தினமும் ஆப்பிளை ஏன் சாப்பிட வேண்டும்?(Daily an apple)
தினமும் ஆப்பிள்களை (Daily an apple) அப்படியே சாப்பிடும் போது அல்லது உணவுகளில் சேர்த்து போது சுவையாகவோ இருப்பது மட்டுமல்லாமல், அவை ஏராளமான ஆரோக்கிய நலன்களை நமக்கு தருகின்றன.
நடுத்தர அளவிலான ஆப்பிள் நார்ச்சத்துக்கான நல்ல மூலமாகும்: இதில் 4.8 கிராம் ஊட்டச்சத்து உள்ளது. அதே ஆப்பிள் விற்றமின் சி இன் நல்ல ஆதாரமாகவும் உள்ளது.
இது 9.2 மில்லிகிராம்களை வழங்குகிறது. சிறிய அளவு மற்ற விற்றமின்கள் மற்றும் தாதுக்கள்.
எளிதில் கரையக் கூடிய பெக்டின் என்னும் நார்ச்சத்து ஆப்பிளில்(Daily an apple) உள்ளது. இது உடலிலுள்ள மோசமான கொலஸ்ட்ரால்களை வெகுவாகக் குறைக்கிறது. இதனால் பலவிதமான இதய நோய்களும் குறைகின்றன.
மேம்பட்ட குடல் ஆரோக்கியம் மற்றும் பக்கவாதம், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய், உடல் பருமன் மற்றும் சில புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைப்பது உட்பட பல ஆரோக்கிய நன்மைகளுடன் ஆப்பிள் தொடர்பு பட்டுள்ளது.
ரத்த அழுத்தம் அதிகரிக்காமல் தடுக்கிறது. மூளைக்கு மிகுந்த சக்தியளிப்பதால், மூளைக்கு அதிக வேலை கொடுப்பவர்கள், சிந்தனையாளர்கள், மாணவர்கள் ஆகியவர்களுக்கு நல்ல நினைவாற்றல் கிடைக்கிறது.
ஆப்பிளில் உள்ள விற்றமின்-சி, நமக்குத் தேவையான நோயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. ஆப்பிள் பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வருவதால், கண்களில் ஏற்படும் புரைகளைத் தவிர்க்க முடியும்.
சிறிது காலம் தொடர்ந்து ஆப்பிள் பழம் சாப்பிட்டு வந்தால் கீல் வாதம், இடுப்புச் சந்து வாதம், துடைவாதம், நரம்பு சம்மந்தப்பட்ட சகல வாதங்களும் படிப்படியாகக் குறைந்து பூரண குணம் ஏற்படும்.
ஆப்பிளை அப்படியே சாப்பிடுவதாலும், ஜூஸாக்கி சாப்பிடுவதாலும் உடல் எடை குறைகிறது. ஆப்பிளில் உள்ள சில ஊட்டச்சத்துக்கள் நம் உடலில் உள்ள எலும்புகளைப் பாதுகாப்பதில் வல்லவை. எலும்புகளின் அடர்த்தியையும் அதிகரிக்கின்றன.
ஆப்பிளில் உள்ள கொலாஜன் மற்றும் எலாஸ்ட்டின் ஆகியவைஅழகுக்கு அழகு சேர்த்திட (Beauty tips) சருமத்தைப் பளபளப்பாக வைக்க உதவுகின்றன.
ஆப்பிள் பழத்தை சாப்பிடுவதால் என்ன பயன்கள்?(Daily an apple)
1. ஆப்பிள்கள் அதிக கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.
2. நார்ச்சத்து உள்ள உணவுகளை சாப்பிடுவது செரிமானத்திற்கு உதவும்.ஆப்பிள்களில் நார்ச்சத்து அதிகம்.
3. ஆப்பிள்கள் ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்கும்.
4. ஆப்பிள்கள் நீரிழிவு நோய்க்கு உகந்த பழம்.
5. ஆப்பிளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் புற்றுநோயைத் தடுப்பதில் பங்கு வகிக்கலாம்.
6. ஆப்பிள் சாப்பிடுவது ஆரோக்கியமான எடை இழப்புக்கு துணைபுரியும்.
7. ஆப்பிள்கள் அல்சைமர் நோயைத் தடுக்க உதவும்.
8. ஆப்பிள்கள் உங்கள் குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
ஆப்பிளில் உள்ள பாலிபினால்கள் மூளையை அல்சைமர் மற்றும் நரம்பியல் கடத்திகள் நோய்களில் இருந்து காக்கிறது. வயது தொடர்பான நினைவாற்றல் இழப்பில் இருந்து காக்கிறது.
ஆப்பிள் ஜூஸ் ஃபோலேட் குறைப்பாட்டை சரி செய்கிறது. இது அல்சைமர் நோயைத் தூண்டும் புரதங்களின் செறிவைக் குறைக்கிறது. நரம்பியக்கடத்தியான அசிடைல்கொலின் அளவை இந்த ஜூஸ் பராமரிக்கிறது.