தம்பதிகள் அன்பாக இருக்க (Couples stay in love)
கணவன், மனைவி உறவு (Couples stay in love) என்பது கடைசி வரை நம்முடன் வாழ்வின் இன்ப, துன்பங்கள் அனைத்திலும் கூடவே வரக்கூடியது. இந்த உறவுக்கு மரியாதை கொடுத்து நடப்பதும், எந்த சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்காமல் இருப்பதும் முக்கியம். ஒரு சில சின்ன சின்ன விஷயங்களை மட்டும் புரிந்து கொண்டு நடந்தால், கணவன், மனைவி உறவு சிறப்பாக அமையும்.
இன்றைய காலகட்டத்தில் நிறைய தம்பதிகள் விவாகரத்து பெற்று வருகின்றனர். இதற்கான முக்கியமான காரணமாக, தாம்பத்தியத்தில் இருக்கும் பிரச்சனைகள் தான்.
ஊடலும் கூடலும் இருந்தாலும் கலப்பிடமில்லாத அன்பை வாழ்நாள் முழுக்க பெறும் ஆணின் வாழ்க்கை அபரிமிதமான மகிழ்ச்சியை உள்ளடக்கி இருக்கும் என்பது நிச்சயமான வார்த்தை.
பெண்களின் மனதில் இருக்கும் ஆழத்தைக் கண்டறிய முடியாது என்பார்கள். அது தேவையில்லை. பெண்கள் மனதில் இருக்கும் உணர்வுகளைப் புரிந்துகொள்ளுங்கள் அது போதும்.
அப்படி பெண்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் கணவனாக இருந்தால் உலகையே வெல்லலாம்.
பெண்களின் மனம் கவர எளிமையான குறிப்புகளைப் பின்பற்றினால் போதும் ஆயுள் முழுமைக்கும் அழகான வாழ்க்கையைப் பெற்றிருப்பீர்கள்.
ஒவ்வொரு தம்பதியினரும் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஒன்றாக இணைந்து மகிழ்ச்சி காண வேண்டுமெனில், உறவுமுறைகளைப் பற்றிய பல விஷயங்களை அவர்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியம்.
பொதுவாக அனுபவத்தின் மூலமே இது தொடர்பான பக்குவமும், லாகவமும் கைவரப்பெறும் என்றாலும்,
இதனைப்பற்றிய சில உண்மைகளை உணர்ந்து கொள்ள முற்படுவதில் தவறொன்றுமில்லை.
அன்பாக இருத்தல், உங்கள் உறவுமுறைகளை ஆரோக்கியமானதாகவும், வலிமையானதாகவும்
துன்பமான நாட்கள் என்பது அனைவரின் வாழ்விலும் வந்து போகக்கூடியதே உங்கள் அன்புக்குரியவரி
வாழ்க்கையின் பல்வேறு அடுக்குகளில் உங்களுக்கு மன அழுத்தங்கள் ஏற்பட்டிருக்கலா
பல சமயங்களில் என்ன நடந்திருக்கக்கூ
பொது இடங்களில் சண்டையிடாதீர்கள்
தேவைப்பட்டால் உங்கள் உரிமைகளை நிலைநாட்ட சண்டையிடலாம் என்பதை மறுப்பதற்கில்லை
ஆரோக்கியமான உறவுமுறையை தக்கவைத்துக் கொள்ள(Couples stay in love)
ஆரோக்கியமான உறவுமுறையை தக்கவைத்துக் கொள்ள (Couples stay in love) வேண்டுமெனில் பின்வருவனவற்றை நீங்கள் பின்பற்ற வேண்டியது மிகவும் முக்கியம். வெவ்வேறு விதமான வாழ்வியல் சூழ்நிலைகளில் நியாயமாகவும், விவேகமாகவும் நடந்து கொள்வது மிக்க அவசியம்.
1. ஒரேசமயத்தில் இருவரும் கோபப்படாதீர்கள்.
2. வாக்குவாதம் ஏற்படுகின்ற பிரச்சினைகளில் ஒருவர் மற்றவரை ஜெயிக்கவிட்டு மகிழ்ச்சி அடையுங்கள்.
விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை எப்பொழுதுமே!
3. விமர்சனத்தையே வாஞ்சையுடனும், அன்புடனும் செய்து பாருங்கள்.
