ஸ்படிக லிங்க வழிபாட்டின் பலன்கள் எவை?(Crystal Lingam)

ஆயிரம் லிங்கத்தை வழிபட்டால் கிடைக்கும் புண்ணியமும், ஆயிரம் லிங்கத்திலிருந்து நமக்கு கிடைக்கப் பெறும் ஆசியும், இந்த ஒரு ஸ்படிக லிங்கத்தை (Crystal Lingam)  வைத்து வழிபட்டால் கிடைக்கும் என்பது பொதுவான நம்பிக்கை.

ஸ்படிகம் என்பது சிவபெருமானின் தலையில் இருக்கும் சந்திரனில் இருந்து விழுந்த ஒரு துளியாக கருதப்படுகிறது.

இதன் தனி சிறப்பானது ஒரு வினாடிக்கு பல்லாயிரக்கணக்கான நேர்மறை அதிர்வுகளை வெளிப்படுத்துவதாக அளவிடப்பட்டுள்ளது.

நவக்கிரக சஞ்சார நிலைகளால், மனிதர்களுக்கு ஏற்படும் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் சிரமமான பலன்களை நிவர்த்தி செய்யக்கூடியதாக நம்பப்படுகிறது.

இயற்கையான சுயம்பு லிங்க வடிவத்திலேயே, பூமியின் ஆழங்களிலிருந்து கிடைக்கக்கூடிய கண்ணாடி போன்ற ஒரு வகை கல் தான் ‘கிரிஸ்டல்’ எனப்படும் ‘ஸ்படிகம்’ ஆகும்.

அதன் காரணமாக ஸ்படிக லிங்கமானது (Crystal Lingam) அரிய சக்திகளை உடையதாக கருதப்படுகிறது. ஸ்படிக லிங்கத்தின் முன்னர் சிவவழிபாடு மட்டும் செய்யவேண்டும் என்று வழிமுறைகள் ஏதுமில்லை.

அனைத்து கடவுள் ரூபங்களையும் ஸ்படிகத்தின் வாயிலாக வழிபாடு அல்லது மந்திர ஜப வழிபாடுகள் செய்யலாம்.

வரலாற்றுக்கு முந்தைய கால கட்டத்திலேயே லிங்க வழிபாடு மிகவும் பிரபலமாக இருந்திருக்கிறது. இறைவனின் உருவமற்ற தன்மையை (நிராகார) குறிக்கும் வகையிலும், அவனின் குணமற்ற (நிர்க்குண) தன்மையைக் குறிக்கும் வகையிலும் ஸ்படிக லிங்கங்கள் குறியீடுகளாகக் கருதப்பட்டு பூஜிக்கப்பட்டன.

யஜுர் வேதம் சிவனை ஜோதி ஸ்படிக மணி லிங்க வடிவானவன் என்று கூறுகிறது. சிவன் ஜோதியாகவும், லிங்க ரூபமாகவும், ஸ்படிக ரூபமாகவும் விளங்குகிறார் என்பது இதன் விளக்கம்.

ஸ்படிகம் என்பது என்ன?(Crystal Lingam)

ஆங்கிலத்தில் இதை ‘கிரிஸ்டல்’ என்று கூறுகிறார்கள். ஸ்படிகம் இமய மலையின் அடி வாரத்தில் ஆழமான பகுதியிலிருந்து எடுக்கப்படுகிறது. இது மிகவும் விலை உயர்ந்தது. இதன் தோற்றம் தூய்மையான கண்ணாடி போன்று இருக்கும்.
 
