கறிவேப்பிலையில் உணவுசெய்முறைகள் (Curry leave recipe)
கறிவேப்பிலையை முக்கிய பொருளாக கொண்டு என்னென்ன சமையல் (Curry leave recipe) செய்யலாம் எனப் பார்ப்போம்.ஏனேனில் நன்மைகள் நிறைந்த கறிவேப்பிலையை நாம் உணவுகளில் ஒரு சிறு பகுதியாக மட்டுமே சேர்க்கின்றோம்.
கறிவேப்பிலை தனக்கென தனித்துவமான மணமும் சுவையும் மட்டுமல்லாது,ஏராளமான மருத்துவ நன்மைகளையும் தன்னுள் கொண்டது. சைவஉணவுகளாக இருந்தாலும் சரி இல்லை அசைவ உணவுகளாக இருந்தாலும் சரி, நாம் தினமும் உண்ணும் உணவில் கட்டாயம் கறிவேப்பிலை இடம் பெறும்.
சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்ட கறிவேப்பிலையை அதிகமாக சேர்த்து சமைத்து சாப்பிடுவோம். அதிக நன்மைகளைப் பெறுவோம்.
பாக்டீரியாவிற்கான எதிர்ப்புச்சக்தி கறிவேப்பிலையில் இருப்பதனால் வயிற்றுப் போக்கிற்கு சிறந்த நிவாரணமாக உள்ளது.
கறிவேப்பிலையிலிருந்து எடுக்கப்பட்ட சாறு அல்லது கறிவேப்பிலையைப் பொடி செய்து (Curry leave recipe) உண்பதனால் வயிற்றுப் போக்கு குணமாகும். மேலும் கறிவேப்பிலை மலச்சிக்கல் பிரச்சினையைச் சமாளிக்கக்கூடிய ஒரு மலமிளக்கியாகவும் பயன்படும்.
கறிவேப்பிலைச் சாறுடன் தேன் கலந்து உட்கொள்வது கூட வயிற்றுப்போக்கு மற்றும் மூலநோய்க்கான மற்று மருந்தாகும்.
கறிவேப்பிலையின் இலை, வேர், பட்டை, தண்டு மற்றும் பூக்களைத் தண்ணீரில் கொதிக்க வைத்துப் பருகினால் வயிற்றில் இருக்கும் அனைத்து விதமான தொந்தரவுகளிலிருந்தும் விடுபட முடியும்.
கறிவேப்பிலை சாதம் செய்முறை(Curry leave recipes)
பலர் உணவில் இருந்து தூக்கி அறியும் கறிவேப்பிலையில் பாஸ்பரஸ், விற்றமின் ஏ, விற்றமின்பி, விற்றமின் – பி2, விற்றமின் சி, சுண்ணாம்பு (கல்சியம்) மற்றும் இருபுச்சத்து, கார்போஹைட்டிரேட், புரதம், தாது உப்புக்கள், அமினோ அமிலங்களான கிலைகோஸைட்ஸ், செரின், அஸ்பார்டிக் அமிலம், அலனைன், புரோலைன் போன்ற எண்ணற்ற சத்துக்கள் உள்ளன.
கறிவேப்பிலையின் மணத்திற்கும் சுவைக்கும் இவைகள் தான் காரணம். இவ்வாறு பல்வேறு சத்துக்களையும் மருத்துவக் குணங்களையும் கொண்ட கறிவேப்பிலை உடலிற்கு பலத்தையும், எலும்புகளுக்குச் சக்தியினையும் அளிக்கிறது.
கறிவேப்பிலை சட்னி செய்முறை (Curry leave chutney recipe)
கறிவேப்பிலை பொடி செய்முறை(Curry leave podi recipe)
- கருவேப்பிலையை நன்கு கழுவி, சுத்தம் செயது, ஒரு சுத்தமான துணியில் பரப்பி, நிழலிலேயே தண்ணீர் இல்லாமல் உலர்த்தவும்.
- எண்ணெய் சூடாக்கி, முதலில் பெருங்காயம், மிளகாய், உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக, மிதமான தீயில் வறுக்கவும்.
