சுவையான பேரீச்சம்பழ லட்டு (Tasty Dates laddu)

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு பழம் பேரீச்சம்பழம் ஆகும். பேரீச்சம்பழத்தில் லட்டு (Dates laddu) செய்து கொடுங்கள்.அதிகமாக விரும்பி சுவைப்பார்கள்.

மிகவும் சுவையான லட்டு. கூடவே அதிக சத்தும் நிறைந்தது.

வளரும் குழந்தைகளுக்கு நிறைந்த ஆரோக்கியம் கொடுக்கும்.

மெலிந்த குழந்தைகள் பருமன் ஆகுவதற்கு பேரீச்சம்பழம்  அல்லது பேரீச்சம்பழ லட்டு சாப்பிட்டு வந்தால் போதும். நிச்சயம் குண்டாகலாம்.

ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் பேரீச்சம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது. சூரிய சக்திகள் அனைத்தையும் தன்னுள்ளே கொண்டது  இந்த பேரீச்சம் பழம்.

இந்த பழத்தில் இரும்புச்சத்து, கல்சியம், வைட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் வைட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன.பேரிச்சம்பழத்தில் கொழுப்புக்கள் மிகவும் குறைவு.

பேரீச்சம்பழத்தில் உள்ள கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்துக்களுடன், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும் உள்ளதால், இதனை தினமும் உட்கொண்டு வந்தால் செரிமான மண்டலத்தின் செயல்பாடு ஆரோக்கியமாகி, செரிமான பிரச்சனைகள் ஏற்படுவது தடுக்கப்படும்.

இந்த லட்டை உடனடியாக நினைத்த நேரத்தில் செய்திடலாம்.

பேரீச்சம்பழ லட்டு (Dates laddu) செய்வது எப்படி என பார்ப்போம்.

பேரீச்சம்பழம் உடலின் ஆற்றலை மேம்படுத்தும். ஏனெனில் இதில் இயற்கை சர்க்கரைகளான குளுக்கோஸ், சுக்ரோஸ் மற்றும் புருக்டோஸ் போன்றவை நிறைந்துள்ளன.

அதிலும் தினமும் பேரிச்சம் பழத்தை பாலுடன் சேத்து உட்கொண்டு வந்தால், உடலின் சோம்பேறித்தனம் நீக்கப்பட்டு, உடலின் ஆற்றல் அதிகரிக்கும்.

பேரீச்சம்பழத்தில் சோடியம் குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் இருப்பதால், இதனை உட்கொண்டால், நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

பேரீச்சம்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறையும்.

மலச்சிக்கலால் அவஸ்தைப்படுபவர்கள், பேரிச்சம் பழத்தை இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீருடன் பேரிச்சம்பழத்தை உட்கொண்டு வந்தால், மலச்சிக்கல் நீங்கும்.

பேரீச்சம்பழத்தில் உள்ள இனிப்பு  (Dates sugar) இயற்கையானது. இதை சாப்பிடுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது.சர்க்கரைநோய் உள்ளவர்களும் இந்த லட்டை சாப்பிடலாம்.

Check Price

விற்றமின் ‘ஏ’ குறைவினால் தான் கண்பார்வை மங்கலாகும். இதைக் குணப்படுத்த பேரீச்சம்பழமே சிறந்த மருந்தாகும். மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பேரீச்சம்பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும். இதனால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

பொதுவாக பெண்களுக்கு அதிக கல்சியம் சத்தும், இரும்புச் சத்தும் தேவை. மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கால் இத்தகைய சத்துக்கள் குறைகின்றன. இதை நிவர்த்தி செய்யவும், ஒழுங்கற்ற மாத விலக்கை ஒழுங்குபடுத்தவும் பேரீச்சம்பழம் மருந்தாகிறது.

மெனோபாஸ் அதாவது 45 வயது முதல் 52 வயது வரை உள்ள காலகட்டத்தில் மாதவிலக்கு முழுமையடையும். அப்போது பெண்களின் எலும்புகள் பலவீனமாக இருக்கும். மேலும் கை, கால் மூட்டுகளில் வலி உண்டாகும். இதனை சரிசெய்ய, பேரீச்சம்பழத்தை உணவில் ,சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published.