ஸ்படிக லிங்கத்திற்கு என்று எந்தவிதமான நிறமும் கிடையாது. ஸ்படிகம், பக்கத்தில் உள்ள பொருளின் தன்மையை பிரதிபலிக்கக்கூடியது.
இதன் இருப்பு மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.
உதாரணத்திற்கு இந்த லிங்கத்தின் பின்புறத்தில் சிகப்பு செம்பருத்தி பூவினை வைத்தால் சிவப்பு வர்ணத்தை காட்டும்.
crystal lingam, ஸ்படிகம்,,ஸ்படிகம் என்பது என்ன,annaimadi.com,அன்னைமடி ,Spadiak lingam,Crystal Lingam,ஸ்படிக லிங்கம்,ஸ்படிகமாலை,BENEFITS OF Crystal Lingam ,ஸ்படிக லிங்க வழிபாட்டின் பலன்கள் எவை?,What are the benefits of crystal linga worship?
பச்சை துளசியை வைத்தால் அந்த பச்சை துளசியின் பிம்பம் இதில் தெரியும்.
இப்படியாக நம் மனதில் நல்லதை நினைத்து வேண்டினால் நல்லது நடந்துவிடும். கெட்டதை நினைத்து வேண்டினால் கேட்டது நடந்துவிடும்.
ஸ்படிக லிங்கத்தின் (Crystal Lingam)முன்பு நாம் என்ன வேண்டுதல்களை கேட்கின்றோம் அது நிச்சயமாக நடந்துவிடும் என்பது சாஸ்திரத்தில் கூறப்பட்டிருக்கும் உண்மை.
ஸ்படிக லிங்கத்தின் முன் சிவனை மட்டும் தான் வழிபட வேண்டும் என்றில்லை. உதாரணமாக லட்சுமியின் அருள் வேண்டி மகாலட்சுமி அஷ்டோத்திர மந்திரம் சொல்வோர், அம்மந்திரத்தை ஸ்படிக லிங்கத்தின் முன் அமர்ந்து ஒன்றுபட்ட சிந்தனையோடு சொன்னால் பலன் பல மடங்கு பெருகி வரும்.
மாணவர்கள் சரஸ்வதி யை நினைத்து நன்றாக படிக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டு ஸ்படிக லிங்கத்தை ஒரு ஐந்து நிமிடம் உற்றுநோக்கினால் நல்ல நினைவாற்றல் பெருகும்.
நன்றாக வியாபாரம் நடக்க வேண்டும் என்று குபேரரை நினைத்து பூஜித்தால் உங்களது வியாபாரத்தில் நல்ல வருமானம் கிடைக்கும்.
இப்படி நாம் மனதார எதை நினைத்து வேண்டுகின்றோமோ அதன் பிரதிபலன் நமக்கு முழுமையாக கிடைத்துவிடும். இந்த சிறப்பு  ஸ்படிக லிங்கத்திற்கு உள்ளது.
 
இந்த ஸ்படிக லிங்கத்தை வீட்டில் வைத்து வழிபடுபவர்கள் தினந்தோறும் பூஜை செய்து வழிபட வேண்டும்.
அந்த லிங்கத்திற்கு காய்ச்சாத பால், பழரசம், பன்னீர், மஞ்சள் கலந்த தண்ணீர், அல்லது சுத்தமான வெறும் தண்ணீர் இவைகளில் ஏதாவது ஒன்றை வைத்து அபிஷேகம் செய்து பூவினால் அலங்காரம் செய்து தீபாராதனை காட்டி தினந்தோறும் நெய்வேதியம் படைத்து வழிபட்டு வந்தால் நமக்கு நாம் வாழ்வில் எதிர்பார்க்க முடியாத நன்மைகளும் கூட கிடைக்கும்.

அந்த பூஜையின் காரணமாக வீடுகளில் ஐஸ்வரியமும், சந்தோ‌ஷமும் அதிகரிக்கும்.

இது மிகவும் குளிர்ந்த தன்மையது. அதனால் இதன் மணிகளை மாலையாகக் கோத்து பெரியவர்கள் அணிவதும் உண்டு.

ஆலயங்களும் ஸ்படிக லிங்கம்

சிதம்பரத்தில் ஸ்படிக லிங்கம் சந்திர மவுலீஸ்வரராக வழிபடப்படுகிறது. தினமும் விடியற்காலையில் இதற்கு பூஜைகள் செய்யப்படுகின்றன. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலும் ஸ்படிக லிங்கம் இருக்கிறது.

காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோயிலிலும் ஸ்படிக லிங்கம் உள்ளது. உற்சவ மூர்த்தி இங்கே கண்ணாடிக் கருவறையில் ருத்திராட்சப் பந்தலின் கீழ் வீற்றிருக்கிறார்.

இவருக்கு முன்னால் மற்றொரு சிறிய சன்னதி இருக்கிறது. இங்கு தான் ஸ்படிக லிங்கம் நந்தியோடு சேர்த்து பூஜிக்கப்படுகிறது.

அதே போல ராமேஸ்வரம் கோயிலிலும் ஸ்படிக லிங்கம் உள்ளது. இது விபீஷணனால் இங்கே கொண்டு வரப்பட்டதாக கூறுகிறார்கள். ராமரும் சீதையும் பூஜித்த லிங்கமாக இது கருதப்படுகிறது.

இராமேஸ்வரத்தில் இராமநாதர் சன்னதியில் அதிகாலை 4 மணிக்கு ஸ்படிகலிங்க (Crystal Lingam) தரிசனம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

இங்கு ஒரு விசேஷம் என்னவென்றால், அதிகாலையில் அதாவது காலை 4 மணி முதல் 5 மணி வரை, இக்கோயிலில் உள்ள ஜோதிர்லிங்கத்தின் முன் ஸ்படிக லிங்கம் வைக்கப்பட்டு வழிபாடு நடக்கிறது.

கோயிலில் இந்த தரிசனத்திற்கென்று தனி டிக்கெட்டுகள் கிடைக்கின்றன. இந்த வழிபாடு முடிந்ததும் கோயிலில் இருக்கும் எல்லா தீர்த்தங்களிலும் நீராடுவது மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது.

இவை தவிர திருவெண்காடு எனப்படும் ஸ்வேதாரண்யத்திலும், நெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலிலும் ஸ்படிக லிங்கம் வழிபடப்படுகிறது.crystal lingam, ஸ்படிகம்,,ஸ்படிகம் என்பது என்ன,annaimadi.com,அன்னைமடி ,Spadiak lingam,Crystal Lingam,ஸ்படிக லிங்கம்,ஸ்படிகமாலை,BENEFITS OF Crystal Lingam ,ஸ்படிக லிங்க வழிபாட்டின் பலன்கள் எவை?,What are the benefits of crystal linga worship?

இத்தனை சிறப்பு வாய்ந்த ஸ்படிக லிங்கத்தை பயன் பெற எப்படி வழிபட வேண்டும்?

ஸ்படிக லிங்கம் என்பது பொதுவாக நீண்ட குச்சி போன்ற வடிவமும், சுமார் ஒரு இன்ச்சிலிருந்து, பத்து இன்ச் வரை உயரமும் ஆறு முகங்கள் அல்லது பட்டைகள் உடையதாகவும் இருக்கும்.

இதன் தனிச் சிறப்பு என்னவென்றால் இது ஒரு வினாடிக்கு, 32,768 தடவை நேர்மறையாக அதிரக்கூடிய தன்மை உடையது. அதனால் தான் ஒரு ஸ்படிக லிங்க கருங்கற்களால் செய்யப்பட்ட ஆயிரம் லிங்கங்களுக்குச் சமம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

ஸ்படிக லிங்கத்துக்கு விபூதியால் அபிஷேகம் செய்தால் கர்ம வினைகள் நீங்கும். முன்பு சொன்னது போல இதன் நேர்மறையான அதிர்வுகள் நவகிரகங்களின் கெட்ட பலனை பெரிதும் அழிக்கும்.

ஸ்படிக லிங்கத்தின் முன் அமர்ந்து தூய மனதோடு சிவனின் பஞ்சாட்சர மந்திரத்தை 108 தடவை ஜபிக்க எல்லா பாவங்களிலிருந்தும் விமோசனம் கிடைக்கும்.

பொதுவாகவே மந்திர சித்தி, அதாவது சொல்லும் மந்திரங்களுக்கு முழுமையான பலன் கிட்ட வேண்டுமானால் அம்மந்திரத்தை ஸ்படிக லிங்கத்தின் முன் அமர்ந்து பய பக்தியுடன் ஜபித்தால் பலன் பல மடங்கு கிட்டும்.

ஸ்படிகம் என்பது நம் மனதை அப்படியே பிரதிபலிக்கும் தன்மையது. அதனால் அதை வணங்கும்போது தூய்மையான மனதோடு வணங்குதல் அவசியம்.

தீய எண்ணங்கள், பிறரைக் கெடுக்கும் நோக்கத்துடன் செய்யப்படும் பிரார்த்தனைகள், அலைபாயும் மனம், தெளிவற்ற சிந்தனை இவற்றோடு வணங்கினால் எதிர்மறையான பலன் ஏற்பட்டுவிடும்.

அதனால் ஸ்படிகத்தை வணங்கும்போது மிகவும் கவனம் தேவை. ஸ்படிக லிங்கத்தைப் போலவே ஸ்படிக மணி மாலையும் மிகவும் புனிதமானது. விசேஷமானது.

ஸ்படிகம் நம் மனதில் தன்னம்பிக்கையையும், எதையும் எதிர் கொள்ளும் நெஞ்சுரத்தையும் வழங்கும் தன்மை உடையது. அதனால் நம் தோற்றத்திலும் ஒரு பொலிவு உண்டாகும்.

தன்னம்பிக்கையும், தைரியமும் இருந்து விட்டால் வாழ்வில் துன்பங்கள் ஏது? எல்லாம் தவிடுபொடியாகிவிடாதா? வீட்டில் வைத்தும் ஸ்படிக லிங்கத்தை பூஜிக்கலாம்.crystal lingam, ஸ்படிகம்,,ஸ்படிகம் என்பது என்ன,annaimadi.com,அன்னைமடி ,Spadiak lingam,Crystal Lingam,ஸ்படிக லிங்கம்,ஸ்படிகமாலை,BENEFITS OF Crystal Lingam ,ஸ்படிக லிங்க வழிபாட்டின் பலன்கள் எவை?,What are the benefits of crystal linga worship?

ஸ்படிக லிங்கத்தின் (Crystal Lingam) மற்றொரு பெரும் சிறப்பு, இது தாந்திரீகர்களால் பெரிதும் போற்றப்படுகிறது என்பதாகும். மற்றவர்கள் மீது ஏவப்பட்ட ஏவல், பின்னி சூனியங்கள் முதலியவற்றை எடுப்பவர்கள் அவை தங்களைத் திருப்பித் தாக்காமல் இருக்க ஸ்படிகலிங்க வழிபாடு செய்வார்கள்.

ஸ்படிக லிங்க(Crystal Lingam) வழிபாட்டை வீட்டில் நித்திய பூஜையாகவும் செய்து வரலாம். அவ்வாறு பூஜை செய்பவர்கள் லிங்கத்திற்கு பசும்பால், பழச்சாறு, பன்னீர் மற்றும் மஞ்சள் கலந்த நீராலும் அபிஷேகம் செய்து, பூக்கள் கொண்டு பூஜை செய்து, தூப, தீபம் ஆரார்த்தனைகள் செய்து வழிபட்டால் சகல பாவங்களும் விலகி விடுவதாக மகான்களால் சொல்லப்பட்டுள்ளது.

சந்திரனைப் போலவே குளிர்ந்த தன்மையும் கொண்டது. இந்த லிங்கம் கண்ணாடியின் தன்மையை கொண்டுள்ளதால், நம் மனதில் என்ன நினைக்கின்றோமோ, அதை இந்த ஸ்படிக லிங்கமானது பிரதிபலிக்கும் என்றும் கூறுகிறார்கள்.

ஸ்படிக லிங்க வழிபாடு செய்வோருக்கு !(Crystal Lingam)

நாம் என்ன எண்ணத்துடன் அந்த லிங்கத்தை வணங்குகிறோமோ, அதற்குரிய பலனே நமக்கு கிடைக்கும்.

நம் எதிரிக்கு கூட கஷ்டம் வர வேண்டும் என அந்த லிங்கத்திடம் கேட்கக்கூடாது. அவ்வாறு கேட்டால், அது நம்மையே வந்தடையும். எனவே, ஸ்படிக லிங்க வழிபாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.

நமக்கு ஒரு கஷ்டம் என்றால், “”நீ பார்த்துக்கொள்” என்று அந்த கஷ்டத்தையும் அவனிடமே சமர்ப்பித்து விடுங்கள்.

 அப்போது சூரியனிலிருந்து ஏழு வண்ண கதிர்களும் அந்த ஸ்பரிசத்தில் தெரியும் என்பதும் ஒரு சிலரின் கருத்து.

ஸ்படிகத்தை எந்த வடிவில் வைத்திருந்தாலும் வாரம் இரு முறையாவது தண்ணீருக்குள் அந்த ஸ்படிகத்தைக் குறைந்தது 4 மணி நேரம் ஊறவிடவேண்டும், பின்பு அதை அதன் இடத்திலேயே வைக்கலாம்.

அதை அபிஷேக முறையிலும் செய்யலாம். ஸ்படிகப் பாறைகள் வாங்கும் போது விஸ்திரண வடிவில் இருக்க வேண்டும்.

பன்னீர் போன்ற தெளிவான நிறத்தால் உள்ள ஸ்படிகம் தான் பிற தாதுக்களால் கலவை பெறாத உண்மை ஸ்வர்ண ஸ்படிகம் ஆகும்.

ஸ்வர்ண ஸ்படிகத்தின் அடர்த்தி எண் அதிகம். இதனால் இதன் திண்மையும் அதிகம். உருவத்தில் சிறியதாக இருந்தாலும் எடை அதிகமாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *