அழகு முகத்தில் கரும்புள்ளிகளா? (Dark spots in face)
மிகவும் சுலபமான முறையில் நீக்கிவிடலாம்!
கரும்புள்ளிகள் (Dark spots in face) இருந்தால் முகத்தில் அழகே கெட்டு விடும். என்னதான் பல பொருட்களை பயன்படுத்தினாலும் இந்த கரும்புள்ளிகளுக்கு நிரந்தர தீர்வு கிடைப்பது கடினமே.
ஆனால், நம்ம பாட்டி காலத்து இயற்கை வைத்தியம் முறை ,உங்கள் கரும்புள்ளிகளை முற்றிலுமாக நீக்குகிறது.செய்து பாருங்கள்.
தேவையனாவை இரண்டே இரண்டு பொருட்கள் மட்டுமே.
கொத்தமல்லி தழை ,மஞ்சள் தூள்!

முதலில் கொத்தமல்லி தழையை நன்கு அரைத்து கொள்ளவும். பின், அதில் மஞ்சள் தூள் 2 டீஸ்பூன் கலந்து முகத்தில் பூசி இரவு முழுவதும் அப்படியே விடவும்.அடுத்த நாள் காலையில் இதனை குளிர்ந்த நீரில் கழுவவும்.
கொத்தமல்லியும் மஞ்சளும் முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி, கரும்புள்ளிகளுக்கு (Dark spots) விடை தரும்.
இதை வாரம் இரு முறை செய்து வர முற்றாக இல்லாமல் போய்விடும்.
- பாதாம் எண்ணெய்யுடன் தேன் கலந்து, நன்றாகக் குழைத்து முகத்தில் பூசி வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி, முகம் பிரகாசமாகும்.
- வெந்தயக்கீரையை நன்கு பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவேண்டும். அதனை முகத்தில் தடவி, சிறிதுநேரம் காயவைத்து, பிறகு கழுவவேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், விரைவில் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கி விடும்.
- இலுப்பை இலையை ,மைபோல் அரைத்து இரவில் பூசி, காலையில் கழுவி வர ,கரும்புள்ளிகள் நீங்கி முகம் பளபளப்பாகும்.
- ஜாதிக்காயை அரைத்து முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து கழுவி வர, கரும்புள்ளிகள்இல்லாமல் போகும்.
- இரண்டு டேபிள் ஸ்பூன் தயிரை, ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன் கலந்து, தடவி வந்தால், கரும்புள்ளிகள் விரைவில் அகன்றுவிடும்.
- உருளை கிழங்கை வெட்டி கரும்புள்ளிகள் மீது தேய்த்து வர கரும்புள்ளிகள் மறையும்.
- மஞ்சளுடன் கருவேப்பிலை சாறு ,முகத்தில் தடவி வர கரும்புள்ளிகள் மறையும்.
- பாதாம் பருப்பு பொடி 1/2 ஸ்பூன், கடலைமாவு 1 ஸ்பூன் ,எலுமிச்சை சாறு 1/2 ஸ்பூன் மூன்றையும் கலந்து பசை போல் செய்து முகத்தில் தடவி 1/2 மணி நேரம் ஊறவைத்து கழுவி வர கரும்புள்ளி, வடுக்கள் மறைய ஆரம்பிக்கும்.