்ததும், வாணலியில் ஒட்டாமல் வரும் போது, ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
ஒரு தட்டில் நெய் தடவி, அதில் கொட்டி பரப்பி ஆற வைக்கவும். ஒரு தேக்கரண்டி நெய்யில் சீவிய முந்திரி, பாதாமை போட்டு பொன்னிறமாக வறுத்து, தட்டில் கொட்டிய தேங்காய் கலவையில் கொட்டி லேசாக அழுத்தி விடவும். சூடு ஆறியதும் கத்தியால் விருப்பமான வடிவில் வில்லைகளாக போட்டுபரிமாறவும்.
அடுப்பில் தொடர்ச்சியாக விடாமல் கிளற வேண்டும் இல்லையெனில் அடிப்பிடித்துவிடும்.
தேங்காய் ரவா லட்டு – Rava Laddu
லட்டு என்றாலே குழந்தைகளுக்கு நன்றாக பிடிக்கும்.தேங்காய் சேர்ப்பதால் ரவை லட்டு மெதுமையாக இருக்கும். சுவையும் நன்றாக இருக்கும்.கடித்து சாப்பிட முடியாத வயதானவர்களுக்கும் சாப்பிடக் கூடியதாக இருக்கும்.
- ரவை – 1 கப் (200 கிராம்)
- சர்க்கரை- 1 கப் (100 கிராம்)
- ஏலக்காய்பொடி – ¼ டீஸ்பூன்
- முந்திரிபருப்பு – 20
- கிஸ்மிஸ் – 20
- பால் – ¼ கப் (25 கிராம்)
- தேங்காய் துருவல்- சிறிதளவு
- நெய் – 25 கிராம்
- முந்திரியை சிறிய சிறிய துண்டாக வெட்டி வைத்து கொள்ளவும்.
- ஏலக்காயை பொடி செய்து கொள்ளவும்.
- தேங்காயை துருவி வைத்து கொள்ளவும்.
- சர்க்கரையை மிக்ஸியில் மாவு போல் திரிக்கவும்.
- முதலில் ஒரு கடாயில் நெய் விட்டு முந்திரியையும், திராட்சையையும்யையும் வறுத்து எடுக்கவும்.
- தேங்காய் துருவலை நெய் ஊற்றி பொன்நிறமாக வதக்கவும்.
- நெய் ஊற்றி ரவை வறுக்கவும்.
- பாலை சூடான நிலையில் வைத்துக் கொள்ளவும். வறுத்து வைத்த திராட்சை, முந்திரி பருப்பு, தேங்காய் துருவல், ரவை மற்றும் சர்க்கரை இவை அனைத்தையும் சேர்த்து கலக்கவும்.
- அதில் ஏலக்காய் பொடியை சேர்க்கவும். சிறிது பால் தெளித்துக் கொள்ளவும்.
- இதை நன்றாக கலக்கி சிறு சிறு உருண்டையாக பிடிக்கவும். உருண்டை பிடிக்க வரவில்லை என்றால் சிறது பால் சேர்த்து உருண்டையாக பிடிக்கவும்.
- இதோ சுவையான ரவா லட்டு ரெடியாகி விட்டது.