சர்க்கரைநோயை குறைக்கும் மல்லி(Coriander leaves)

கர்ப்பிணிகளுக்கு சிறந்தது
எலும்பு மற்றும் தசைகளுக்கு
நிம்மதியான தூக்கம்

கொத்தமல்லியின் ஆரோக்கிய நன்மைகள்
- ரத்தம் சுத்தமடையும், புதிய ரத்தம் உண்டாகும்.
- மூக்கு சம்பந்தமான பிரச்சனைகள் பீனிசம், மூக்கடைப்பு, மூக்கில்புண், மூக்கில் சதை வளர்தல் போன்ற மூக்கு தொடர்புடைய அனைத்து வியாதிகளும் குணமடையும். தோல் நோய்களை குணமாக்குகிறது.
- 4 டம்ளர் தண்ணீர்ல ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி விதையைப் போட்டு நன்கு காய்ச்சி, ஆறவைத்துக் குடித்தால், உடல் சூடு தணியும். களைப்பும் காணாமல் போய்விடும்.
- கொத்தமல்லி விதை ஐந்து கிராம் கொத்துமல்லி விதையை இடித்து அரை லிட்டர் நீரில் விட்டு 100 மில்லியாகக் காய்ச்சி வடிகட்டி, பால் சர்க்கரை கலந்து காலை மாலை சாப்பிட இதய பலவீனம், மிகுந்த தாகம், நாக்கு வறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு ஆகியவை நீங்கும்.
- புண்களுக்கு,புதிதாக ஏற்படும் வெட்டுக் கயங்களுக்கு கொத்தமல்லி விதையை பொடிசெய்து அதை காயத்தின் மீது அடிக்கடி தடவினால் புண் குணமாகும்.
- தலைசுற்றல் கொத்துமல்லி இலை, சீரகம் சேர்த்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து கசாயம் செய்து அருந்தினால் சுவையின்மை நீங்கி பித்ததினால் ஏற்படும் தலைசுற்றல் நிற்கும்.

கொத்தமல்லியில் உணவில் எப்படி சேர்த்துக் கொள்ளலாம்?(How to use coriander leaves)

கல்லீரல் பாதுகாப்பு
கொத்தமல்லி இலையில் ஒலீயிக் அமிலம், லினோலிக் அமிலம், ஸ்டீரிக் அமிலம், பாமிற்றிக் அமிலம் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் போன்றவை நிறைந்து காணப்படுவதால், இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை பெருமளவு குறைக்க உதவுகிறது.
கல்லீரல் சிலருக்கு கல்லீரலில் அதிகளவு நச்சுகள் சேருவதாலும், அதீத அழற்சியினாலும் கல்லீரல் வீக்கம் ஏற்படுகிறது. இந்த பிரச்னையை சரி செய்வதில் கொத்தமல்லி(Coriander leaves) சிறந்த இயற்கை மருத்துவ உணவாக இருக்கிறது.
வாரத்திற்கு இரண்டு, மூன்று முறை கொத்தமல்லி சாறு அருந்தி வந்தாலும் அல்லது தினமும் உணவில் கொத்தமல்லி சேர்த்து சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் இருக்கும் கிருமிகள் மற்றும் நச்சுகள் நீங்கி கல்லீரலில் வீக்கம் ஏதும் ஏற்பட்டிருந்தாலும் அது குணமாகிறது.
மாரடைப்பு ஆபத்தை குறைக்கிறது
மாரடைப்பு இதயம் நன்றாக இயங்குவதற்கு இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளில் கொழுப்பு அதிகம் படியாமல் இருக்க வேண்டும்.உடலின் கொழுப்புச்சத்தை குறைத்து ரத்த நாளங்களில் கொழுப்பு உறைவதை தடுக்கிறது.
அதாவது ,கொத்தமல்லிகீரை ரத்தத்தில் இருக்கும் கொழுப்புகளை கரைக்கும் வேதிப்பொருட்கள் அதிகம் கொண்டுள்ளது எனவே கொத்தமல்லி அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் ஆபத்து பெருமளவு குறைக்கிறது.
கண்பார்வை நன்றாகும்
கொத்தமல்லி இலைகளில் விற்றமின் சி, விற்றமின் ஏ, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.
கண் நோய், விழி வெண்படல அழற்சி, மெட்ராஸ் ஐ, கண் முதுமையடைதல் ஆகியவற்றைக் குணப்படுத்துவதோடு கண்களில் ஏற்படும் அழுத்தத்தை குறைகின்றன.
சிறிது கொத்தமல்லி இலைகளை நன்கு அரைத்து, தண்ணீரில் விட்டு கொதிக்க வைக்கவும்.
அதனை மெல்லிய சுத்தமான துணியினால் வடிகட்டி வைத்துக் கொண்டு, இந்த நீரின் சில சொட்டுக்களை கண்களில் அடிக்கடி விட்டுக்கொண்டு வர கண் எரிச்சல், கண் உறுத்தல், கண் வலி, கண்களில் அடிக்கடி நீர் வடிதல் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.