கண்ணில் கருவளையம் மறைய (Dark eye circle)

கண்ணிலுள்ள கருவளையம் (Dark eye circle) முகத்தின் அழகையே கெடுத்து விடும். அவற்றைப் இலகுவாக  போக்க வீட்டில் செய்யக் கூடிய சில இயற்கை குறிப்புகள்.

  • ஒரு ஸ்பூன் தக்காளிசாறுடன் ஒன்றரை ஸ்பூன் எலுமிச்சைசாறு கலந்து கருவளையத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும். ஒரு சில வாரங்களில் கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
  • வெள்ளரிக்காயை வெட்டி கண்ணில் வைத்து கண்களுக்கு ஓய்வு கொடுத்தால் கருவளையம் (Dark eye circle) மறையத் தொடங்கும்.
remove dark circle under eye,dark eye circle,annaimadi.com,beauty tips
  • உருளைக்கிழங்கு அரைத்து சாறு எடுத்து பஞ்சில் தொட்டு கண்ணனுக்கு அடியில் தடவ வேண்டும்.

          15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரினால் கண்களைக் கழுவ வேண்டும்.

          ஒரு சில வாரங்களில் கண் கீழ் கருவளையம் மறைந்து நல்ல பலனைப் பெறலாம்.   

  • பாதாம் எண்ணையை கண்ணுக்கு அடியில் கருவளையம் இருக்கும் இடத்தில் தடவி வந்தால் கருவளையம் மறையும்.இரவில் பாதாம் எண்ணெய் ( Almond Oil for skin ) பூசிக்கொண்டு மறுநாள் காலையில் எழுந்தவுடன் குளிர்ந்த நீரினால் கண்களைக் கழுவ வேண்டும்.       
  • சோற்றுகற்றாழையின் தோலையும் முள்ளையும் அகற்றிவிட்டு அதன் ஜெல்லை எடுத்து கண்களுக்கு அடியில் மசாஜ் செய்து பிறகு சுத்தமான பஞ்சினால் துடைத்து எடுத்து வந்தால் கருவளையம் மறையும்.
remove dark circle under eye,dark eye circle,annaimadi.com,beauty tips
  • சுத்தமான தேங்காய் எண்ணெயை பஞ்சில் தொட்டு கண்ணுக்கு அடியில் மசாஜ் செய்து வந்தால் நாளடைவில் கண் கருவளையம் மறையும்.
  • தேனை கண்ணுக்கு கீழ் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவி வந்தால் கருவளையம் மறையும்.
  • எலுமிச்சை சாறை பஞ்சில் நனைத்து கண்ணுக்கு அடியில் ஒற்றி எடுக்க வேண்டும். தினமும் இதை செய்து வந்தால் கருவளையம் மறையும்.
remove dark circle under eye,dark eye circle ,annaimadi.com,beauty tips
  • புதினாவை அரைத்து அந்த விழுதை கருவளையத்தில் தடவினால் கருவளையம் மறையும்.
  • குளிர்ந்த பாலில் பஞ்சை நனைத்து கண்களில் 15 நிமிடங்கள் வைத்து எடுத்தால் கருவளையம் மறையும்.

                                                                                      

சந்தைகளிலும் தரமான கருவளையத்தை போக்க (Dark Eye Circle Remover ) உதவும்  பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றது.    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *