பருப்பு புடலங்காய் பால்கறி (Dahl & snake guard curry)

தனியாக புடலங்காயில் கறி சமைத்தால்  எல்லோரும் விரும்பி உண்ணமாட்டார்கள். இப்படி பருப்புடன் சேர்த்து புடலங்காய்க்கறி (Dahl & snake guard curry) சமைத்து கொடுத்து பாருங்கள் , மணமும் சுவையும் அனைவரையும் சாப்பிட  தூண்டும்.

அதிக உடலுழைப்பு, பல்வேறு காரணங்களால் ஏற்படும் மன உளைச்சல் ஆகியவற்றால் இதயத்துடிப்பும், பெருமூச்சும் ஏற்பட்டு இதயம் பலவீனமடைவது இயற்கையாகும்.

இந்நிலைக்கு ஆளானோர் புடலங்காயை (Dahl & snake guard curry) அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதால் இதயத்துடிப்பு சமநிலை பெறுவதோடு இதயமும் பலம்பெறும்.

அடிக்கடி புடலங்காய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடும் போது இரத்த அழுத்தம் வெகுவாக குறைந்து, இதயம் சம்பந்தமான நோய்கள், பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது.

சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும். குழந்தைகளுக்கு சோற்றுடன் பிசைந்து ஊட்ட  விரும்பி உண்பார்கள்.

ஆரோக்கியமான புடலங்காய் பருப்பு பால்க்கறி செய்யும் முறையை பார்ப்போம்!

இதே முறையில்  மிளகாய்த்தூள் போட்டு பருப்பு புடலங்காய் குழம்பாகாவும் சமைக்கலாம். சாதத்துடன் சேர்த்து உண்ணலாம்.

நமது உடலில் இருக்கும் கல்லீரல் உணவுகளில் இருக்கும் விஷத்தன்மைகளை முறித்து, உடலுக்கு நன்மையை செய்கிறது.

கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க தினமும் நாம் புடலங்காய் கொண்டு செய்யப்படும் பதார்த்தங்கள் சாப்பிட்டு வர கல்லீரலில் படிந்திருக்கும் நச்சுத்தன்மை முற்றிலும் நீங்கி விடும்.

ஒரு மனிதனின் பரம்பரை காரணமாகவும் மற்றும் அவனது தவறான உணவு பழக்கங்களாலும் நீரிழிவு எனப்படும் சர்க்கரைநோய் ஏற்படுகிறது.சர்க்கரைநோய் உள்ளவர்கள் அடிக்கடி புடலங்காய் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுபடுத்துவதோடு, நீரிழிவு நோயாளிகளின், சிறுநீரில் அதிகளவு சர்க்கரை சத்துகள் வெளியேறாமல் தடுக்கிறது.

விட்டுவிட்டு காய்ச்சல் தொடரும் போது அடிக்கடி புடலங்காய் பிஞ்சை ,கறியாக சமைத்து சாப்பிடுவதால் காய்ச்சல் மறைந்து போகும்.

அதிக நீர்ச்சத்துள்ள காரணத்தினால், உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கக் கூடியது இது. வெயில் நாட்களில் புடலங்காயை உண்பதன் மூலம் வெம்மையின் பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம்.

 புடலங்காயை சாம்பார் செய்யும் போதுபாவிக்கலாம். புடலங்காய் வதக்கல் அல்லது பொரியல் பிட்டு, சாதம், இடியப்பத்துடன் சாப்பிட மிக சுவையாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published.