கர்ப்பத்தை உறுதிப்படுத்துவது எவ்வாறு (Confirm the pregnancy)
பெண்ணொருவர் தாய்மை அடையும் போது, குடும்பத்திலுள்ளவர்கள் அவலைக் கொண்டாடுகிறார்கள்.அந்தக் குடும்பமே மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறது. திருமணமான தம்பதியரிடம் குடும்பத்தினர் ஆவலோடு எதிர்பார்ப்பது ஒரு குழந்தையைத் தான்.
ஆரம்ப கட்டத்தில் இருக்கும் கருவானது கருப்பைக்குள் பதியமாகாமல் மிதந்து கொண்டிருக்கும். இந்த நிலையில் தாயின் உடலில் சில இரசாயன மாற்றங்கள் உண்டாக்கும். கருவை தங்க்வதற்கு கருப்பையைத் தயார்படுத்தும் செயற்பாடுகளின் சமிக்சை ஆகும்.
கருத்தரித்ததை உறுதிபடுத்த (Confirm the pregnancy) உதவும் அறிகுறிகள்
மாதவிலக்கு பிந்திப் போகும்.
வயிற்றைப் பிரட்டல் அல்லது குமட்டல் ஏற்படும்.
புளி, மாங்காய் போன்ற புளிப்பான உணவுகளை மீது திடீரென ஆசை ஏற்படும்.
மார்பகம் பெரிதாக தோன்றும். அதில் தொட்டால் வலி ஏற்படும். மற்றும் மார்பக நரம்புகள் புடைத்துத் தெரியும். மார்பகக் காம்புகள் கறுப்பாக மாறும்.
அடிக்கடி சிறுநீர் வெளியேறும்.
மலச்சிக்கல் இருப்பது போல உணர்வு வரும்.
சில பெண்கள் கர்ப்பம் தரித்த ஆரம்பக் காலத்தில் கவலையான சோர்வான மனநிலையில் இருப்பார்கள். சிலருக்கு இதனால் தாங்க முடியாத தலைவலி, குறிப்பாக ஒற்றைத் தலைவலி உண்டாகும்.
குழந்தையை எதிர்நோக்கி காத்திருக்கும் பெண்ணுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் அவர் கருத்தரித்திருப்பதை (Confirm the pregnancy) ஒரளவு உறுதிப்படுத்தலாம்.
இத்தகைய அறிகுறிகள் இருந்தால் (urine test) சிறுநீர் பரிசோதனை செய்து உறுதி செய்து கொள்ளலாம்.அல்லது மருத்துவ உதவியைப் பெறலாம்.
மாதவிலக்கு
கர்ப்பம் தரித்திருப்பதற்கான முதல் அடையாளம் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு மாதவிலக்கு நிற்பதாகும். என்றாலும், சில பெண்களுக்கு கருத்தரித்த முதல் மூன்று மாதங்கள் வரைகூட மாதவிலக்கு ஏற்படுவது உண்டு. சில வேளைகளில் கருத்தரிக்காமலேயே மாதவிலக்கு நின்றிருக்கும். இதற்கு உடல் இயக்கங்களும், நோய்களும் முக்கியக் காரணமாக இருக்கும். குறிப்பாக, புதிய இடங்களில் குடியேறுதல், புதிய சூழல்களில் பணியாற்றுதல், டீன் ஏஜ் பருவ வயதின் இறுதியில் இருத்தல், அதிக கவலை, டென்ஷன் போன்ற மனநிலைகளில் இருத்தல், குறிப்பிட்ட காலத்தில் ஹார்மோன்கள் கரு முட்டைகளை வெளியிடாத நிலை ஆகிய காரணங்களாலும் மாதவிலக்கு நின்றிருக்கும்.
நோய் என எடுத்துக்கொண்டால், நாட்பட்ட நோய்கள், இரத்த சோகை, ஊட்டச்சத்துக் குறைபாடுகள், உடல்பருமன் போன்றவற்றால் மாதவிலக்கு தள்ளிப்போகலாம். ஆகவே, மாதவிலக்கு நிற்பதை மட்டுமே கவனத்தில் எடுத்துக்கொண்டு கர்ப்பமானதாக முடிவு செய்ய இயலாது.
களைப்பு
அசாதாரண உடல்சோர்வு, பல பெண்களுக்கு காலை நேரத்தில் தூக்கக் கலக்கம், மாலை வேளையில் தலை பாரமாக இருப்பது போன்ற உணர்வு உண்டாகும். சிலருக்கு இந்த அறிகுறிகள் தானாகவே மறைந்துவிடும். சிலருக்கு இத்தகைய சோர்வு கருத்தரித்த 12 ஆவது வாரமளவிலும் தொடரும்.
மசக்கை அல்லது வாந்தி
முதல் குழந்தையைப் பெறும் பெண்களுக்கு வாந்தி (Morning sickness) அநேகமாக ஏற்படும். அடுத்தடுத்த குழந்தைகளுக்காக கருத்தரிக்கும் போது, வாந்தி ஏற்படுவது குறைந்து விடும். பொதுவாக கருத்தரித்த இரண்டாம் மாத தொடக்கத்தில் இந்த அறிகுறியை உணரலாம். மாதவிலக்கு நிற்பதோடு, மேற்கண்ட அறிகுறிகளும் இருந்தால், கர்ப்பம் தரித்திருப்பதை (Confirm the pregnancy) பெரும்பாலும் உறுதி செய்து கொள்ளலாம்.
இந்த காலத்தில் தனக்கு மட்டுமின்றி, தனது கருக்குழந்தைக்கு தேவையான சத்தையும் தாய் பெற வேண்டியுள்ளது. இதனால் உணவு முறையில் மாற்றம் ஏற்பட்டு கருத்தரித்த ஆரம்ப காலத்தில் சிலருக்கு அதிக பசி உணர்வும், பலருக்கு பசியின்மையும் உண்டாகும்.
குமட்டல்
உறங்கி எழுந்தவுடனோ, காலை உணவுக்குப் பிறகோ குமட்டல், வாந்தி போன்றவை இருக்கும்.
சாப்பிட நினைத்தாலே குமட்டலும் வாந்தியும் வந்துவிடும். இந்தப் பிரச்சினைகள் காலை நேரத்திற்குப் பிறகு சரியாகும்.
அடிக்கடி சிறுநீர் கழித்தல்
இடுப்புக் கூட்டுப் பகுதியில் ஏற்படும் மாற்றங்களால் சிறுநீர்ப்பையில் தோன்றும் அழற்சிகளால் கர்ப்பிணிகளுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும்.
இத்தகைய அறிகுறிகள் கருக்காலத்தின் இரண்டாவது, மூன்றாவது மாதங்களில் ஆரம்பிக்கும். வளரும் கருவானது கருப்பையை அழுத்தி, கருப்பை அருகில் இருக்கும் சிறுநீர்ப்பையையும் அழுத்துவதால் இந்த நிலை உண்டாகி, மாதங்கள் செல்லச் செல்ல இந்தப் பிரச்சினைகள் அதிகரித்துக் கொண்டு போகும்.
இதனால், இறுதி மாதங்களில் சரியாக நித்திரை கொள்வது சிரமமாகி விடும்.
மார்பகப் பகுதியில் உண்டாகும் மாற்றங்கள்
முதல் முறையாக கர்ப்பம் தரிக்கும்போது மார்பகத்தில் பல்வேறு மாற்றங்கள் உண்டாகின்றன. மார்பக ரத்த நாளங்கள், சுரப்பிகள் பெரிதாகின்றன.
மார்பகக் காம்புகள் நீண்டு, பருத்துக் காணப்படும். தொடும் போது வலி ஏற்படுத்தும்.
வயிறு பெருத்தல்
கருக்குழந்தை உருண்டு திரண்டு வளரும்போது இடுப்புக் கூட்டுக்கு மேல் வயிறு பெரிதாக ஆரம்பிக்கிறது. இந்த நிலையில் குழந்தையின் அங்க அசைவுகள் போன்றவை தெரிய ஆரம்பிக்கும். குறிப்பாக 18 முதல்20-வது வாரங்களில் இந்த அசைவு தெரிய ஆரம்பித்து குழந்தை பிறக்கும் வரை அதிகரித்துக் கொண்டு போகும்.
அறிகுறிகள் சிலவேளைகளில் ஏமாற்றும்
மேற்கூறிய சில அறிகுறிகள் அதாவது கர்ப்பமானதாக உணர்த்தும் அறிகுறிகள், சில நேரங்களில் வேறு சில நோய்,காரணங்களுக்காகவும் ஏற்படலாம். அதனால் பரிசோதனை செய்து கொள்வது மிக அவசியம்.
கட்டிகள் இருந்தாலும் வயிறு பெரிதாகி, அசைவு தெரியும் நிலைகளும் உண்டு.
விற்றமின்D குறைபாட்டாலும் உடற்சோர்வு, குமட்டல் ,வாந்தி ஏற்படும்.
கருப்பை மற்றும் சினைப்பைகளில் கட்டிகள் ஏற்பட்டிருந்தாலும் மார்பகத்தில் இதே மாற்றங்கள் தோன்றும்.
அதனால், கரு தரித்திருப்பதை உறுதிபடுத்த நம்பகமான அறிவியல் முறையான பரிசோதனைகளை மேற்கொள்வது தான் சிறந்தது.
சிறுநீர் பரிசோதனை, ஹோர்மோன் பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை போன்றவற்றின் முலமே கர்ப்பம் தரித்திருப்பதை(Confirm the pregnancy) நிச்சயமாக உறுதி செய்ய முடியும்.