40 வயதுகளில் வரும் ஆபத்தான நோய்கள் (Dangerous diseases in 40s)
40முதல் 60 வயது வரையிலான பருவம் மனித வாழ்க்கையில் மிக முக்கியமானது. இந்த காலக் கட்டத்தில்தான் உடலில் பலவிதமான மாற்றங்கள் ஆரம்பிக்கும்.நோய்கள் எல்லாம் (Dangerous diseases in 40s) மனிதர்களைத் தேடி வரும்.
என்னென்ன நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் (Dangerous diseases in 40s)?
- சர்க்கரை நோய்
- தூக்கமின்மை
- மன அழுத்தம்
- முதுகெலும்பு தேய்மானம்
- இதய நோய்
- உடல் எடை அதிகரிப்பு, அதிக அளவில் கொழுப்பு சேருதல்
- உயர் இரத்த அழுத்தம்
- எலும்பு மூட்டு நோய்கள்
- சுவாசபைகள் தொடர்பான நோய்கள்
- அல்சர்,சிறுநீரக்கற்கள்,புற்று நோய்
சர்க்கரை நோய்
ஆரோக்கியமற்ற உணவு பழக்கம், போதிய உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது,மன அழுத்தம் போன்றவையே சர்க்கரை நோய் வர காரணம். பெற்றோருக்கு சர்க்கரை நோய் இருந்தால் மரபு வழியாக பிள்ளைகளுக்கு சர்க்கரை நோய் ஏற்படுகிறது. அதிக உடல் எடை இருந்தால் அதுவும் சர்க்கரை நோய் வர காரணமாகிறது.
மனஅழுத்தம்
இந்த வயதுகளில் பிள்ளைகள் தொடர்பான பெரிய பொறுப்புகுகள் வந்து சேரும். ஐம்பது வயதைத் தொடும் போது (Dangerous diseases in 40s) சிலருக்கு திருமண வாழ்க்கையில் ஏற்படும் சலிப்புகள் கூட மன அழுத்தத்தை தரும்.
குடும்ப நிலைகளில் ஏற்படும் மாற்றம்,அதாவது உயர்கல்வி, திருமணம், வேலை நிமித்தம் பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியேறுவதால், தனிமையை அனுபவிக்கும் நிலையாலும் மன அழுத்தம் ஏற்படுகின்றது.
இதயம் சம்பந்தமான நோய்கள்
இந்த வயதில் இதய நோய் உருவாக ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. மன அழுத்தம், உடல் எடை, சர்க்கரை நோய் போன்றவை இருந்தாலும் இதயம் பாதிக்கும்.
பெண்கள் 45 வயதைக் கடக்கும்போது மாதவிடாய் நிற்கும் காலகட்டத்தை(Monopus) அடைகிறார்கள். அப்போது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் உற்பத்தி நின்றுவிடும். அந்த காலக்கட்டத்தில் அவர்களுக்கு இதய நோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
புகையிலை பயன்பாடு, புகைப்பிடிக்கும் பழக்கம் போன்றவை இருந்தாலும் இதயபாதிப்பு மிக அதிகமாகும்.
உடல் எடை ஏன் அதிகரிகின்றது
நாற்பது வயதுக்கு மேல் இளமை விடைபெற்று முதுமை வரத் தொடங்குவதால், இயல்பாகவே உடல் உழைப்பு குறைந்துவிடுகிறது.
உடல் உழைப்பு குறையும் அதே நேரத்தில், உடற்பயிற்சி, விளையாட்டுகளில் உள்ள ஆர்வம் போன்றவைகளையும் இந்த பருவத்தில் குறைத்து விடுகிறார்கள்.
அதிகமான நேரம் உட்கார்ந்த நிலையில் வேலை பார்ப்பாதாலும் உடல் பருத்துவிடுகிறது.
நோய்கள் வராமல் இருக்கவும், வந்த நோய்களை குணப்படுத்தவும் யோகாசன பயிற்சிகளே மிக சிறந்தவை.உடலுக்கு மட்டுமல்லாது ஆன்மாவிற்கும் நல் ஆரோக்கியம் கொடுக்கக் கூடியது.இதனால் யோகாசானங்களைப் பழகி செய்து வரலாம்.
அதிக கொழுப்பு சேரக் காரணம்
சர்க்கரை நோய் போல் இதுவும் மரபு வழியாகத் தோன்றுகிறது. உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது. அசைவ உணவுகள் அதிகம் சாப்பிடுவது போன்றவற்றால் கொழுப்பு அதிகம் உடலில் சேருகிறது.ஏனெனில் அசைவ உணவுகளில் உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கொழுப்பு உள்ளது. காய்கறிகளை உணவுகளில் சாப்பிடுவது உடலுக்குஅதிக நலனைத் தரும்.
உயர் ரத்த அழுத்தம்
தற்போதைய மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை. அதிகரிக்கும் உடல் எடை, பெரும்பாலான நேரம் ஏசி. அறையிலேயே உட்கார்ந்து வேலை பார்ப்பது, சரியான உடற்பயிற்சி இன்மை போன்றவற்றால் உடலிலிருந்து வியர்வை வெளியேறாது.
உடலில் வியர்வை தோன்றினால் ,அதனுடன் உடலில் இருக்கும் உப்பு வெளி யேறும். வியர்வை தோன்றாமலே இருந்தால் உப்பு உடலிலே தங்கி, ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.
முதுமை தொடங்கும் போது மூட்டுவலி
வயது ஆக இயல்பாகவே உடலில் கல்சியம், D விற்றமின் போன்றவற்றைக் உள்ளெடுக்கும் தன்மை குறைகிறது.இதனால் எலும்புகளுக்கு தேவையான சத்துக்கள் குறைந்து,எலும்புகள் தேய்மானமாகி மூட்டு நோய்கள் ஏற்படுகிறது.
அதோடு வயதாகும்போது உண்பது, உறங்குவது என்று வாழ்க்கையை அமைத்துக் கொள்வதாலும், உடல் உழைப்பு இல்லாமல் போய் மூட்டுக்களில் வலி ஏற்படுகிறது.
உடல் இயக்கம் குறையும் போது, மூட்டு சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படத் தொடங்குகின்றன.
சுவாசபைகள் சம்பந்தமான நோய்கள்
நமது உடலில் உள்ள முக்கியமான பாகங்களில் நுரையீரலும் ஒன்று. இதில் உள்ள மூச்சுப் பைகளே சுவாசத்தில் பங்கு வகிக்கின்றன. நுரையீரலில் ஏற்படும் பாதிப்புகள் உயிராபத்தை ஏற்படுத்தக் கூடியவை.
குறிப்பாக புகை பிடிக்கும் பழக்கமும், சுற்றுச்சூழல் மாசுகளும் நுரையீரலை அதிகமாக பாதிக்க வாய்ப்புகள் உள்ளன.
நுரையீரல் புற்று நோய் , நெஞ்சு சளி, சுவாசக் கோளாறுகள், மூச்சுத் திணறல் போன்ற வியாதிகள் ஏற்படுகின்றன.
40-60 வயதில் கழுத்து எலும்பு தேய்மானம், டென்ஷன் ,தலைவலி, வயிற்று எரிச்சல், ஜீரணக் கோளாறு, மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகள் ஏற்படத் தொடங்கும்.
அசைவ உணவுகள் அதிகம் சாப்பிடுவதைக் குறைத்து இயற்கையுணவுகளாகிய பழங்கள்,காய்கறிகளை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
சீரான உடற்பயிற்சி, சிறிது நேர யோகப்பயிற்சி, தினமும் நடைப்பயிற்சி போன்றன எந்தவிதமான ஆபத்தான நோய்களையும் அண்டவிடாது உங்களைப் பாதுகாக்கும்.
தனியாக செய்வதை விட, குழுக்களாக ஏனையவர்களுடன் சேர்ந்து பயிற்சிகளை மேற்கொள்வது எளிதாகவும், தொடர்ந்து செய்யக் கூடியதாகவும், நல்ல விளைவுகளையும் கொடுக்கும்.
ஆரோக்கியமான உணவு உடற்பயிற்சிகள் எந்த வயதிலும் ஆரோக்கியத்தைக் கொடுக்கும்!