உடல் எடை குறைக்கும் சீரக தண்ணீர் (Cumin water to lose weight)
உடை எடையை குறைக்க விரும்புவோருக்கு சீரக தண்ணீரை (Cumin water ) மிக சிறந்த வழி.எடை குறைய விரும்புவோர் தங்கள் உணவில் சீரகம் சேர்த்து கொள்வதன் ஆரோக்கிய நன்மைகள் குறித்து ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீரகம் உடலில் உள்ள தளர்வான கொழுப்பு சதைகளை கரைக்க வல்லது.
ஜீரணத்திற்கு உதவுவதிலும், நமது உடல் அமைப்பிலிருந்து தேவையற்ற நச்சுகளை அகற்றுவதிலும் சீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது.
உடலில் உள்ள செரிமான மண்டலம் சீராக இயங்கினாலே போதும், சரியான உடல் எடையை பராமரிக்க முடியும். தேவையற்ற கொழுப்பும் அகற்றப்பட்டு விடும்.
எனவே அன்றாடம் சீரகம் எடுத்து கொள்வதை வழக்கமாக்கினால் எடை அதிகரிப்புபிரச்சனை ஏற்படாது.
சீரகமானது உடலிலுள்ள கொழுப்புகளை விரைவாக கரைக்கும் தன்மை உடையது என்பதால், எடையை குறைக்கும் விரும்பும் ஒருவரின் முயற்சியை ஊக்குவிக்கும்.
சத்தான சுகாதார நன்மைகள் நிறைந்த ஒரு சிறந்த பானம் என்பதால், தேவைப்படும் பட்சத்தில் பல முறை சீரக தண்ணீரை அருந்தலாம்.
விரைவான எடை இழப்புக்கு, சீரக தண்ணீரை ஒரு நாளைக்கு 3 முதல் 4 முறை குடிக்கலாம். காலை வெறும் வயிற்றில் குடிக்கலாம். இரவு உணவிற்குப் பின்னும் பருகலாம்.இது நல்ல செரிமானத்திற்கு உதவும்.
சீரக தண்ணீரில் கலோரிகள் மிகக் குறைவு. ஒரு டீஸ்பூன் ஜீரகத்தில் 7 கலோரிகள் மட்டுமே உள்ளது. எனவே நீங்கள் இந்த சீரகத் தண்ணீரை குடித்தால் உங்கள் தினசரி கலோரி அளவை பற்றி நீங்கள் கவலைப்படாமல் இருக்கலாம்.
அதிக மருத்துவகுணம் கொண்ட முக்கியமான ஒரு பொருள் சீரகம். இதனால் தான் நாம் சீரகத்தை அதிகமாக உணவு தயாரிப்பில் பயன்படுத்துகின்றோம். இதைவிட சீரகத்தண்ணீரில் ஏராளமான நன்மைகள் உள்ளது.
சீரக நீரின் ஏனைய பயன்கள்
- நுரையீரல் மற்றும் கல்லீரல் சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகளை குணப்படுத்த கூடியது.
- உடலில் உள்ள நச்சுகளை நீக்கி சரும ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது.
- செரிமானத்திற்கு உதவி நெஞ்செரிச்சல் போன்ற உபாதைகளை குணப்படுத்த கூடியது.
-
தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து ‘சீரகக் குடிநீர்’(Cumin water) தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை, நாள்முழுவதும் அவ்வப்போது பருகி வர எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர் மூலம் பரவும் நோய்களையும் தடுக்கலாம்.
-
பசியையும் ருசியையும் தூண்டும் தன்மை கொண்டது இந்தச் சீரக நீர் (Cumin water) .வயது வந்தவர்களுக்கு மிகவும் ஏற்றது.
-
அல்சர் நோய் தீர பெருமளவு உதவுகின்றது.
-
சருமம் மென்மையாக, மிருதுவாக ஜொலிக்க சீரக நீர் நன்கு உதவுகின்றது. சீரகத்தில் வைட்டமின் ஈ சத்தும் உள்ளது. அது இளமையை தக்கவைக்க உதவும்.
-
சீரக நீரில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் கூந்தலை வலுவாக்கும். முடியின் வேர்கால்கள் வளர்வதற்கும் உதவும். முடி உதிர்தலையும், முடி இழப்பையும் தடுக்கும்.
-
மலச்சிக்கலை போக்க, சீரகத்தில் உள்ள நார்சத்து உதவும். மலச்சிக்கலால் கஷ்டப்படுபவபவர்கள், சீரக நீரை வெறும் வயிற்றில் குடித்தால், சிறப்பான பலன் கிடைக்கும்.
- அடிக்கடி வயிற்று கோளாறு இருந்தால் வீட்டில் சாதாரணத் தண்ணீருக்குப் பதில் இளம் சூட்டில் சீரகத்தண்ணீர் அருந்துங்கள். வயிற்று கோளாறு விரைவில் காணாமல் போய்விடும்.
- சீரகத்தை கொதிக்கும் நீரில் போட்டு கஷாயம் செய்து கர்ப்பிணிகளுக்கு கொடுத்து வருவது நல்லது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.