பித்தவெடிப்பை இலகுவாக எப்படி நீக்கலாம் (Cracked heel)
இளம் வயது பெண்களுக்கு பாதங்களில் வெடிப்பு (Cracked heel) ஏற்படுவதில்லை. குறிப்பிட்ட வயதுக்கு மேல் தான் பாதவெடிப்பு பிரச்னை ஏற்படுகிறது. உடலில் தேவையான அளவு நீர்ச்சத்து இன்மையே இதற்கு முதல் காரணம்.
உணவில் நீர்ச்சத்து உள்ள காய்கறிகள் மற்றும் பழங்களைத் தவிர்ப்பதால், நாளடைவில் பாதவெடிப்பு குணப்படுத்த முடியாத நிலையை எட்டுகிறது.
தண்ணீர் குறைவாக குடிப்பது மற்றும் வேலை டென்ஷன் ஆகியவையும் பாதவெடிப்புப் பிரச்சனையின் தீவிரத்தை அதிகரிக்கிறது.
வறட்சியால் குதிகால் பகுதியில் வெடிப்பு உண்டாகிறது. வறட்சியான சருமம் உள்ளவர்கள், அதிக தண்ணீர் குடிப்பதோடு மாய்ஸ்சரைசர் தடவ வேண்டும்.
உடல் எடை அதிகமாக இருப்பதும் குதிகாலில் வெடிப்பை ஏற்படுத்தும். பாதங்களுக்கு அதிக அழுத்தம் கொடுப்பதால், இது ஏற்படுகிறது.
பெண்கள் நீண்ட நேரம் நீரிலேயே இருப்பதாலும் சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய் வெளியேறிவிடுகிறது. துணி துவைப்பது, சமையல் அறை உள்ளிட்ட வேலைகளைச் செய்யும் போது பாதம் ஈரத்தில் இருந்தால், பாதவெடிப்புக்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது.
பாத வறட்சியுடன் கிருமித் தொற்றும் ஏற்பட்டு பாதவெடிப்பை பெரிதாக்குவதால், குதிகால் வலி, வெடிப்பில் ரத்தக் கசிவும் ஏற்படலாம்.
பித்தவெடிப்புப் பிரச்னை ஏற்பட்டவுடன், அது மேலும் அதிகரிக்காமல் தடுப்பதற்காக கால்களை அழுக்கிலும், ஈரத்திலும் இருந்து பாதுகாப்பதற்காக காலணி அணிய வேண்டும். இதன் மூலம் பாதவெடிப்பு பெரிதாகாமல் தடுக்கலாம்.
பெண்களே கவனமின்மையால் நீங்கள் இழக்கும் வனப்பு, அடுத்தடுத்து ஆரோக்கியக்குறைபாடுகளுக்கு வழி வகுக்கிறது. பாதங்களில் ஏற்படும் பித்தவெடிப்புக்குத் தீர்வாக, பாதங்களைபராமரிப்போம்.
பித்த வெடிப்பு நீக்கும் இயற்கை மருத்துவம் (Tips to get rid of Cracked heel)
- ஒரு டம்ளர் நீர் உடன் 10 கிராம் நன்னாரிவேர் சேர்த்து கொதிக்க வைத்து , அரை டம்ளராக ஆனதும் வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வர பித்தவெடிப்பு மறைஞ்சிடும்.
- ஒரு தடவை பயன்படுத்திய நன்னாரிவேரை 3, 4 தடவை கூட பயன்படுத்தலாம்.
- வெள்ளை கரிசலாங்கண்ணி இலையை பொடி செஞ்சு, ஒரு சிட்டிகை தேன் சேர்த்து, ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தாலும் பித்தவெடிப்பு (Cracked heel) சரியாகும்.
- தேனையும், சுண்ணாம்பையும் ஒன்றாய்க் குழைத்து பித்தவெடிப்பில் தடவி வந்தால் பித்தவெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.
- பப்பாளி பழத்தை நன்கு நைசாக அரைத்து, அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும், பாதத்தை தண்ணீரில் நனைத்து தேய்க்க வேண்டும்.
- இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், பித்த வெடிப்பு குணமாகும்.
- மருதாணி இலைகளை நன்றாக அரைத்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட வேண்டும். பின், தண்ணீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.
- கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடுபடுத்தி, அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது நேரம் வைத்திருந்து, பின், பாதத்தை ஸ்கிரப்பர் போன் ற சொர சொரப்பானவற்றால் தேய்த்து கழுவினால் பாதத்தில் உள்ள இறந்தசெல்கள் உதிர்ந்து விடும்.
- இதனால் பித்த வெடிப்பு (Cracked heel) ஏற்படுவதும் தவிர்க்கப் படுவதோடு, பாதம் மென்மையாகவும் இருக்கும்.
- பித்தவெடிப்பு (Cracked heel) இருப்பவர்கள், தண்ணீரை கை பொறுக்கும் அளவுக்கு சுட வைத்து, அதில் சிறிது நேரம் காலை வைத்து எடுத்தால், பாதங்கள் மிருதுவாகும்.
- கூடவே, வெடிப்பின் மூலமாக தேவையான நீர் உறிஞ்சப்பட்டு விடும். பாதத்தில் உள்ள அழுக்குகளும் வெளியேறிவிடும். இதை தினமும் செய்யலாம்.
- தரம் குறைவான காலணிகளைப் பயன்படுத்துவதாலும், சிலருக்கு பித்த வெடிப்பு ஏற்படும். எனவே காலணிகளை வாங்கும் போது, விலை மற்றும் டிசைனை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், Nஅல்ல தரமானதாக வாங்குவது நல்லது.
- விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சமஅளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
- இதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, அதை பாதத்தில் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால், பித்த வெடிப்பு குணமாகும்.
- வேப்ப எண்ணெயில், சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவினால், பித்த வெடிப்பு குணமாகும்.
குளித்து முடித்ததும், பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும். பின், பாதத்தில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் வெடிப்பு வராமல் தடுக்கலாம்.
- வெளியில் சென்று வந்தவுடன் பாதங்களை நன்றாக தேய்த்துக் கழுவலாம். படுக்கச் செல்லும் முன்பும் பாதங்களைச் சுத்தம்செய்து கிரீம் தடவிக்கொள்வது பாதத்தின் ஈரப்பதத்தைப் பாதுகாக்க உதவும்.