உணவுக்கு பின் நடைப்பயிற்சி இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துமா?(Control blood sugar)

 நடைப்பயிற்சி சர்க்கரை நோயாளிகள் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள (Control blood sugar)உதவுகிறது.இதனால் தான் ‘இனி நீங்க கட்டாயம் தினமும் வாக்கிங் போய் ஆகணும்’ என சர்க்கரை நோயாளிகளைப் பார்த்து மருத்துவர்கள் அறிவுறுத்துவது உண்டு.

முன்பெல்லாம் எங்கு செல்லவேண்டும் என்றாலும் நடந்து தான் சென்று வந்தோம்.

60, 70 வயது பாட்டிகள் கூட வயல் வேலைக்கு பல கிலோமீட்டர்கள் நடந்து சென்று வந்தனர்.அதனால் தான் அப்போது நோய்கள் குறைவாக இருந்தன.

ஆனால் இன்று?

ஆனால் இப்போது நிலைமை அப்படியில்லை பக்கத்து கடைக்குச் செல்ல வேண்டும் என்றாலே ‘ஓடிப்போய் பைக்கை தான் எடுக்கிறோம்’.

இதனால் தான் 30 வயதை தொடுவதற்கு முன்பே பலருக்கும் சர்க்கரைநோய் வருகிறது.

மாறி வரும் வாழ்க்கை முறையால் சர்க்கரை நோயில் இருந்து மட்டுமல்ல உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது.

குறிப்பாக சாப்பாட்டுக்கு பிறகு சிறிது நேரம் நடப்பது சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க(Control blood sugar) உதவும் என ஆய்வு ஒன்றின் மூலமாக கண்டறியப்பட்டுள்ளது.

ஸ்போர்ட்ஸ் மெடிசின் இதழில் வெளியிடப்பட்ட மெட்டா பகுப்பாய்வில், நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டே வேலை பார்ப்பவர்கள் மற்றும் நடப்பவர்களுக்கும் இடையிலான இதய ஆரோக்கியம், இன்சுலின் மற்றும் இரத்த சர்க்கரை அளவு (Control blood sugar) ஆகியவை ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

அதில் உணவுக்கு பிறகு உடனடியாக உட்கார்ந்து கொண்டு வேலை செய்பவர்களை விட, சிறிது நேரம் நடப்பவர்களின் ரத்த சர்க்கரை அளவு மற்றும் உடல் உள் உறுப்புகளின் செயல்பாடு சீராக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

annaimadi.com,உட்கார்ந்து கொண்டு வேலை செய்பவர்கள் பின்பற்ற வேண்டியது,Control blood sugar,உணவுக்கு பின் நடைப்பயிற்சி இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துமா?,அன்னைமடி,Those who work sitting should follow, Control blood sugar, Does walking after meals control blood sugar levels?,வாக்கிங்,walking exercise

உட்கார்ந்து வேலை செய்பவர்கள் பின்பற்ற வேண்டியது(Control blood sugar)

தற்போதைய காலக்கட்டத்தில் உட்கார்ந்து கொண்டே நீண்ட நேரம் வேலை பார்ப்பது என்பது கட்டாயமாகும்.

அப்படிப்பட்ட வேலையில் இருப்பவர்கள் நீண்ட நேரம் அமர்ந்த நிலையிலேயே இல்லாமல், அவ்வப்போது சின்ன பிரேக் எடுத்துக்கொள்ளலாம்.

காபி மெஷின் வரை எழுந்து சென்று காபி பிடித்து வரலாம்.தண்ணீர் பாட்டிலை நிரப்பலாம், சில படிக்கட்டுக்கள் ஏறி இறங்கலாம்.

இதுபோன்ற செயல்முறைகள் 2-h பிளாஸ்மா குளுக்கோஸ், ட்ரைகிளிசரைடுகள் மற்றும் கொழுப்பு அளவுகள் போன்றவற்றில் ஆரோக்கியமான தாக்கங்களை உருவாக்குவது ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.

கதிரையில் ல் இருந்து எழுந்திருக்காமல் தொடர்ந்து பணியாற்றுவதை விட, அடிக்கடி சிறிது நடைப்பயிற்சி செய்வது சிஸ்டாலிக் இரத்த அழுத்தம் (SBP), HDL கொழுப்பு, இன்சுலின், குளுக்கோஸ், ட்ரைகிளிசரைடுகள் மற்றும் இடுப்பு சுற்றளவு ஆகியவற்றை குறைப்பதிலும் பெரும் பங்காற்றுகிறது.

நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டே வேலை பார்ப்பதற்கு பதிலாக, மதிய உணவுக்குப் பிறகு சிறிது நேரம் எழுந்து நிற்பது குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்த உதவும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதுவே மதிய உணவுக்குப் பிந்தைய நடைப்பயிற்சி குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் அளவை குறைக்க உதவும் என்பது தெரியவந்துள்ளது.

வேலை செய்து கொண்டிருக்கும் இடத்தில் இருந்து எழுந்து போய் காபி சாப்பிடுவது, அலுவலகத்திற்குள்ளேயே ஒரு சின்ன வாக்கிங் போவது போன்ற சிறிய விஷயங்களைத் கவனித்து செய்யவும்.

இதுவே உங்களுடைய ரத்தத்தில் உள்ள உணவுக்குப் பிந்தைய சர்க்கரை அளவை குறைக்க பெரிதும் உதவும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *