ஏன் செப்பு பாத்திரங்கள் நல்லது ( Why copper utensils)

நவீன வாழ்க்கை மிகவும் வசதியான இலகுவான எஃகு, கண்ணாடி மற்றும் ஒட்டாத தன்மையுள்ள(Non-stick) சமையல் பாத்திரங்களை வழங்குகின்றது.என்றாலும், பழைய செப்பு பாத்திரங்களின் (Copper utensils) நன்மைகள் கருதி அவை மீளவும் பாவனைக்கு வந்துவிட்டன.

நம் ஆயுர்வேத மருத்துவம், நோய்களைக் குணப்படுத்துவதற்கான மூலிகைகள் பற்றி மட்டும் சொல்லவில்லை.

நோய் இல்லாமல்  வாழும் வழிமுறைகளையும் தந்திருக்கிறது. அதாவது ,சமைக்க  பயன்படுத்தும் பாத்திரங்களுக்கும் ஆயுர்வேதத்தில் முக்கியத்துவத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது.

பழைய காலத்தில் செப்பு பாத்திரங்களைத் (Copper utensils) தான் பாவித்தார்கள். காரணம்

செப்பு (தாமிரம்) , மனித ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத ஒரு கனிமமாகும். இந்த கனிமம்  புற்றுநோய்க்கு எதிரான பண்புகளைக் கொண்டுள்ளது. இது  (copper) நச்சுகளை நடுநிலையாக்க உதவுகிறது. மனித  உடலால் தாமிரத்தை ஒருங்கிணைக்க முடியாது.எனவே நாம் செப்பை உணவு சமைக்கும் பாத்திரங்களிலிருந்து  தான் பெற வேண்டும்.

செப்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் என்ன நன்மை?

ஆயுர்வேதம் ,’செப்பு செறிவூட்டப்பட்ட தண்ணீரை வெறும் வயிற்றில் குடிப்பது, மிக நல்லது’ ,என சொல்கின்றது. ஏனெனில் இந்த  நீர்

  • கப, வத பித்தம் ஆகிய மூன்றையும்  சமப்படுத்துகிறது.
  • இது வெவ்வேறு உறுப்புகளின் சரியான செயல்பாட்டை உறுதி செய்கிறது.
  • பல வளர்சிதை மாற்ற செயல்முறைகளை உறுதி செய்கிறது.

ஆகவே, இரவில் தண்ணீரை ஒரு செப்பு பாத்திரத்தில் வைத்து காலையில் குடிப்பதை  வழக்கப்படுத்துவோம்.

வீட்டிற்கு வந்தவரை வரவேற்க செம்பில் தான் தண்ணீர் கொடுப்போம். இதைப் பார்த்ததும் உங்களுக்கும் ஞாபகம் வரும். இப்பிடியான செப்பு செம்பில் இரவு நீரை விட்டு வைக்கலாம்.

ஒரு செப்புப்பாத்திரத்தில் தண்ணீர் சேமிக்கப்படும் போது, ​​செம்பு அதன் நேர்மறையான பண்புகளை தண்ணீருக்கு வழங்குகின்றது.

அத்துடன் இந்த நீர் பழையதாகிவிடாது. நீண்ட காலத்திற்கு வைத்திருக்க முடியும். வெளியில் செல்லும் போது பிளாஸ்டிக் போத்தல்களில் நீர் எடுத்து செல்வதை தவிர்க்கவும். அது நல்லது அல்ல. செப்பு குவளைகளில் எடுத்து செல்லலாம். எனது பிள்ளைகளின் ஆரோக்கியம் கருதி, செப்பு குவளைகளில் (Carriable copper vessels) தான் பாடசாலைக்கு  நீர் கொடுத்து விடுகின்றேன். நீங்களும் முயற்சி செய்யலாம்.

benefits of copper vessels,annaimadi.com,copper dring bottle

Check Price

இரத்த அழுத்தம் ,இதயத் துடிப்பு ஆகியவற்றைக் கட்டுப்படுத்த செப்பு  உதவுகிறது, அத்துடன் மோசமான கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடு அளவைக் குறைக்கிறது.

Why copper utensils are good)

நீங்கள் அவற்றை சமையல் செய்வதற்குப் பயன்படுத்தினாலும் நல்லது. அவற்றை  உணவை உண்பதற்கு பயன்படுத்தினாலும் நல்லது. ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் உங்களுக்கு உறுதி. உண்மையில் கண்ணாடி மற்றும் எஃகு  பாத்திரங்கள் மிகவும் நடுநிலையானவை. ஆனால்  ஒட்டாத தன்மையுள்ள பாத்திரங்கள் ( Non-stick pans) உங்கள் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். களிமண்ணாலான தூய பாத்திரங்களும் ஆரோக்கியத்திற்கு நல்லதே.

உங்கள் சமையல் பாத்திரங்களை உடனடியாக  மாற்றுவது என்பது சிரமம்.என்றாலும் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றலாம்.

நான் ஏற்கனவே சில பாத்திரங்களை மாற்றி விட்டேன்.

சாப்பாட்டு தட்டுகள் ( copper plates ),கறி சமைக்க 2 பாத்திரம் (cupper pans)  amazon இல் வாங்கியுள்ளேன்.

அதில் தான் இப்போது சமைத்து வருகின்றேன்.

ஆரோக்கியம் தானே முதலில்  முக்கியம் !

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *