பிரசவித்த பின் பத்தியக்கறி (Curry with mix of spices)
பத்தியக்கறி (Curry with mix of spices) , இது பிரசவித்தபெண் களுக்கு விசேடமாக தயாரித்துக் கொடுக்கப்படும் உணவு. அதிகமான சரக்குகள் சேர்த்து செய்வதால், இதை சரக்குகறி என்றும் சொல்வார்கள்.
இதில் சேர்க்கப்படும் மஞ்சள், மல்லி ,மிளகு, சீரகம் , பூண்டு, வேர்க்கம்பு போன்றவை பிரசவத்தால் ஏற்படும் வயிற்றுப் புண்ணை விரைவில் ஆற்றி விடும்.
பிரசவத்திற்கு பின், பெண்கள் சாப்பிடக்கூடியவாறு நிறைய உணவுகள் இருக்கின்றன.அதிலும் ஒரு சில உணவுகளில், பெண்களின் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் நிறைய உள்ளன.
அத்தகைய உணவுகளை தினமும் உணவில் சேர்த்து வந்தால், நிச்சயம் பிரசவத்திற்கு பின் சந்திக்கக்கூடிய சில பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.அதற்கு பாட்டிமார் செய்யும்பத்தியக்கறி (Curry with mix of spices)தான் நல்ல மருந்து.
அதை எப்படி செய்வது எனபார்ப்போம்.
குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு மட்டுமன்றி , பூப்படைந்த சிறுமிகளுக்கும், சத்திர சிகிச்சை செய்தவர்களுக்கும் இதை சமைத்து உண்ண கொடுப்பார்கள்.
ஏன் தடிமன்,சளி தொல்லையால் அவதிப்படுவோருக்கும்,பேதி மருந்து சாப்பிட்டவர்குக்கும் இந்த பத்தியக்கறி மருந்தாக பயன்படுத்தப்படும்.
கர்ப்பமாக இருக்கும் போது எப்படி ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியமோ,அதே போல் பிரசவத்திற்கு பின்னும் பெண்கள் சரியான உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஆனால் பிரசவத்திற்கு பின் பெண்களின் உடல் மிகவும் மோசமான நிலையில் இருப்பதால், உடல்நிலையை சரியாக தேற்றுவதற்கு நல்ல ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது மிகவும் இன்றியமையாதது.
ஆரோக்கியத்தை பேணுவதற்காக பழைய காலத்தில் வாரம் ஒருமுறை கட்டாயம் பத்தியக்கறி (Curry making mix of spices) வீடுகளில் சமைத்து ,அனைவரும் உண்பார்கள்.அதாவது உணவாக மருந்தை உண்டார்கள்.
முன்பெல்லாம் குழந்தை பெற்றவர்களுக்கு, பால் சுரப்பதற்காக ‘சரக்குக் கறி’யை தினமும் மதியம் சிறிது குத்தரிசி சாதத்தோடு சாப்பிட கொடுப்பார்கள். ஒரு மாதம் கட்டாயம் இது தான் உணவு.இதனால் உடல் ஆரோக்கியம் பெற்று, அஜீரணம், பித்தக் கோளாறுகள் வாயுத்தொல்லை நீங்கி உடல் நலம் பெறும்.
குழந்தைக் தேவையான பால் கிடைப்பதோடு.குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.

மாமிசம் சாப்பிடுவோர் மீன்களான ஒட்டி, ஓரா,விளைமீன், பால்சுறா, பாரைக்கருவாடு, கோழி இறைச்சி போன்றவற்றுடன் அறத்த மசாலாவை போட்டு கரி சமைத்து சாப்பிடலாம்.
பிரசவித்த பெண்களுக்கு, விராத்துகோழி என்று சிறிய கோழிகுஞ்சுகளில் பத்தியக்கறி சமைப்பார்கள்.
கத்தரிக்காய் பிஞ்சு , முருங்கை பிஞ்சு,வாழைக்காய் பிஞ்சு போன்றவற்றை மீன் கருவாடுகளுடன் சேர்த்து சரக்குகறி செய்யலாம்.
சைவ உணவு உண்பவர்கள், இவற்றை தனியாக அரைத்த மசாலாவை இட்டு செய்து கொள்ளலாம்.
அம்மியில் மிக நன்றாக பசையாக வரும் வரை , கை,இடுப்பு எலும்பு ஓடிய நன்றாக இழுத்து இழுத்து அரைப்பார்கள். ஆனால் இப்போது மிக்சியில் அரைப்பது மிகவும் சுலபம்.ஆரோக்கியமான இந்த கறியை அடிக்கடி செய்து சாப்பிடலாமே!
உப்பு, புளியை பக்குவமாக இட்டு, செய்யும் பத்தியக்கறியின் சுவை, மிக அருமையோ அருமை!