பயிர் சுழற்சிமுறை என்பது என்ன(Crop rotation)
விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் ஆண்டு முழுவதும் ஒரே மாதிரியான பயிர் வகைகளை திரும்ப திரும்ப சாகுபடி செய்வதைத் தவிர்த்து, சுழற்சி முறையில் (Crop rotation) பயிர்களைத் தேர்வு செய்து சாகுபடி செய்தால் கூடுதல் மகசூல் கிடைக்கும்.
இதனால் அதிக இலாபமும் பெறலாம்.
அதுமட்டுமல்லாது ஒரே மாதிரியான பயிரினை தொடர்ந்து பயிர் செய்வதால் நிலமானது தனது வளத்தினை இழக்கிறது. பயிர் செய்யும் நிலத்தின் தன்மை, நீரின் அளவு ஆகியவற்றுக்கு ஏற்ப பயிர் சுழற்சி முறையை மேற்கொள்ளலாம்.
கோடிக்கணக்கான உயிரினங்கள் இந்த உலகில் வாழ்கின்றன. ஒரு நூறு உயிரினங்களை நாம் அறிந்திருக்கலாம். இயற்கையோடு இணைந்திருக்கும் இவைகளைக் கண்டு மகிழ்ந்தால் உள்ளம் உவகைக் கொள்ளும்.
இயற்கை அழகை ரசியுங்கள், இதயத்தைத் தொலையுங்கள் மகிழ்வோடு வாழுங்கள் இந்த உலகம் மிகமிக இனிமையானது.
சுற்றுச்சூழல் மாசுப்பட்டதின் விளைவாக இன்று தாய்ப்பாலில் கூட விஷம் என்ற நிலைமை உருவாகி விட்டது, இனியும் நாம் தாமதித்தோமென்றால் தரணி தரை மட்டமாக்கி விடும்.
பஞ்ச பூதங்களால் இயற்கை காக்கப்படுகிறது.ஆரோக்கியம் பேணப்படும். விவசாயத்திற்கான செலவுகள் குறையும்.
இயற்கை வேளாண்மையின் முக்கிய அம்சமான பயிர் சுழற்சி முறை
(Benefits of Crop rotation)
நிலத்தில் ஒரே வகையான பயிர்களை பயிரிடாமல் சுழற்சி முறையில் (Crop rotation) பயிரிட வேண்டும் இயற்கை வேளாண்மையின் முக்கிய அம்சமான பயிர் சுழற்சி முறையை நம் முன்னோர்கள் முறையாக செய்தனர்.
முதல் பருவத்தில் நெல், அடுத்த பருவத்தில் உளுந்து , அதற்கடுத்து பயறுவகைகள் என மாறி மாறி பயிரிட்டனர். பயிர் சுழற்சி முறையினால் (Crop rotation) மண்ணின் வளம் கூடும் என நன்கு தெரிந்திருந்தனர்.
இயற்கை வேளாண்மையில் சம்பா நெல்லுக்கு பிறகு உளுந்து, குறுவை நெல்லுக்கு பிறகு தாளடி நெல், அதற்கு பிறகு சம்பா நெல் அதனூடே சணப்பு இப்படித்தான் மாற்றி மாற்றி பயிர் செய்ய வேண்டும்.
முதலில் சணப்பு விளைந்த பின் அதன் விதையை நீக்கி மூடாக்கி போட்டால் நல்லதொரு உரமாக மாறும்.
பயிரின் வளத்தை தீர்மானிப்பது மேல் மண்ணாகும், மேலும் நிலத்தை சில நாட்கள் தரிசாக போட்டு வைத்தொமென்றால், களைத்துபோன நிலம் புத்துயிர் பெறுகிறது.
பல்லாயிரம் வருடங்களாகவே இந்த யுக்தியை நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்துள்ளனர்.
இப்படி மண்ணை தரிசாக போட்டு வைக்கும் போது அம்மண்ணில் கொழிஞ்சி, அவுரி, கரந்தை உள்ளிட்ட செடிகள் முளைத்து ஈரத்தை தக்க வைக்கின்றன.
மேலும் பயிர் விளைவிக்க அந்த மண்ணை உழும் பொழுது அச்செடிகளை மடக்கி போட்டால் நல்லதொரு உரமாக மாறுகின்றது.
இயற்கை உரம் பயன்படுத்துவதால், உற்பபத்தி செலவு குறையும். அதிக இலாபம் பெறலாம். சுவையும் அதிகம்.
இந்த உலகம் மிக மிக இனிமையானது தவறான புரிதலால் தடம் மாறிச் செல்கிறோம். இயற்கையை ரசிக்கத் தவறுகிறோம்.
இயற்கையை ரசித்துக் கொண்டே இருந்தால் ஆரோக்கியம் மேம்படும்.இயற்கைஉணவுகளை உண்டு ஆனந்தமாக வாழ்வோம்.நஞ்சில்லாஉணவு பொருட்களை உருவாக்கி தரும் விவசாய பெருமக்களுக்கு நன்றி செலுத்துவோம்.