- துருவிய தேங்காய் கடைசியாக சேர்த்து, பொன்னிறமாக வறுக்கவும்.
- அடுப்பை நிறுத்திவிட்டு, அந்த வாணலியில் சூட்டிலேயே கருவேப்பிலையை சேர்த்து, இரண்டு முறை வதக்கி, அப்படியே ஆறவிடவும்.
- ஆறிய பின், உளுத்தம் பருப்பு தவிர மற்ற எல்லா பொருட்களையும் சேர்த்து பொடி செய்யவும்.
- கடைசியாக, உளுந்து சேர்த்து, கரகரப்பாக அரைக்கவும்.
கறிவேப்பிலை பொடி வயிற்றுக்கும் உடம்பிற்கும் மிகவும் நல்ல ஒரு பொடி. இதனை, சாதத்தோடு நல்லெண்ணெய் சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும்.
கறிவேப்பிலை குழம்பு செய்முறை (Curry leave gravy recipe)
- 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் கறிவேப்பிலையை சேர்த்து 5-10 நிமிடம் வறுத்து, அத்துடன் பாதி பூண்டை சேர்த்து வறுத்து இறக்கி, குளிர வைத்து தண்ணீர் விட்டு பேஸ்ட் போல அரைக்கவும்.
- பின்னர் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், வெந்தயம், செத்தல் மிளகாய் சேர்த்து தாளித்து, பூண்டு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்ளவும்.
- பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
- அதில் மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்த்து கிளறி, புளிச்சாற்றினை சேர்த்து, உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து, எண்ணெய் தனியாக பிரியும் வரை நன்கு வேக வைக்க வேண்டும்.
- அதில் அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலை பேஸ்ட்டை சேர்த்து கிளறி, எண்ணெய் தனியாக பிரியும் வரை வேக வைக்கவும்.
- இறுதியாக சிறிது எண்ணெய் ஊற்றி, அத்துடன் கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, குழம்புடன் சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான கறிவேப்பிலை குழம்பு தயார் !
கறிவேப்பிலை ரசம்(Rasam recipe)
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கையளவு
பூண்டு – 6 பல்
தக்காளி – 1
கடுகு – 1 ஸ்பூன்
வெந்தயம் – 1/4 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
கொத்தமல்லி – சிறிதளவு
புளி – சிறிய எலுமிச்சை பழ அளவு
உப்பு – தேவையான அளவு
பெருங்காயத்தூள் – சிறிதளவு
எண்ணெய் – 2 ஸ்பூன்
செய்முறை
மிளகு, சீரகம், பூண்டு, தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்து கொள்ளவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம் போட்டு தாளித்த பின்னர் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும்.
அதில் அரைத்த பேஸ்ட் ஊற்றி நன்கு வதக்கி விடவும்.
இதில் கரைத்து வைத்து உள்ள புளியை ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
சூப்பரான கறிவேப்பிலை ரசம் தயார்.
கறிவேப்பிலைச் சாற்றுடன் எலுமிச்சைக் கலந்து உண்பதன் மூலம் குமட்டல் மற்றும் தலைச்சுற்று போன்ற பிரச்சினைகளுக்குக் தீர்வு கிடைக்கும். மேலும் அதிகப்படியானக் கொழுப்பினைக் குறைக்கப் பயன்படுகிறது.
இது ,மாதவிடாய் சிக்கல்கள் மற்றும் வலிகள், தலைச்சுற்று, வயிற்றுப்போக்கு மற்றும் இரத்தம் தோய்ந்த மலநோய் போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணமாக விளங்குகின்றது. கறிவேப்பிலை இலைகளின் நன்மைகளும், செயல் திறனும் இரத்த ஓட்டத்திற்கு நன்மை பயக்கின்றன.
கறிவேப்பிலையை வழக்கமாகச் சாப்பிட்டு வந்தால் மன அழுத்தம், முடி உதிர்தல் போன்றவற்றிலும் இருந்து விடுபடலாம்.
கறிவேப்பிலையை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வோம்.ஆரோக்கியம் காப்போம்!