4. கடந்தகால தவறுகளைச் சுட்டிக் காட்டாதீர்கள்.
5. உலகத்திற்காக போலியாக வாழ்வதைக் காட்டிலும், உங்களுக்காகவே வாழ்ந்து பாருங்களேன்.
6. விவாதம் தவிர்க்க முடியாதது என்றால், கூடியவரைக்கும் அதை ஒத்திப் போடுங்கள்.
7. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது ஒரு அன்பான வார்த்தையையோ அல்லது வாழ்த்தையோ
உங்கள் துணையிடம் உபயோகப்படுத்திப் பாருங்கள்.
8. செய்த தவறை உணரும் போது அதை ஒத்துக் கொள்ளவும் அல்லது அதற்காக மன்னிப்புக் கேட்கவும் தயங்காதீர்கள்.
9. சூழ்நிலைக்கேற்ப நடந்து கொள்ளுதல், அனுசரித்துப் போகுதல்,மற்றவர்களை மதித்து நடத்தல் மிக முக்கியமானது.
மன்னிப்பு (Couples stay in love)
மன்னித்துக் கொள்ளும் தம்பதிகள் மட்டும் தான் நீண்டகால உறவுமுறைகளுடன் வாழ்ந்திருப்பர்
நீங்கள் இருவருமே தவறு செய்யக்கூடியவர்
உங்கள் நேசத்தையும், வாழ்க்கையையும் முடிந்த வரையில் நன்கு அனுபவியுங்கள். உங்களில் யார் தவறு செய்தாலும் மன்னிக்கப் பழகுங்கள்.
சேர்ந்து சிரித்து மகிழ வேண்டியது மிகவும் முக்கியம். நல்ல உணர்வுகள், முக்கியமாக மனமார்ந்த சிரிப்பு, மனக்கிலேசங்களை இலகுவாக்கி, மனங்களை ஒன்றிணைக்கக்கூடியதாகும்.
உள்ளூர இருக்கக்கூடிய தடுப்புகள், பதற்றம் முதலானவற்றை உடைத்தெறியக்கூடிய சக்தி சிரிப்புக்கு உண்டு. இவ்வளவு ஏன், மன அழுத்தத்துக்கு எதிராக போராடும் சக்தியும் கூட சிரிப்புக்கு உண்டு.
தெளிவான உரையாடல்
மனதில் என்ன உள்ளது என்பதை திறம்பட படிப்பது என்பது எல்லோராலும் இயலாத ஒரு காரியமாகும்.தெளிவான முறையில் உரையாடுங்கள்.
தெளிவான முறையில் மனதில் உள்ளவற்றை மற்றவர் அறிய பேசிக் கொள்வது நல்லது.
இதன் மூலம் உங்கள் நேரம் விரயமாவதை தவிர்ப்பதோடு, தவறான புரிதலால் வரக்கூடிய பல்வேறு பிரச்சினைகளையும் தவிர்க்க முடியும்.
உரையாடலின் போது உங்களுக்கு என்ன தேவை என்பதை, புரியும் விதத்தில் எளிமையாக சொன்னாலே போதும்.
பொறுப்புணர்ச்சி
இதன் மூலம் உங்களின் உள் மன உணர்வுகளை எளிதாக புரிய வைத்து, அவருக்காக நீங்கள் எதையும் செய்வீர்கள் என்ற நம்பிக்கையை விதைக்க முடியும்.
பொறுப்பாக நடந்து கொள்வதன் மூலம் உங்கள் அன்புக்குரியவரி
எந்த உறவுமுறையை எடுத்துக் கொண்டாலும், அதில் பொறுப்புணர்வோடு
வெறும் வாய்ச்சொல்லோடு நின்று விடாமல், அதனை செயல்படுத்திக் காட்டுவதில் தான் உங்கள் திறமை உள்ளது.
தூய்மையான அன்பு அற்புதங்களை நிகழ்த்தவல்லது இன்றைய அவசர யுகத்தில், அன்பின் ஆற்றலை அறிந்திருப்போரி
உறவுமுறைகளைப் பற்றிய முக்கியமான விஷயங்களை மனதில் கொண்டு அன்புடன் தம்பதிகள் வாழ்ந்து வந்தால், உறவுமுறையானது நீண்ட நாட்கள் சந்தோஷமாக நிலைத்திருக்கும்.