சுக்கு மல்லி கோப்பி (Coffee for good digestion)

மழை, குளிர் காலங்களில் ஏற்படும் சளி, தடிமன், இருமல், தொண்டை நோ என்பவற்றால்  நாம் பெரிதும் அவதிப்படுவோம்.பாட்டிமார் சுக்கு மல்லி கோப்பி (Coffee for good digestion) குடிக்க சொல்வார்கள்.

சுக்குமல்லி கோப்பி வீட்டிலேயே இலகுவாக இயற்கைபொருட்களைக் கொண்டு செய்வது எப்படி என பார்ப்போம்.

மற்றும் இந்த கோப்பி சோர்வு , அஜீரணம், தலைவலிக்கு உடனடி தீர்வு தரும்.

சுக்கு, கொத்தமல்லி, மிளகு, சீரகம்  முக்கிய பொருட்கள். சுக்கு, சீரகம் ஒரு மடங்கு எடை. அவரவர் ருசிக்கேற்ப அளவுகளை மாற்றலாம்.

மல்லி விதை வயிற்று வாயுவை அகற்றி வாயுத் தொந்தரவு, உணவு எதுக்களித்தல், செரிமானம் இல்லாமை போன்றவற்றை சரி செய்கிறது.
உடலில் கொழுப்பு சேருவதையும் தடுக்கிறது.
 
மிளகு அஜீரணம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், அமிலச்சுரப்பு போன்றவற்றை தடுக்கிறது. உடலில் கொழுப்பு சேருவதையும் தடுக்கிறது.
ஜீரணம் தொடர்பான பிரச்சினை உள்ளவர்களும், உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் சாப்பாட்டிற்கு பிறகு சுக்கு மல்லி காபி (Coffee for good digestion)குடிக்கும் பழக்கத்தை மேற்கொண்டால் விரைவில் சரி செய்ய முடியும்.

                                                                              

விருந்து, விழாக்கள், அலுவலகப் பார்ட்டி என்று பல இடங்களிலும், பல்வேறு விதமான உணவு வகைகளைச் சாப்பிட்டு அஜீரணத்திற்கு உள்ளாவோர் இந்த சுக்கு வெந்நீரை 200 மி.லி அளவுக்கு வாரம் ஒரு முறை அருந்தி வந்தால், உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேராமல் தவிர்ப்பதோடு புத்துணர்ச்சியையும், சுறுசுறுப்பையும் தரும்.

சுக்கு வெந்நீரானது கிராமங்களில் சிறு ஹோட்டல் போன்ற கடைகளில் கிடைக்கும். அல்லது வீட்டிலும் நாமே தயாரித்து பருகலாம்.
சிறிதளவு சுக்கினை சிறு துண்டுகளாகவோ அல்லது சுக்குதூளை  தண்ணீரில் கொதிக்க வைத்து, வெல்லம், பனங்கற்கண்டு அல்லது கருப்பு கட்டி ஆகியவற்றில்  ஏதாவதொன்றை தேவையான அளவுக்கு சேர்த்து வடிகட்டி குடிக்கலாம்.
காலை மாலை பானங்களுக்கு பொருத்தமானது இந்த சுக்கு மல்லி காபி.
 
சுக்கு மல்லி காபி குடிப்பதால் கிடைக்கும் பயன்கள்
  1. வாயுத்தொல்லை இல்லாமல் போகும்.
  2. அஜீரணத்தைப் போக்கும்.
  3. வலி அகற்றி, மாந்தம் போக்கும். மலக்குடல் கிருமிகளை அழிக்கும்.
  4. ளியைக் குணப்படுத்தும்.
  5. மூட்டுவலியை மொத்தமாய்விரட்டும்.
  6. வாதம்,பித்தம் அகற்றும்.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *